Saturday, February 25, 2012

மொக்கராசு வாங்கிய மொக்க பல்ப்பு....

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கமுங்க, 

ஒரு மூணு வாரம் லீவு போடலாம்ன்னு யோசிச்சா, அது ரெண்டு மாச லீவா ஆயிரிச்சு. இந்த நாட்கள்ல நம்மள மறக்காம இருந்த அனைத்து சொந்தக்களுக்கும் நன்றி கூறி நம்ம மொக்க மாமா அட்டகாசங்கள பத்தி கொஞ்சம் சொல்லிட்டு போகலாம்ன்னு ஒரு பதிவு..


மொக்க மாமா கை கால வச்சிட்டு சும்மா இருக்காம பள்ளிக்கூட வாத்தி மாருக்கு காம்புட்டர் சொல்லி தர்றாரு. சொல்லிக்குடுக்க ஆரம்பிச்ச நாள்ல இருந்து ஒரே பந்தா, நம்மள விட வயசுல ஜாஸ்த்தியான அங்கிள் ஆன்டி மார் வந்தாலும் எல்லாரும் என்ன சார் ன்னுதான் கூப்பிடுவாங்க, ஒரே மரியாதைன்னு நம்ம உசிர எடுப்பாரு. இது எங்கடா போய் முடியும்ன்னு  யோசிக்கிட்டே இருந்தேன், ஆண்டவனா பார்த்து அதுக்கு ஒரு முடிவ குடுத்திருக்கான். அது என்னன்னா இவருக்கிட்ட படிச்ச வாத்தி ஒருத்தரு, கடைசி நாள் இவருக்கிட்ட வந்து பேசியிருக்காரு, அப்போ அவரு நீங்க காலேஜ் முடிச்சது எந்த வருஷம்ன்னு கேட்டிருக்காரு. நம்ம மாம்சும் பந்தாவா டூ தவுசண்ட் நைன்னு சொல்லியிருக்காரு, அந்த ஆளு அப்பிடியே ஷாக் ஆகிட்டு முழிச்சிக்கிட்டே இருந்திருக்காரு. என்னடா இது வம்பா போச்சேன்னு இவரும் எதுக்கு கேட்டீங்கன்னு கேட்டிருக்காரு, அதுக்கு அவரும் இல்ல, எங்க கூட காலேஜ்ல மொக்கராசுன்னு ஒருத்தரு இருந்தாரு பாக்க உங்கள மாதிரியே இருப்பாரு, அவருதான் நீங்கன்னு நெனைச்சிட்டிருந்தோம் அதுதான்னு சொல்லியிருக்காரு. உடனே இவரும் எதுக்கும்ன்னுட்டு நீங்க எந்த வருஷம் காலேஜ் முடிச்சீங்கன்னு கேட்டிருக்காரு, அதுக்கு அந்த அங்கிள் நைன்டீன் எய்ட்டி பைவ் அப்புடின்னிருக்காரு. நம்ம மாம்ஸ் வாயடைச்சுப் போயிட்டாரு. பின்ன என்னங்க ஸ்டைல்ன்னு நெனச்சு ரெண்டு வாரம் ஷேவ் பண்ணாத தாடியோட  அலையிரதுக்காக அவரு பொறக்க முதல் காலேஜ் முடிச்சவங்க எல்லாம் அவர அவுங்க பேட்ஜ்ன்னு நெனைச்சா என்ன பண்ணுவாரு?


