டிஸ்கி: இது ஒரு மொக்க பதிவு. பதிவ படிச்சிட்டு நாங்க மொக்க போடுரோம்ன்னு யாரும் சண்டைக்கு வரமாட்டோம்ன்னு சத்தியம் பண்ணி குடுத்துட்டு பதிவ படிங்க.
பஹெலி திரைப்படம் இரண்டாயிரத்து ஐந்தாம் ஆண்டு ஜூன் மாதம் ஷாரூக் கான், ராணி முகர்ஜி நடிப்பில் வெளியாகி படு தோல்வி அடைந்த ஒரு படம். இரண்டாயிரத்து ஐந்தாம் ஆண்டிற்கான சிறந்த வேற்றுமொழி திரைப்பட பிரிவில் போட்டியிட இந்தியாவின் உத்தியோகபூர்வ ஆஸ்கர் பிரவேசமாக அனுப்பிவைக்கப்பட்ட படம். இந்த படத்தினை நீங்கள் சில பேர் பார்த்திருக்கலாம், பலர் பார்கமலும் இருக்கலாம். சிறந்த ஆர்ட் டைரெக்ஷன், சிறந்த நடிப்பு என பல நல்ல விடயங்களை கொண்டுள்ள படம். 1973 இல் வெளியான ஒரு படத்தின் ரீமேக்கான இந்த படம் கதை மக்களுக்குப் பிடிக்காமல் போனதால் பாக்ஸ் ஆபிசில் பணால் ஆகியது. இந்த படத்தின் கதை என்ன?
புதிதாக திருமணமான ஒரு தம்பதி, கணவன் வியாபார நிமித்தமாக திருமணமான முதல் நாளே மனைவியை பிரிந்து செல்ல நேரிடுகிறது. அந்த பெண்ணை தற்செயலாக காண நேரிடும் ஒரு ஆவி அந்த பெண்ணின் மீது காதல் கொண்டு கணவன் உருவத்தில் பெண்ணின் வீட்டுக்கு வருகிறது. அந்த பெண்ணிடம் மட்டும் உண்மையை சொல்லி சம்மதமும் வாங்கி விடுகிறது, பின்னர் இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. இறுதியில் நிஜ கணவனின் உடலுள் புகுந்துவிடும் ஆவி அந்த பெண்ணுடன் நிரந்தர குடித்தனத்தில் ஈடுபடுகிறது.
இப்போ இந்த மொக்க கதைய உங்களுக்கு இவ்வளவு தெளிவா எதுக்கு சொல்றேன்னா ஒரு ஆவியும் பெண்ணும் காதலிப்பது, குழந்தை பெற்றுக்கொள்வது என்கிற மேட்டர் இருக்கே இது படு இன்டரஸ்டிங் மேட்டர், இத ஹாலிவூட்ல ரீமேக்கனும்னா எப்புடி ரீமேக்கலாம்? திரைக்கதையில என்ன என்ன மாற்றம் செய்யலாம்? நம்ம அறிவுக் கண்ல உதிச்ச திரைக்கதை இதுதான்.
