Thursday, October 6, 2011

ஸ்டீவ் ஜொப்ஸ், ஐபோன், கிண்டில் பாயர், முப்பொழுதும் உன் கற்பனைகள் - கும்பளிங் கும்பளிங் 06/10/2011

ஸ்டீவ் ஜாப்ஸ்.
ஒரு ஆளுமைக்கு பிரியாவிடை: 
ஸ்டீவ் ஜொப்ஸ் அதுதாங்க ஆப்பில் காம்பெனியின் ஸ்தாபகரும் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரியும் (CEO)ஆ இருந்து சில நாட்களுக்கு முன்னாடி ஓய்வு பெற்றாரே, அவுரு நேற்று (புதன்கிழமை)  இறைவனடி எய்தினார். ஆப்பில் காம்பெனியின் தயாரிப்புகள் பற்றியும் அவற்றுக்கு உள்ள மவுசு பற்றியும் உங்களுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கும், அத்தனைக்கும் காரணமான ஒரு மிகப்பெரும் ஆளுமை.  நவீன உலகின் லியனாடோ டாவின்சி என வர்ணிக்கப்பட்ட ஒருவர். இனிமேல் அவரது சேவையும் ஆற்றலும் நமக்கு என்றைக்குமே கிடைக்கபெறாவிட்டாலும், தொழில்நுட்ப உலகின் ஒரு மிகப்பெரும் ஆளுமைக்கு நமது மரியாதையும் செலுத்திக்கொள்வோம். 2005 ஆம் ஆண்டு உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களுள் ஒன்றான ஸ்டான்பெர்ட் பல்கலைக்கழகத்தில் அவர் ஆற்றிய உரையினை நேரமிருந்தால் கேட்டுப்பாருங்கள்.     


iPhone 4S

என்னதான் இருந்தாலும் இந்தவாரம் ரொம்பவே எதிர்பார்த்து ஏமாந்து போனது இந்த ஆப்பில் காறங்ககிட்டதான். ஐபோன் 5 அறிவிப்பாங்கன்னு நெனச்சி பார்த்திட்டு இருந்தா அவங்க ஐபோன் 4S அப்புடின்னு போட்டு நெறயப்பேர ஏமாத்திட்டாங்க, ஆனா இனிமே ஐபோன் வாங்குற பசங்களுக்கு செம கொண்டாட்டம், அதாவது ஐபோன் வாங்கினா ஒரு என்றும் பதினாறு பெர்சனல் செக்ரட்டரி இலவசமாம். "சிரி"ன்னு பேரு, உங்களுக்கு போரடிச்சா அந்த பொண்ணுகூட ஹாயா பேசிக்கிட்டு இருக்கலாம். நீங்க கேக்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லும், இனிமே நிரூபன் சாருக்கு எத்தன வயசின்னு நாம மண்டைய பிச்சுக்க தேவையில்ல, சிறிகிட்ட கேட்டா சொல்லிடுவா. அத விடுங்கங்க, நான் இன்னிக்கி குடை கொண்டுபோகனுமா? அப்புடின்னு கேட்டா காலநிலைய சரி பார்த்து மழை பெய்யுமா பெய்யாதான்னு சொல்லிடுவான்னா பாத்துக்கங்களேன். விக்கிபீடியா மற்றும் வூல்பார்ம் அல்பா துணையோட உங்களுக்கு வாற பொது அறிவு சந்தேகங்கள்ள இருந்து விஞ்ஞானம், கணிதம் வரைக்கும் எல்லா சந்தேகத்தையும் தீர்த்து வைப்பா. இனிமே எந்த பொண்ணுங்களும் நீ ஐபோனையே கட்டிக்க அப்புடின்னு திட்ட முடியாது, அடுத்த பதிப்புல அந்த அப்சனும் வந்திடும்னுதான் தோணுது.