அவரு யாரு, வாங்கின பல்பு சூட்டுல ஆம்லட் போடறவராச்சே

இந்த கொடும ஒருவழியா முடிஞ்சிரிச்சுன்னு பார்த்தா புதுசா ஒன்னு ஆரம்பிச்சிருக்காரு, அதாவது ஆன்லைன்ல ஷாப்பிங் பண்றதுதான் நம்ம மாம்ஸோட புதிய முழுநேர பணி. ஒரு ரெண்டுமாசமா ஒரு சாம்சுங் ஆன்றாய்ட் ஃபோன் வாங்குறதுக்காக ஒரு கடைக்காரனுக்கும் இவருக்கும் நடந்த தகராறுல அவன் கடையையே காலிபண்ணிட்டு காசிக்கு ஓடிட்டான்னா பாத்துக்கங்களேன். ஆனா அந்த ஃபோன வாங்கிட்டு இவரு பண்ணுற பந்தா இருக்கே அது அந்த கடவுளுக்கே பொறுக்காதுடா சாமி. எப்ப பாரு எந்த டாபிக் ஆரம்பிச்சாலும், மச்சான் யூ சீ, இன் திஸ் சாம்சுங் ஆன்றாய்ட் அப்பிடின்னு ஆரம்பிச்சு , கடைசியா அங்கேயேதான் வந்து முடிப்பாரு. இது போதாததுக்கு "எங்கிட்ட இருக்கறது காமெரா மொபைல் மச்சான்.. இதுக்கப்புறம் எதிர் வீட்டு ஆண்டி, பக்கத்து வீட்டு பிகர் எல்லாம் கோலம் போடும்போது, தண்ணி பிடிக்கும்போது எல்லாம் சும்மா சக்கு சக்கு சக்குன்னு போட்டோ  எடுக்குரவுனுங்க எல்லாரையும் போட்டோ எடுத்து  ப்ளூடூத் வழியா போலீஸ்ல மாட்டிவுட்டுருவேன்' அப்புடின்னு வேற சொல்லிக்கிட்டு இருக்காரு, நமக்கு எவ்வளவோ ஆப்பு வச்ச கடவுள் இந்த போனுக்கு ஒரு ஆப்பு வைக்காம விட்டுரவா போறான்?


அது என்னமோ தெரியலைங்க நம்ம மொக்க மாமா ஆட்டத்த பாக்குரப்போவேல்லாம் ஏன்னே தெரியாம இந்த பாட்டு மட்டும் ஞாபகத்துக்கு வந்து தொலைக்குதுஆடாத ஆட்டமெல்லாம்
போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா?
நீ கொண்டு வந்ததென்ன?
நீ கொண்டு போவதென்ன?
உண்மையென்ன உன்னக்கு புரியுமா?


டிஸ்கி: இப்பதான் வேலைப்பளு கொஞ்சம் கொறயிர மாதிரி எதோ அறிகுறி தெரியுது, இனிமே மாசத்துக்கு ரெண்டு பதிவாவது போடணும்.  இல்லன்னா அமெரிக்காவுக்கு வந்து தமிழ மறந்திட்ட நிலைமையா போயிரும். (தமிழேன்டா!)


22 comments:

 1. ரொம்ப நாளைக்கப்பறம் பதிவிடுறீங்க. மகிழ்ச்சி மகிழ்ச்சி...

  ReplyDelete
 2. வெல்கம் பாக்!(WELCOM BACK)பதிவு சரியா"தெரிய"மாட்டேங்குது!(பிகர் மட்டும் நல்லா தெரியுது!ஹி!ஹி!ஹி!!!))

  ReplyDelete
 3. வாங்க மொக்கராஸ்..ராக்ஸ்

  ReplyDelete
 4. நாட்கள் கழிச்சு வந்தாலும் சூப்பரான ரிஎண்ட்ரி கொடுத்துட்டீங்க..வணக்கத்தோட நன்றிங்க.

  சீக்ரட் விண்டோ : திகிலூட்டும் மர்ம பட விமர்சனம்..

  ReplyDelete
 5. regular a blog panugna mokka rasu mama.1985 la naan pirakave illai neegna periya apaptakkar than

  ReplyDelete
 6. வெல்கம் பேக் அப்பாட்டக்கர்ஸ்.....

  ReplyDelete
 7. /////உடனே இவரும் எதுக்கும்ன்னுட்டு நீங்க எந்த வருஷம் காலேஜ் முடிச்சீங்கன்னு கேட்டிருக்காரு, அதுக்கு அந்த அங்கிள் நைன்டீன் எய்ட்டி பைவ் அப்புடின்னிருக்காரு. நம்ம மாம்ஸ் வாயடைச்சுப் போயிட்டாரு. //////

  அடேங்கப்பா.... மொக்கராசுமாம ரொம்ப பவர்ஃபுல்லான ஆளுதான் போல.... பெரிய ரேஞ்சையே கவர் பண்ணி இருக்காரே?

  ReplyDelete
 8. /////"எங்கிட்ட இருக்கறது காமெரா மொபைல் மச்சான்.. இதுக்கப்புறம் எதிர் வீட்டு ஆண்டி, பக்கத்து வீட்டு பிகர் எல்லாம் கோலம் போடும்போது, தண்ணி பிடிக்கும்போது எல்லாம் சும்மா சக்கு சக்கு சக்குன்னு போட்டோ எடுக்குரவுனுங்க எல்லாரையும் போட்டோ எடுத்து ப்ளூடூத் வழியா போலீஸ்ல மாட்டிவுட்டுருவேன்' அப்புடின்னு வேற சொல்லிக்கிட்டு இருக்காரு, //////

  இதென்னய்யா அநியாயமா இருக்கு...?