காதல் கதைகள்னா பருவ வயசுல இருக்கறவங்களுக்குத்தான் ரொம்ப பிடிக்கும், அதுவும் காலேஜ் போற பெண்களுக்கு, ஸோ நம்ம ஹீரோ ஹீரோயினுக்கு கல்யாணம் ஆக வேணாம். ரெண்டுபேரையும் காலேஜ் ஸ்டூடெண்ட்ஸ் ஆகவே காட்டனும். ஆவி மனுஷ ரூபத்துல வாரதுங்கரத ஹாலிவூட் ஆடியன்ஸ் ஏத்துக்க மாட்டாங்க படு மொக்கையா இருக்கும். ஆனா ஹாலிவூட்ல சக்க போடு போடுற ஒரு ஆவி இருக்கு, அதுதான் வம்பயர். அப்போ ஒரு வம்பயர் ஒரு பொண்ண காதலிக்கறதா கதைய பின்னலாம். அப்போ கணவன் காரெக்டர என்ன பண்றது? அத அந்த பெண்ணை காதலிக்கற இன்னொரு காரெக்டரா காட்டலாம். அது மனுஷன்னா, எதுக்குடி தேவையில்லாம ஒரு வம்பயர காதலிச்சிக்கிட்டு மனுஷனையே லவ் பண்ணித் தொலைக்கலாமேன்னு பாக்குறவன் கேள்வி கேப்பான், அத்தோட ஆவி வேற வேற உருவம் எடுக்கறதுதான் பஹேலி படத்தோட மெயின் பாயிண்டே, ஸோ கணவன் காரெக்டர ஷேப் ஷிப்ட்டர் ஆன ஒரு வயார் வுல்பா காட்டிடலாம். வயார் வுல்பும் வம்பயரும்தான் ஜென்ம எதிரிகள் ஆச்சே, ஒரு பிகருக்காக ரெண்டு பசங்க காதல் தேசத்துல அடிச்சுக்கற மாதிரி இங்க அவுங்க ரெண்டுபேரையும் அடிச்சிக்க வுட்டா செமையா இருக்கும். இப்போ கொழந்த, ஆவிக்கும் மனுஷனுக்கும் பொறக்குற கொழந்த ஆவியா, இல்ல மனுஷனா? ஏன் ரெண்டும் கலந்த ஒரு புதுவித கலவையா இருக்கக்கூடாது? கடைசியில முடிவ என்ன பண்றது, ஆவி மனுஷனா மாறுதுன்னு சொல்லாம அந்த பொன்னையும் வம்பயரா ஆக்கிடலாம், அப்போ பால கோடி ஆண்டுகள் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்தார்கள் அப்புடின்னு கதைய முடிக்கலாம்.
அப்பாடா, இம்புட்டு மேட்டர உள்ள நுளைச்சாச்சே அதனால இந்த படத்த ஒரு நாலு அஞ்சு பாகமா எடுக்கலாம்ன்னு ப்ளான் பண்ணிக்கிட்டு இருந்தா அப்புடியே ஒரு படம் ஏற்கனவே எடுத்து வச்சிருக்காங்களாம். படத்தோட பேரு Twilight (series). ஷப்பா முடியல, குருவியதான் அவதார்ன்னு எடுக்கராங்கன்னா இந்த ஹாலிவூட் காரங்க பஹேலி படத்த கூட விட்டு வைக்கல. இதுல கொடும என்னன்னா, இதே பேருல வந்த ஒரு நாவல தளுவித்திதான் நாங்க இந்த படத்த எடுத்தோம்ன்னு சொல்றாங்க, அந்த நாவல் வந்தது 2005 ஆக்டோபர்ல, ஆரிஜினால் கதை எந்த வருஷம்ன்னு தெரியல ஆனா கண்டிப்பா 1973க்கு முதல். பகல் கொள்ளடா சாமி. இது பத்தி நம்ம ராசு மாமாகிட்ட சொன்னப்போ அவரு இன்னுமொரு மேட்டர் சொன்னாரு, இந்த படத்துல ஹீரோ வம்பயரோட சக்தி என்னனா மனுஷங்களோட மனசுல நினைக்கிறது இவருக்கு கேக்கும், இது சந்திர முகி படத்துல நம்ம ரஜினி ஸார்கிட்ட இருக்கற சக்தி. சந்திரமுகி வந்தது 2005 ஏப்ரல்.
இப்போ ஹிந்தில வந்த இன்னுமொரு படம் பத்தி பார்ப்போம்.
 |
வலது பக்கமா இருக்கற சின்ன பொண்ணுதான் ஹன்சிகா |
கோயி மில் கயா: இந்த படத்தோட நாட் என்னன்னா, வேற்றுக்கிரகத்தில் அறிவுள்ள ஜீவராசிகள் இருந்தா நாம வேற்றுக்கிரக வாசிகள தேடுற மாதிரி அவுங்களும் தேடிக்கிட்டு இருக்கலாம், ஸோ நாம இங்க இருக்கறதா அவுங்களுக்கு மெசேஜ் அனுப்பினா ஒருவேள அவுங்க நம்மள தேடி வரலாம். இங்க ஒரு ஸயன்டிஸ்ட் "ஓம்" எனும் மந்திரத்த அனுப்பரதாவும் அப்புடி தேடி வாற வேற்றுக்கிர வாசி ஒருவரு ஆபத்துல சிக்கிக்கரதாகவும், நம்ம ஹீரோ அவர காப்பத்தறதாகவும் கதைய அமைச்சி இருப்பாங்க.