ஆப்பில் நம்மள ஏமாத்தினாலும் அமேசான் நம்மள கைவிடல, அவங்களோட கிண்டில்  ஈ-ரீடர், புதிய வரிசய அறிவிச்சிருக்காங்க. இலத்திரனியல் மை தொழில்நுட்பத்துல வெளிவந்து சக்க போடு போட்ட ஈ-ரீடர் இப்போ டச் ஸ்க்ரீன் தொழில்நுட்பத்தோட மின்னுது. அது இல்ல இப்ப மேட்டர், அவங்க வரிசையில   கிண்டில் பாயர் அப்புடின்னு ஒரு கலர் ஸ்க்ரீன் மல்டி டச் அன்ட்றாய்ட்  டேப்லெட்  இருக்கு. இது நெறைய டேப்லெட் கம்பனிகளுக்கு பீதிய கெளப்பி விட்டிருக்கு. கிண்டில் புத்தகங்கள் மட்டுமல்ல, pdf, doc முதலிய வற்றையும் வாசிக்கலாம், இசை, வீடியோ உள்பட சில்க் வெப் பிரௌசெர்,  அன்ட்றாய்ட் ஆப்ளிகேசன்ஸ், கேம்ஸ் என பல வசதி இருக்கு. ஈ-ரீடர் எங்குரத தாண்டி இது ஒரு முழு டேப்லெட். விலையும் ரொம்ப கம்மியா இருக்கறதால டேப்லெட் சந்தைய ஒரு கலக்கு கலக்கும்னு நிபுணர்கள் எதிர்பார்குறாங்களாம். என்ன ஒரு குற, மெமெரி கொஞ்சம் போதாது, 8GB. என்னதான் சொல்லுங்க ஐபாடுக்கு ஒரு போட்டி ரெடி.      


கடந்த ரெண்டு வாரமா, ஒளியைவிட வேகமா பயணிக்கற துணிக்கைகள் அப்புடின்னு முகப்புத்தகத்த நாறடிச்சுட்டாங்க, அப்புறமாதான் அது என்னன்னு பாக்கலாமேன்னு ஐன்ஸ்டைன் சார்புத்தத்துவத்த கூகிள் கிட்ட கேட்டோம். அதுவும் கான்செப்ட் அப் சைமல்ட்டேனிட்டி அப்புடின்னு என்னமோ காட்டிச்சு. அது என்னன்னா நேரம்ங்குறது நிலையானது இல்ல, பாக்குறவன் கண்ண பொறுத்து வேறுபாடும் அப்புடிங்குரதுதான். அதாவது, ஒரு ஓடுற ட்ரைன்ல முனாடியும் பின்னாடியும் ஒரே நேரத்துல ஒரு மின்னல் தாக்குதுன்னு வைங்க, ட்ரைன்ல இருக்கறவங்களுக்கு  முன்னாடி தாக்கினது முதல்ல தாக்கினதாவும் பின்னாடிதாக்கினது சற்று நேரம் கழிச்சு தாக்கினதாவும் தோணுமாம். வெளில இருந்து பாக்குறவங்களுக்கு ரெண்டுமே ஒரே நேரத்துல தாக்கினதா தோணுமாம். இது ரெண்டுல எது உண்மைன்னு கேட்டா, ஐன்ஸ்டைன் ரெண்டுமே உண்மைன்னு சொல்றாரு. ஏன்னா பூமி கூட சுத்திக்கிட்டுதான் இருக்கு, அப்போ பூமிக்கு வெளில இருந்து பாக்குற ஒருவருக்கு அது வேற மாதிரி தெரியும், ட்ரைனுக்கு எதிர்த்திசையில ஓடுறவருக்கு அது வேற மாதிரி தெரியும், பாக்குறவங்க பார்வைய பொறுத்து சம்பவம் வேறுபாடும். இதுதான் சரியானதுன்னு ஒன்னு இல்ல, அவரவர் பார்வை கோணத்த பொறுத்துதான் இருக்கு அப்புடிங்குரதுதான் அந்த "கான்செப்ட் அப் சைமல்டைனிட்டி". அட இதைத்தானே நம்ம மகாபாரதமும் சொல்லுது. "கர்ணன் நகர்வலம் போனப்போ பாக்குறவனெல்லாம் நல்லவனா தெரிஞ்சான், துர்யோதனனுக்கு எல்லாருமே கெட்டவனா தெரிஞ்சான்" அப்புடின்னு. மகாபாரத காலத்துலேயே இந்தியர்கள் சார்புத்தத்துவம் தெரிஞ்ச்சு வச்சிருந்திருக்காங்கப்பா.

இன்னிக்கி எல்லாமே ரொம்பவே சீரியஸ் மொக்கையா இருக்கேன்னு கடுப்பாகிடாதீங்க, இருக்கவே இருக்காரு நம்ம ஜீவீ பிரகாஷ். முப்பொழுதும் உன் கற்பனை படத்துல இருக்கற "ஒரு முறை" பாடல் கேட்டுட்டீங்களா? இல்லன்னா கேட்டுக்கங்கோ இதோ.. உங்களுக்காக முதல் முறையா.. Akkon குரலில்.