  ReplyDelete
 9. ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க,
  மொக்கமாமா Dr,புட்டிப்பால் நலமா?

  மொக்க மாமா விட்டா இப்பத்தான் பைனல் இயர் படிக்கறேன்னு சொன்னாலும் சொல்வார்.

  ReplyDelete
 10. ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க,
  மொக்கமாமா Dr,புட்டிப்பால் நலமா?

  மொக்க மாமா விட்டா இப்பத்தான் பைனல் இயர் படிக்கறேன்னு சொன்னாலும் சொல்வார்.

  ReplyDelete
 11. இரண்டுமாசம் கழிச்சு வந்தாலும் உங்க என்ட்ரிய ஆரவாரமா ஆரம்பிச்சுட்டீங்களே....கலக்குங்க.

  ReplyDelete
 12. ஹாலிவுட்ரசிகன் said...
  //ரொம்ப நாளைக்கப்பறம் பதிவிடுறீங்க. மகிழ்ச்சி மகிழ்ச்சி...//

  ரொம்ப நன்றிங்க.. இனிமே நேரம் கிடைக்கிறப்போவெல்லாம் பதிவிடுறோம்.

  ReplyDelete
 13. Yoga.S.FR said...

  //வெல்கம் பாக்!(WELCOM BACK)பதிவு சரியா"தெரிய"மாட்டேங்குது!(பிகர் மட்டும் நல்லா தெரியுது!ஹி!ஹி!ஹி!!!))//

  வணக்கம் ஐயா! பதிவு கெடக்குது கழுத, நமக்கு பிகர் தானே முக்கியம், அது தெரிஞ்சா போதுமே...

  ReplyDelete
 14. மனசாட்சி said...
  //வாங்க மொக்கராஸ்..ராக்ஸ்//

  நன்றி மனசாட்சி, மொக்கராசு மாமா எப்பவுமே ராக்ஸ் தான்...

  ReplyDelete
 15. Kumaran said...

  //நாட்கள் கழிச்சு வந்தாலும் சூப்பரான ரிஎண்ட்ரி கொடுத்துட்டீங்க..வணக்கத்தோட நன்றிங்க.//

  நன்றிங்க...

  ReplyDelete
 16. meyyappanram said...
  //regular a blog panugna mokka rasu mama.1985 la naan pirakave illai neegna periya apaptakkar than//

  ஓகே மெய்யப்பன், அவரு சாம்சுங் ஆண்ட்ராயிட் வச்சிருக்காருல்ல, இனிமே ரெகுலரா ப்ளாக் பண்ணுவாரு,

  ReplyDelete
 17. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  //வெல்கம் பேக் அப்பாட்டக்கர்ஸ்.....//

  நன்றிண்ணே..

  ReplyDelete
 18. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////உடனே இவரும் எதுக்கும்ன்னுட்டு நீங்க எந்த வருஷம் காலேஜ் முடிச்சீங்கன்னு கேட்டிருக்காரு, அதுக்கு அந்த அங்கிள் நைன்டீன் எய்ட்டி பைவ் அப்புடின்னிருக்காரு. நம்ம மாம்ஸ் வாயடைச்சுப் போயிட்டாரு. //////

  அடேங்கப்பா.... மொக்கராசுமாம ரொம்ப பவர்ஃபுல்லான ஆளுதான் போல.... பெரிய ரேஞ்சையே கவர் பண்ணி இருக்காரே?////

  அவரு ரேஞ்சே தனி... பத்மினில இருந்து சரண்யா மோகன் வரைக்கும் கவர் பண்ணுவாரு...

  ReplyDelete
 19. கோகுல் said...

  //ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க,
  மொக்கமாமா Dr,புட்டிப்பால் நலமா?//

  நன்றி தலைவா... நீங்க நலமா?

  //மொக்க மாமா விட்டா இப்பத்தான் பைனல் இயர் படிக்கறேன்னு சொன்னாலும் சொல்வார்//

  அவரு இன்னும் பால்குடியே மறக்கல, நீங்க என்ன பைனல் இயர் பத்தி பேசிக்கிட்டு.

  ReplyDelete
 20. கடம்பவன குயில் said...
  //இரண்டுமாசம் கழிச்சு வந்தாலும் உங்க என்ட்ரிய ஆரவாரமா ஆரம்பிச்சுட்டீங்களே....கலக்குங்க.//

  நன்றி சகோ...

  ReplyDelete
 21. விச்சு said...
  //வாங்க பாஸ்..//

  வந்துட்டோம் பாஸ்..

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள்!!