Saturday, September 1, 2012

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா இளையதளபதி?

இணையத்தளங்களில் அதிகம் கலாய்க்கப்படும் நடிகர் இளையதளபதி விஜய். ஏன் நாமே கூட நெறைய பதிவுகளில் அவர கலாய்சிருக்கம். இது ஏன்னு நம்ம பார்வையில் ஒரு அலசல்.


ரொம்பத்தான் யோசிக்கிறாரு, கண்டிப்பா கோட்டைய புடிச்சிருவாரு.
இணையத்தளங்களில் விஜய் கலாய்க்கப்படுவதற்கு வேறுபட்ட மூன்று காரணங்கள் இருக்கின்றன

1. பப்ளிசிட்டி - விஜயை கலாய்த்து ஒரு பதிவு போட்டால் நிச்சயம் ஹிட்ஸ் எகுறும். பின்னூட்டப் பெட்டி நிரம்பி வழியும். இலகுவாக பிரபலம் அடையலாம். இது பதிவுலகில் உள்ள அனைவருக்கும் தெரிந்த ஒன்று.  இது ஏன் என யோசிப்பவர்களுக்கு புரியக்கூடிய ஒரு விடயம் விஜய் ஆதரவாளர்களும் விஜய் எதிரிகளும் ஏறக்குறைய சம அளவில் இருப்பதும், மிக அதிக அளவில் இருப்பதும். (ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் தானே)

2. விஜய்  பண்ணும் அரசியல் - ரசிகர்களை பகடைக்காய்களாக்கும்  அரசியல் அண்ணன்கிட்ட நெறயவே இருக்கு. இதில் முக்கியமாக அப்பா - நம்ம அப்பா இல்லீங் தளபதியோட அப்பா, இந்த அப்பா, மகன் சம்பாதித்த கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்து பண்ணும் டிராமா. இது பலபேருக்கு பிடிப்பதில்லை. இங்கேயும் நஷ்டம் நம்ம தளபதிக்குதான்.

3. தளபதி கொடுத்த சமீபத்திய படங்கள்: இதுல ரெண்டு வகை இருக்கு. ஒன்னு பனமரம் படுத்தா பம்ப் அடிக்கற வகை. இன்னொன்னு நிஜமானா அன்பின் காரணமாக வருகிற ஏக்கம் (இந்த வசனத்த எழுதினவன் ஒரு கமல் ரசிகன் போல). நேத்து பேஞ்ச மழைக்கி இன்னக்கி மொளச்ச காளான் எல்லாம் ஹிட் குடுக்கறப்போ இவருக்கு  என்னாச்சிங்குற கவலை.

இது மூணும்தான் இளையதளபதி இணையத்தளங்களிலும், வலைப்பூக்களிலும்,  சோசியல் நெட்வர்க்களிலும் அதிகம் கலாய்க்கப்படுவதற்கு காரணமே. முதல் காரணத்துக்கு நாம ஒன்னும் பண்ண முடியாதது. ஒருவரின் பிரபலத்தில் ஒட்டிக்கொண்டு அவரை போற்றியும் தூற்றியும் பிரபலமாவது தமிழனுடைய மரபு, கலாசாரம். அது மாற்றப்பட முடியாத ஒன்று. இரண்டாவது காரணத்தை அலச நாம் அரசியல் பதிவர்கலில்லை, அந்த வேலைய வேறு நல்ல பதிவர்கள் கையில விட்டுட்டம். நாம நமது பிரச்சினைய மட்டும் விலாவாரியா பேசுவம். (அடங்கொக்காமக்கா, மறுபடியும் ஆரம்ம்பிச்சுட்டானுகளா, ச்சே  இந்த பதிவு இன்னம் முடியலியான்னு யோசிக்கறவங்க தயவு செய்தது ஒரு காப்பி குடித்துவிட்டு தொடரவும்) 