தமிழில் கேட்க விரும்புபவர்களுக்கு : முப்பொழுதும் உன் கற்பனை : ஒரு முறை

மின்னல்கள்  கூத்தாடும் மழைக்காலம் பாடலுக்கு அப்புறம் மறுபடியும் akkon தயவில் இன்னொரு பாட்டு. இதுக்கும் மேல இந்த ஆள நம்புறதுக்கு நாம என்ன மாங்காயா இல்ல மடையனா. ஆமா நமக்கு ஒரு டவுட்டு, இதுக்கு காபி பேஸ்ட் பாட்டுன்னு சொல்லலாமா?


டிஸ்கி: ஸ்டீவ் ஜொப்ஸ் பற்றிய தகவல் கடைசி நேர இணைப்பு, அவரது சேவைகள் பற்றி பின்னர் ஒரு பதிவில் பார்போம். 


டிஸ்கி: வேல கொஞ்சம் ஓவரானா இப்புடியும் உங்க உசிர எடுக்க தோணும்.. அடுத்த வாரம் ஜாலியான மொக்கைகளோட சந்திப்போம். 






         

42 comments:

  1. rip steve job neriya panni irukinga adutha piravi eduthu vanga

    ReplyDelete
  2. mokka rsu maama itha g.v prakash ku tweet panni vidunga

    ReplyDelete
  3. புட்டி பாலு என்னமோ சொல்லி இருக்கீங்க? ஐபாட்ன்னு... ஒன்னும் புரியல... நாம அந்த அளவுக்கு வளரல... ஹி..ஹி...

    ReplyDelete
  4. எனக்கு ஐபாட்-லாம் வேண்டாம்

    ReplyDelete
  5. //"கர்ணன் நகர்வலம் போனப்போ பாக்குறவனெல்லாம் நல்லவனா தெரிஞ்சான், துர்யோதனனுக்கு எல்லாருமே கெட்டவனா தெரிஞ்சான்" அப்புடின்னு. மகாபாரத காலத்துலேயே இந்தியர்கள் சார்புத்தத்துவம் தெரிஞ்ச்சு வச்சிருந்திருக்காங்கப்பா.//

    சூப்பர்யா..ஐன்ஸ்டீனுக்கும் இந்திய ஞான மரபு மேல ஒரு இது உண்டு!

    ReplyDelete
  6. // இதுக்கும் மேல இந்த ஆள நம்புறதுக்கு நாம என்ன மாங்காயா இல்ல மடையனா. ஆமா நமக்கு ஒரு டவுட்டு, இதுக்கு காபி பேஸ்ட் பாட்டுன்னு சொல்லலாமா? //

    அப்போ கன்ஃபார்மா ஹிட் தான்.

    மின்னல்கள் கூத்தாடும்...சூப்பர் சாங்..’ஒரிஜினல்’ வாழ்க..

    ReplyDelete
  7. பாவனா-வை எங்கேய்யா?

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. இதான் சீரியஸ் மொக்கையோ சூப்பர் பாஸ்..

    ReplyDelete
  10. இதான் சீரியஸ் மொக்கையோ சூப்பர் பாஸ்..

    ReplyDelete
  11. இதான் சீரியஸ் மொக்கையோ சூப்பர் பாஸ்..

    ReplyDelete
  12. அருமையாக இருந்தது!இருக்கிறது!இருக்கும்!அது போகட்டும் நிரூபனுக்கு எத்தன வயசானா உங்களுக்கென்ன?அவரு இனிமே தான் "பொண்ணு" பாத்து கட்டணும்!அவரு பொண்ணு தான் பாக்கிறாரு!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!

    ReplyDelete
  13. இந்த நூற்றாண்டின் எடிசன் இழப்பு பெரிய இழப்பு...வெகு சிலருக்குத்தான் Technology,Art,Innovation மூன்றையும் சேர்க்க தெரியும்...
    அவர் ஒரு மொசார்ட் + எடிசன் + டாவின்சி...RIP

    ReplyDelete
  14. //
    வேல கொஞ்சம் ஓவரானா இப்புடியும் உங்க உசிர எடுக்க தோணும்.. அடுத்த வாரம் ஜாலியான மொக்கைகளோட சந்திப்போம். //

    வாங்க காத்திருக்கோம்

    ReplyDelete
  15. meyyappanram said...
    //rip steve job neriya panni irukinga adutha piravi eduthu vanga//

    உண்மையிலேயே அது ஒரு பெரிய இழப்புதான்,

    //mokka rsu maama itha g.v prakash ku tweet panni vidunga//

    நாங்க ட்வீட் பண்ணியா அவரு திருந்த போறாரு?

