தீபாவளியும் அதுவுமா தமிழ் படம் பார்க்கலைனா தெய்வ குத்தமாகிடுமேங்கற ஒரே காரணுத்துக்காக, பல தடைகளையும் கடந்து, ராசு மாமா பேச்சையும் மீறி, வழக்கம் போலவே மொக்க வாங்கிட்டு, நான் பெற்ற துன்பம் பெறுக இவ்வையம்ங்கர தாரக மந்திரத்துக்கமைய உங்க உசுரையும் எடுக்கலாம்ன்னு ரொம்ப நாளைக்கு அப்புறமா ப்ளாக்கர் பக்கம் வந்திருக்கேன். இனிமே நம்ம விமர்சனத்த பார்க்கலாம்.
ஆரம்பம்.
ஒவ்வொருத்தர் வாழ்கையிலும் ஒரே ஒரு தடவைதான் தல தீபாவளி வரும், ஆனா தல ரசிகர்களுக்கு மட்டும்தான் ஒன்னுக்கு அதிகமா தல தீபாவளி கொண்டாடுற பாக்கியம் கெடைக்கும். இது அப்படி ஒரு தல தீபாவளி. அஜித்-விஷ்ணு-நயன் கூட்டணி, கூடவே ஆர்யா-தாப்சி-கிஷோர்-அதுல் குல்கர்னி-ராணா டகுபதின்னு ஏகப்பட்ட கூட்டம். மாஸ்க்கு அஜித்தும், காமெடிக்கு ஆர்யாவும், கண்ணுக்கு நயனும், மொக்கைக்கு தாப்சியும்ன்னு பார்ட் பார்டா பிரிச்சு கத எழுதியிருப்பாரு விஷ்ணுன்னு நினைக்கறேன்.
இப்பெல்லாம் தல கால் ஷீட் கெடச்சதும் மொத வேலையா, தல கையில ஒரு பைக், கார், அப்புறம் ஏதாவது இன்னுமொரு வண்டிய குடுத்து வேகமா ஓட்டவச்சு ஷூட் பண்ணிக்கறாங்க, அப்புறம் அவர கொஞ்சம் தனியா நடக்கவச்சு, படத்துல இருக்கற மத்த ஒவ்வொரு நடிகர் கூடவும் தனித்தனியாகவும் கூட்டமாவும் சேர்த்து நடக்கவச்சி சூட் பண்ணிக்கறாங்க, அப்புறம் படத்துல வர்ர வில்லன் நடிகர், தலையோட தலையில துப்பாக்கி வச்சிருக்கறப்போ, தல ஒரு டயாலாக் பேசுற மாதிரி ஷூட் பண்ணிக்கறாங்க, கடைசியில அந்த ஒவ்வொரு சீனையும் பிரிச்சுப் பிரிச்சுப் போட்டு கொஞ்சம் காரம், ஸ்வீட் ஆங்காங்கே போட்டு எடிட் பண்ணி ஒரு படம்ன்னு ரிலீஸ் பண்ணிடறாங்க, இங்கயும் அதுவே நடந்திருக்கு. இருந்தாலும் ஒரு ஆர்டர்ல கரெக்டா அந்த சீன்ஸ் வர்ரதனாலயும், அங்காங்கே கதைன்னு ஒன்னு தல காட்டரதனாலயும், ஆர்யாவோட காமெடி, தலையோட எக்ஸ்ட்ரா ஆர்டினரி ஸ்க்ரீன் ப்ரெசென்ஸ் இருக்கறதனாலயும், அங்காங்கே எட்டிப் பார்க்கும் சில நிஜ சம்பவங்களும், அதை படத்துல கோர்திருக்கற விதமும் சேர்த்து, ஒருவேள படம் நல்லாத்தான் இருக்கோன்னு நமக்கே ஒரு டவுட்டு வாறமாதிரி ஒரு படம்.