இப்போ இந்த படத்த ஹாலிவூட்ல எடுத்தா எப்புடி எடுக்கலாம்? நம்ம ஒத்த ஸயன்டிஸ்ட்டுக்கு பதிலா அங்க நாஸா விண்வெளிக்கு மெசேஜ் அனுப்பறாங்க. ஆனா ஹீரோ வேற்றுக்கிரக வாசிகள திருப்பி அனுப்பறதா எடுக்கறது மனிதம் மனுஷத்தன்மைன்னு சொல்றதெல்லாம் அங்க எடுபடாது, அதனால வேற்றுக்கிரக வாசிகள் முழு உலகத்தையும் கைப்பற்ற வாறாங்கன்னு சொல்லி, அத நம்ம ஹீரோ தனியாளா நின்னு அமெரிக்க ராணுவ ஆயுதங்கள வச்சு உலகத்தையே காப்பாத்துறதா காமிச்சா செமயா ஓடும் படம். படத்தோட பேரு பாட்டில் ஷிப், வெளியானது ஜஸ்ட் ஒரு மாசத்துக்கு முன்பு.

சென்ற வருடம் தமிழில் வெளியாகி துரத்தி அடித்த வெற்றியை ஈட்டிய மெகா ஹிட் படம் வேலாயுதம். இந்த படத்தோட நாட் என்னன்னா சூப்பர் ஹீரோங்குறது அசாத்திய சக்தியோ, ஆமானுஷ்யமோ இல்ல, உங்களுக்குள்ள ஒளிஞ்சிருக்கற அநியாயத்தை கண்டால் பொங்கும், குற்றத்தை எதிர்க்கும் ஒரு உணர்வே. அது சரியாக வெளிப்ப்படுமிடத்து நீங்க ஒவ்வொருவரும்தான் வேலாயுதம் அப்புடிங்கரதுதான். இது 2000 ஆம் ஆண்டு வெளியான ஆசாத்படத்தோட தழுவல். இந்த படத்தோட நாட்ட எடுத்துக்கிட்டு DC காமிக்ஸ் BATMAN கதைய வச்சு நம்ம கிறிஸ்டோபர் நோலன் எடுத்திருக்கற காவியம்தான் DARK KNIGHT SERIES. இதுக்கு ஆதாரம் இறுதிப் பாகத்தில் வரும் கால்பந்தாட்ட மைதானம் தகர்க்கப்படும் காட்சி. தமிழ் படத்துல அங்க வேலாயுதம் வந்து மைதானத்துல குண்டு வெடிக்காம தடுத்து ஒரு பெரிய லெக்டர் குடுப்பாரு, ஆனா இங்க batman தவற விட்டுடுவாரு. அவ்வளவுதான் வித்தியாசம். அப்புறம் க்ளைமாக்ஸ் சீன், அப்புடியே பயணம் படத்தோட கிளைமாக்சுல இருந்து உருவியிருக்காங்க. இங்க குண்ட கார்ல வச்சிக்கிட்டு தூரமா கொண்டுபோய் வெடிக்கவைப்பாரு நாகர்ஜுன், அங்க பாட்ல பறந்து போவாரு batman. முதல் பாகத்துல வார ட்ரைன் சீகுவேன்ஸ் அப்புடியே வேலாயுதம் ட்ரைன் சீகுவன்சொட காப்பி (ஆசாத் படத்துல அந்த சீன் இருந்தா வேலாயுதம் ஆரிஜினால் இல்லன்னா batman ஆரிஜினால்). சிட்டி முழுக்க அங்கங்க குண்டு வைக்கிற கான்செப்ட ரெண்டாம் பாகத்துல பயன்படுத்தியிருக்காறு. மொத்தமா வேலாயுதம்குற ஒத்த படத்த மூணு பாகமா எடுத்ததுதான் இந்த DARK KNIGHT SERIES.

இன்னும் சொல்ல நிறைய இருக்கு, பதிவோட நீளம் கருதி இத்தோட நிறுத்திக்கறோம். ஹாலிவூட் படங்கள்ல இருந்து நம்ம தமிழ்ல காப்பி பண்ணின படங்கள் பத்தி இன்னொரு பதிவில் பார்க்கலாம்.