    ReplyDelete
  16. தமிழ்வாசி - Prakash said...
    //புட்டி பாலு என்னமோ சொல்லி இருக்கீங்க? ஐபாட்ன்னு... ஒன்னும் புரியல... நாம அந்த அளவுக்கு வளரல... ஹி..ஹி...//

    அடடே, தமிழ்வாசி வளரலங்குறாரே!!!

    ReplyDelete
  17. வைரை சதிஷ் said...
    //எனக்கு ஐபாட்-லாம் வேண்டாம்//

    குச்சி ஐஸ் ஓகே வா?

    ReplyDelete
  18. செங்கோவி said...
    //"கர்ணன் நகர்வலம் போனப்போ பாக்குறவனெல்லாம் நல்லவனா தெரிஞ்சான், துர்யோதனனுக்கு எல்லாருமே கெட்டவனா தெரிஞ்சான்" அப்புடின்னு. மகாபாரத காலத்துலேயே இந்தியர்கள் சார்புத்தத்துவம் தெரிஞ்ச்சு வச்சிருந்திருக்காங்கப்பா.//

    சூப்பர்யா..ஐன்ஸ்டீனுக்கும் இந்திய ஞான மரபு மேல ஒரு இது உண்டு!////

    ஆமாண்ணே, நம்மாளுக சும்மா சொன்னத அந்தாளு பார்முலா போட்டு சொல்லியிருக்காரு.

    //// இதுக்கும் மேல இந்த ஆள நம்புறதுக்கு நாம என்ன மாங்காயா இல்ல மடையனா. ஆமா நமக்கு ஒரு டவுட்டு, இதுக்கு காபி பேஸ்ட் பாட்டுன்னு சொல்லலாமா? //

    அப்போ கன்ஃபார்மா ஹிட் தான்.

    மின்னல்கள் கூத்தாடும்...சூப்பர் சாங்..’ஒரிஜினல்’ வாழ்க..//

    அடடா... முடிவே பண்ணிட்டீங்களா?

    // செங்கோவி said...
    பாவனா-வை எங்கேய்யா?//

    சாரிண்ணே, பாவனா இடத்தைதான் ஸ்டீவ் ஜோப்சுக்கு குடுத்துட்டோம், அடுத்த வாட்டி பார்போம்..

    ReplyDelete
  19. K.s.s.Rajh said...
    //இதான் சீரியஸ் மொக்கையோ சூப்பர் பாஸ்..//

    நன்றி பாஸ்.

    ReplyDelete
  20. Yoga.s.FR said...
    //அருமையாக இருந்தது!இருக்கிறது!இருக்கும்!அது போகட்டும் நிரூபனுக்கு எத்தன வயசானா உங்களுக்கென்ன?அவரு இனிமே தான் "பொண்ணு" பாத்து கட்டணும்!அவரு பொண்ணு தான் பாக்கிறாரு!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!//

    நன்றி ஐயா, க. கா.. வுக்கு பையன் பாக்குறாங்களாமே, ஜோடி பொருத்தம் ஓகே, வயசு பொருத்தம் எப்புடின்னுதான் மண்டைய பிச்சுக்கிட்டோம்.

    ReplyDelete
  21. Yoga.s.FR said...
    //அருமையாக இருந்தது!இருக்கிறது!இருக்கும்!அது போகட்டும் நிரூபனுக்கு எத்தன வயசானா உங்களுக்கென்ன?அவரு இனிமே தான் "பொண்ணு" பாத்து கட்டணும்!அவரு பொண்ணு தான் பாக்கிறாரு!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!//

    நன்றி ஐயா, க. கா.. வுக்கு பையன் பாக்குறாங்களாமே, ஜோடி பொருத்தம் ஓகே, வயசு பொருத்தம் எப்புடின்னுதான் மண்டைய பிச்சுக்கிட்டோம்.