படத்துல குறைன்னு சொல்றதுக்குன்னா ரெண்டே விஷயம், ஒன்னு நயன் கொஞ்சம் வயசா தெரியறாங்க, நயனுக்கு அழகே சுடிதார்தான், அது இங்க மிஸ்ஸிங். ரெண்டாவது அத்துல் குல்கர்னி போன்ற ஒரு எக்ஸ்ட்ரா ஆர்டினரி நடிகரையும், கிருஷ்ணா போன்ற ஒரு ரொம்ப கேப்பபில் நடிகரையும் கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லாம வேஸ்ட் பண்ணியிருக்கறது. இன்னும் ஒன்னு சொல்லனும்ன்னா தமிழ் சினிமா VFX ஐ கொஞ்சம் ரொம்ப சீரியஸா எடுத்துக்க வேண்டிய நேரம் வந்திரிச்சு, குண்டு வெடிக்கற காட்ச்சிகள் VFX சுத்த சொதப்பல். மற்றும்படி இது கண்டிப்பாக மொக்கை இல்லை. கொடுத்த காசோ, செலவளிச்ச நேரமோ வேஸ்ட்டுன்னு சொல்லற படமும் இல்லை. மிஸ் பண்ணிடாம கண்டிப்பா பாருங்கன்னு சொல்லற படமும் இல்லை. இந்த தீபாவளிக்கு தமிழ் படம் பார்க்கணும்னா ஆரம்பம் பாருங்க. அம்புட்டுத்தான் சொல்லலாம்.
ஆல் இன் ஆல் அழகுராஜா
எல்லா பண்டிகையும் நமக்கு கொண்டாட்டமாவே அமைஞ்சுடுதா என்ன, எப்போவாவது குடும்பத்துல ஒரு பெருசு மண்டயப் போட்டோ, இல்ல நமக்கு ஒடம்பு சரியில்லாம போயோ, பண்டிக பனாலாகிடுறதில்லையா, அந்த மாதிரி ஒரு அசம்பாவிதம் தான் இந்த படம். இது நிஜமாவே ராஜேஷ் படமா, இல்ல ராஜேஷ்கிட்ட சரக்கு தீர்ந்திடிச்சான்னு என்ன ரொம்பவே யோசிக்க வச்ச படம் இது. ராஜேஷ் படத்துல இருக்கற எல்லாமே இருக்கு, ஆனாலும் இது ராஜேஷ் படம் மாதிரி இல்லாம இருக்கு, அது ஏன்னு எனக்கு கடைசிவர புரியவே இல்ல. படத்துல இருக்கற ஒவ்வொரு சீனும் நமக்கு போரடிச்சு போதை ஏறி அது தெளிஞ்சதுக்கு அப்புறமும் முடியாம ஜவ்வு மாதிரி இழுத்துக்கிட்டே போறதுதான் இந்த படத்தோட முக்கிய குறைன்னு நினைக்கறேன். நெறயவே ஸ்டார் காஸ்ட் இருக்கு படத்துல, எதுவுமே வேர்த்தியா இல்ல, தலைவர் கூட நெறைய இடங்கள்ள நம்மள கவுத்துடுராறு. படம் பார்கறவங்க பாதி நேரத்துக்கு மேல தேட்டர் ஸ்க்ரீன பார்க்காம அவுங்க மொபைல் ஸ்க்ரீனையே பார்த்துக்கிட்டு இருக்காங்க, படத்துல வார ஒவ்வொரு சீனுக்கும், தேட்டர் ஆடியன்ஸ்ல யாராச்சு ஒருத்தர் போதும்யான்னு சொல்லிக்கிட்டே இருக்காங்க.