துப்பாக்கி வரட்டும்,  ஒங்கட டங்குவார அத்துபுடுறேன்
தளபதியோட படங்கள்ல நாங்க அதிகம் பார்த்த படம் காதலுக்கு மரியாதையோ, சிவகாசியோ கில்லியோ இல்ல, மாறாக வசீகராவும், சச்சினும்தான். வசீகரா தளபதி ஆக்ஷன் ஹீரோவா முழுசா ஜெயிக்கறதுக்கு முதல் வந்த படம். ரோமன்டிக்கா, ஆக்ஷனான்னு யோசிக்கிட்டு இருந்தப்போ வந்தது. சச்சின் இவரு ஆக்ஷன் ஹீரோவா சக்க போடு போட்டுக்கிட்டுரிந்தப்போ வந்தது. தளபதி பீக்ல இருக்கற நேரம் வந்தது. . சச்சின் (நான் என்ன பண்ண, இது மனுபாக்ச்சரிங் டிபாக்ட் - இந்த டயலக மறந்தவங்க இதுக்குமேல இந்த பதிவ படிக்காம இருக்கறது நலம்) நம்ம தளபதி ரொம்பவே நம்பிக்க வச்சி நடிச்ச படம், அந்த படம் வந்தப்போ தளபதி என்ன சொன்னார்னா "இந்த கதைக்காகதான் நான் இவ்வளவு நாளும் காத்துக்கிட்டிருந்தேன்" (இதேதான் வேட்டைக்காரனுக்கும் சொன்னாரு, சுறாக்கும் சொன்னருங்கிரீங்களா? சரி, டீல்ல விடுங்க). ஆனா அந்த படத்தோட ஒன்லைனர் குஷி படத்தோட ஒன்லைனரா இருந்ததாலேயும், ஸ்க்ரீன்ப்ளே நெறைய ஒற்றுமைகள கொண்டிருந்ததாலேயும் மக்கள் அந்த படத்த ஏத்துக்கல, ஆனா நிஜமாலுமே தளபதியோட காமெடி நடிப்பில் இந்த படம் ஒரு மயில் கல். ஆனா அத நம்ம தளபதி தப்பா புரிஞ்சுகிட்டாரு. மக்கள் நம்மள ஆக்ஷன் ஹீரோவா மட்டும்தான் பாக்குறாங்க ரொமாண்டிக் ஹீரோவா இனிமே நாம நடிக்கவே கூடாதுன்னு முடிவு பண்ணிட்டாரு. தொடர்ச்சியா ஆக்ஷன் படங்கள் குடுத்தாரு, இதுல சிவகாசி சரவெடி.. அப்புறமா ஒரு சறுக்கல், மறுபடியும் போக்கிரி, அப்புறம் சில சறுக்கல்கள், சமீப காலாமாகவே சிவகாசி மாஜிக் மறுபடியும் வர்க்அவுட் ஆகாதான்னு அதே பாணில தொடர் சறுக்கல்கள். அப்புறமா மறுபடியும் ரொமாண்டிக் ஹீரோ சப்ஜெக்ட்ல ஒரு கம்பாக் படம். சச்சின் தோல்வியில தளபதி எடுத்த தப்பான முடிவு இன்னம் அவர பாதிச்சிட்டு இருக்கு. காவலன் படம் பாத்திங்கன்னா இது புரியும், சச்சின்ல இருந்த துள்ளலும், இளமையும், குசும்பும் நிஜமா சொன்னா காவலன்ல இல்ல, கொஞ்சம் பயத்தோடயேதான் ஆக்ஷன் இமேஜ விட்டுகுடுத்திருப்பாரு. இதுதான் ஹிஸ்டரி.