    ReplyDelete
  22. ரெவெரி said...
    //இந்த நூற்றாண்டின் எடிசன் இழப்பு பெரிய இழப்பு...வெகு சிலருக்குத்தான் Technology,Art,Innovation மூன்றையும் சேர்க்க தெரியும்...
    அவர் ஒரு மொசார்ட் + எடிசன் + டாவின்சி...RIP//

    ஆமா பாஸ், அவரோட இழப்பு ஆபிளுக்கு மட்டுமில்ல நமக்கும்தான்.

    ReplyDelete
  23. "என் ராஜபாட்டை"- ராஜா said...
    //
    வேல கொஞ்சம் ஓவரானா இப்புடியும் உங்க உசிர எடுக்க தோணும்.. அடுத்த வாரம் ஜாலியான மொக்கைகளோட சந்திப்போம். //

    வாங்க காத்திருக்கோம்///

    கண்டிப்பா சார்..

    ReplyDelete
  24. ஸ்டீவ் ஜோப்ஸ்>>>>>>>>>>>>>>>

    அஞ்சலிகள்!

    ReplyDelete
  25. இனிய இரவு வணக்கம் பாஸ்..

    ஆப்பிளின் தந்தைக்கு என் அஞ்சலிகளையும் தெரிவிக்கின்றேன்.


    அப்புறமா என் வயசு தான் அன்னைக்கே சொல்லிட்டேனே...
    அவ்வ்வ்வ்வ்

    அமேசோன் எதிர்பார்ப்பினைக் கூட்டி ஆப்பிளின் மவுசிற்கு ஆப்பு வைத்து விடும் என்று நினைக்கிறேன்.

    ஜீ.வி.பிரகாஷ் மட்டும் அல்ல விஜய் ஆண்டனி என்று நெறையப் பேர் இந்த உல்டா தான் பண்ணுறாங்க.

    அதுவும் நம்மாளுங்களுக்கு ஆங்கிலப் பாடல்கள் தெரியாதுன்னு நெனைச்சு பண்டிட்டு வசமா மாட்டிக்கிறாங்களோ என்று நெனைச்சு சிரிக்கத் தோணும் பாஸ்..

    சார்புத் தத்துவம் விளக்கம் கலக்கல் பாஸ்.

    அப்புறமா ஆப்பிள் பொண்ணு வந்திட்டா ந்மக்கும் ஜாலி இல்லே...

    ReplyDelete
  26. ஸ்டீவ் ஜொப்ஸ் பற்றிய தகவல் தெரிந்து கொண்டோம் நன்றி நண்பா

    ReplyDelete
  27. //
    Your Blog http://realsanthanamfanz.blogspot.com is not listed in Tamilmanam. Please submit your blog to Tamilmanam

    Please click here to submit your blog to tamilmanam

    சன்னலை மூடு//
    ? ? ? ? ? ஏனுங்க இப்படி?

    ReplyDelete
  28. விஷயங்களுக்கு நன்றி நண்பா!

    ReplyDelete
  29. ஐன்ஸ்டின் விடயம் மீள் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளதாக அறிவித்திருக்கிறார்கள்... சகோதரம்..

    அப்பிள் ஓணர் எல்லோர்ட மனதிலும் இடம்பிதெ்த ஒரு மனிதரல்லவா?

    ReplyDelete
  30. நல்ல விளக்கமான பதிவு.. அது சரி.. சந்தானம் ஃபேன்ஸ் பேரை ஏன் மாத்திட்டீங்க?

    ReplyDelete
  31. கோகுல் said...
    ஸ்டீவ் ஜோப்ஸ்>>>>>>>>>>>>>>>

    அஞ்சலிகள்!////

    நவீன உலகின் ஒரு ஜாம்பவான் அவர். கணணி உலகின் தவிர்கமுடியாத ஆளுமை.

    ReplyDelete
  32. நிரூபன் said...

    //இனிய இரவு வணக்கம் பாஸ்..///

    கால தாமதமான பதில் வணக்கம் பாஸ்,

    //ஆப்பிளின் தந்தைக்கு என் அஞ்சலிகளையும் தெரிவிக்கின்றேன்.//

    ரைட்டு.

    //அப்புறமா என் வயசு தான் அன்னைக்கே சொல்லிட்டேனே...
    அவ்வ்வ்வ்வ்//

    அப்போ, க. கா வுக்கு ஜோடி சேர்திடலாமா?

    //அமேசோன் எதிர்பார்ப்பினைக் கூட்டி ஆப்பிளின் மவுசிற்கு ஆப்பு வைத்து விடும் என்று நினைக்கிறேன்//

    வெளிவரும்போது தெரியும் பாஸ், காத்திருப்போம்.