அப்போ இந்த படத்துல பிளாஸ் பாயிண்டே இல்லையான்னு கேக்காதீங்க, இருக்கு. அதுல முக்கியமா ரெண்டு பாயிண்ட மட்டும் உங்களுக்கு சொல்றேன். ஒன்னு இந்தப் படத்த பார்க்கற ஒவ்வொருத்தருக்கும் அவங்களோட பள்ளி நாட்கள் கண்டிப்பா ஞாபகம் வரும், அதாவது "எப்படா கிளாஸ் முடியும், எப்படா வீட்டுக்கு போவோம்" ன்னு நாம தவிச்ச தவிப்பு இருக்கே, படம் ஓடுற மூணு மணிநேரமும் உங்க கண்ணு முன்னாடியே நிக்கும். ரெண்டாவது, திரை விமர்சனம்ங்கற பேர்ல படத்தோட கதைய விலாவாரியா எழுதி ஒப்பேத்துற விமர்சகர்களுக்கு ராஜேஷ் சரியான சவால் விடுத்திருக்காரு, முடிஞ்சா படத்துல என்ன நடத்துச்சுன்னு சொல்லுங்கடா பார்க்கலாம்ன்னு நம்ம விமர்சகர்கள பார்த்து கேக்கற கேள்வி இருக்கே, சார் இந்த திமிரு, உங்கள எங்கயோ கொண்டு போகப்போகுது.
ஆன் ஏ சீரியஸ் நாட், படத்தோட ஒன் லைனர் என்னன்னா, அப்பன் செஞ்ச தப்புனால பிரிஞ்சு போன ரெண்டு குடும்பத்த மகன் எப்படி சேர்த்து வைச்சி அப்பன் செஞ்ச தப்ப திருத்திக்கறாருங்கறதுதான். இந்த ஒன் லைனருக்கு வழக்கம் போலவே செம இண்டரஸ்டிங்கான காரக்டர்ஸ் புடிச்ச ராஜேஷ், வழக்கம் போல இண்டரஸ்டிங்கான ஸ்க்ரீன் ப்ளே எழுதறத்துக்கு பதிலா, வெறும் மொக்க சீன்கள் மட்டுமே எழுதி அத தொகுப்பாக்கி ஒரு படமா குடுக்க ட்ரை பண்ணியிருக்காரு. இந்த பருப்பு உள்நாட்டுல மட்டுமில்ல, வெளிநாட்டுல கூட வேகாது பாஸ், சீக்கிரமே முழிச்சுக்கோங்க, இல்லையின்னா S.J சூர்யா நிலைமைதான் உங்களுக்கும். சொல்றத சொல்லிட்டோம், த சாய்ஸ் இஸ் யுவர்ஸ்.
முதலில்... இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் புட்டிப்பால் & மொக்கைராசு.
ReplyDeleteசந்தானத்தின் படம் எப்படி இருந்தாலும் ரசிக்கிற உங்களாலேயே தாங்க முடியலைன்னா....எங்க நிலைமை?
ReplyDelete'unga nermai remba peet-cher-kk' naran chrompet
ReplyDeleteஇனி தீபாவளி நல்வாழ்த்துக்கள். படம் பார்த்து நொந்து போய்விட்டீர்களா மாமா??:)))
ReplyDeleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்,டாக்டர்!///ஒரு சந்தானம் பேனா(FAN) இருந்துக்கிட்டு...............உங்க நேர்மை எனக்குப் புடிச்சிருக்கு!
ReplyDeleteதீபாவளியன்று மாலை காட்சிக்கு சென்றோம்.அரங்கத்தில் பாதி கூட இல்லை.
ReplyDeleteபடம் முடிவும் வரை உட்கார முடியவில்லை.வந்துவிட்டோம்
உங்க நேர்மை எனக்கு பிடிச்சு இருக்கு.
ReplyDeleteமிக நடுநிலையான பார்வை
ReplyDeleteசந்தானம் சரக்கு தீர்ந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது.இன்னும் ஒரு 10 படம். அவ்வளவுதான்.ஏற்கனவே சூரி போன்றவர்களால் சந்தானம் பின்னால் சென்று கொண்டிருக்கிறார்.வடிவேலு வேறு மீண்டும் வருகிறார்.சந்தானம் ரொம்ப கஷ்டம் தான்.
ReplyDelete--
நல்ல விமர்சனம்
ReplyDelete