    //ஜீ.வி.பிரகாஷ் மட்டும் அல்ல விஜய் ஆண்டனி என்று நெறையப் பேர் இந்த உல்டா தான் பண்ணுறாங்க.

    அதுவும் நம்மாளுங்களுக்கு ஆங்கிலப் பாடல்கள் தெரியாதுன்னு நெனைச்சு பண்டிட்டு வசமா மாட்டிக்கிறாங்களோ என்று நெனைச்சு சிரிக்கத் தோணும் பாஸ்..//

    ஆமா பாஸ், வர வர ஓரிஜினல தேடித்தான் பிடிக்கவேண்டி இருக்கு.

    //சார்புத் தத்துவம் விளக்கம் கலக்கல் பாஸ்.//

    நன்றி பாஸ், கான்செப்ட் ஆப் சைமல்ட்டேனிட்டி இல ஒரு சிறு பகுதியே அது. சார்புத்தத்துவம் இன்னும் நிறைய இருக்கு, ஒரு இஞ்சினியருக்கு தெரியாததா??

    //அப்புறமா ஆப்பிள் பொண்ணு வந்திட்டா ந்மக்கும் ஜாலி இல்லே...//

    ஆவ்வ், இவருக்கு இப்பிடி ஒரு கிளிகிளுப்பு..

    ReplyDelete
  33. // மாய உலகம் said...
    ஸ்டீவ் ஜொப்ஸ் பற்றிய தகவல் தெரிந்து கொண்டோம் நன்றி நண்பா//

    நன்றி நண்பா.

    ReplyDelete
  34. FOOD said...
    //
    Your Blog http://realsanthanamfanz.blogspot.com is not listed in Tamilmanam. Please submit your blog to Tamilmanam

    Please click here to submit your blog to tamilmanam

    சன்னலை மூடு//
    ? ? ? ? ? ஏனுங்க இப்படி?///

    ஆமா ஆபிசர், நாங்க சினிமா பதிவர்களாம், அதனால இணைச்சுக்க முடியாதாம்.

    ReplyDelete
  35. //விக்கியுலகம் said...
    விஷயங்களுக்கு நன்றி நண்பா!//

    நன்றி நண்பா...

    ReplyDelete
  36. ♔ம.தி.சுதா♔ said...
    //ஐன்ஸ்டின் விடயம் மீள் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளதாக அறிவித்திருக்கிறார்கள்... சகோதரம்..//

    ஆம் சகோதரம், சார்புத்தத்துவம் உடயுமிடத்து அதன் விளைவுகள் சற்று பாரதூரமானது. மீள் ஆய்வு அவசியமே.

    //அப்பிள் ஓணர் எல்லோர்ட மனதிலும் இடம்பிதெ்த ஒரு மனிதரல்லவா?//

    ஆம், கணணி உலகின் முன்னோடிகளுள் ஒருவர்.

    ReplyDelete
  37. சி.பி.செந்தில்குமார் said...
    //நல்ல விளக்கமான பதிவு.. //

    நன்றி சார்..

    //அது சரி.. சந்தானம் ஃபேன்ஸ் பேரை ஏன் மாத்திட்டீங்க?//

    எல்லாம் ஒரு முன்ஜாக்கிரதை தான், நாம வம்பிழுக்க போய் அது தலைவருக்கு பிரச்சினையாய் முடியக்கூடாதில்ல.

    ReplyDelete
  38. விஷயம் அறிந்தேன் நண்பரே ,நன்றி பகிர்வுக்கு

    ReplyDelete
  39. நம்ம சைட்டுக்கும் வாங்க!ஜாயின் பண்ணுங்க!
    கருத்து சொல்லுங்க!நல்லா பழகுவோம்!!

    ReplyDelete
  40. //M.R said...

    விஷயம் அறிந்தேன் நண்பரே ,நன்றி பகிர்வுக்கு
    ///

    நன்றி சார்...

    ReplyDelete
  41. ///சீனுவாசன்.கு said...

    நம்ம சைட்டுக்கும் வாங்க!ஜாயின் பண்ணுங்க!
    கருத்து சொல்லுங்க!நல்லா பழகுவோம்!!
    ////

    அங்கவை சங்கவை ரெண்டு பேரும் இருக்காங்களா? இல்லன்னா வர மாட்டோம் சார்....

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்!!