சூப்பரு... தளபதியோட ஹேர் ஸ்டைல சொன்னேன்... 
ஜியாக்ரபி என்னனா (குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா) இதெல்லாம் சரியா ஓடாததுக்கு உண்மையான காரணம் எப்பிடி படம் நடிச்சாலும் ஓடும்னு நெனச்சிட்டு நடிப்புலயும் ஏன் நடனத்திலையும் கூட காட்டின போடுபோக்குதனம்தான். படத்துக்கு ஸ்கிரிப்ட், ஸ்க்ரீன்ப்ளே, டைரக்சன் (இதெல்லாம் எங்க விக்கிது?) முக்கியமே இல்ல நான் ஸ்க்ரீன்ல வந்து பஞ்சு டைலாக் பேசி ஆறு சண்ட போட்டா படம் ஓடும்னு நெனச்ச ஓவர் கான்பிடன்ஸ் (இதனால்தான் தல ஓவர்கான்பிடன்ஸ் ஒடம்புக்கு கெடுதின்னு சொன்னாரோ!). இதுக்கெல்லாம் மேல விஜயின் அரசியல அவரு படங்களுகுள்ளையும் ஓடவிட்டது. "தளபதி" அப்பிடின்குற இமேஜ் இருக்கற மாதிரியே பாத்து பாத்து கதைகள தேடினது, தேவையே இல்லாம அரசியல் அடித்தளம் போட தொடங்கினது இப்படின்னு அடுக்கிகிட்டே போகலாம். விஜயின் தோல்விகளுக்கு காரணம் அவரே ஒழிய வேறில்லை.

இப்ப நீங்க சச்சின் படத்தையும் சுறா படத்தையும் எடுத்து பாத்திங்கன்னா ஒங்களுக்கு புரியும். அக்ஷன் காட்சியா இருக்கட்டும், ரொமாண்டிக் காட்சியா இருக்கட்டும், காமெடியா இருக்கட்டும், நடனக் காட்சிகளா இருக்கட்டும், பாடல்களா இருக்கட்டும், நடிப்பா இருக்கட்டும் எதுலயுமே சச்சின்ல இருக்கற தரம், நேர்த்தி, உழைப்பு இவரோட அண்மை கால படங்கள்ல இல்லைங்குறது மறுக்கமுடியாத உண்மை. மீண்டும் நமக்கு அந்த துடிப்பான விஜய் வேண்டும், அது வரும் வரைக்கும் நாங்க அவர கலாய்க்கிறது தொடர்ந்துகிட்டே இருக்கும் (இது அன்புக்கலாய்).

காவலன், வேலாயுதம், நண்பன் வரிசைகள்ள "துப்பாக்கி"  அவற்றையும் தாண்டி  ஒரு மாபெரும் ஹிட் ஆகி விஜயோட தலையெழுத்த மாத்தும், அவரோட மட்டுமில்ல, தமிழ் சினிமாவோட, ஏன் குளிர்விட்டு போனதால ஆட்டம்  போடும் வேறு சில நடிகர்களோட தலையெழுத்தையும் சேர்த்து தீர்மானிக்கும்,  என்னும் நமது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா  இளையதளபதி?

15 comments:

  1. Ennaku therinju " super star'ku apuram namma " Thala " thaan yedhir parpa full fill pannuraru.. Idhu world 2'ke.. Theriyum..

    ReplyDelete
  2. @pandiya

    //Ennaku therinju " super star'ku apuram namma " Thala " thaan yedhir parpa full fill pannuraru.. Idhu world 2'ke.. Theriyum..//

    ஓ நீங்க ராசு மாமா ஆளா? எனக்கு தெரிஞ்சு அது நம்ம தலதளபதி மட்டும்தான். விடுங்க பாஸ், நண்பன் வரட்டும் நம்ம பஞ்சாயத்த அப்புறம் வச்சுக்குவம்.

    ReplyDelete
  3. அதனால இன்னில இருந்து நான் தளபதி ரசிகன் ஆகிடலாம்னு இருக்கன்//

    ஒங்க பதிவ பார்த்தால் அப்படித் தெரியலயே....தளபதிய வாரு வாருன்னு வாரியிருக்கிறீங்களே....

    நீங்க நல்லவரா கெட்டவரா??????????

    ReplyDelete
  4. @கடம்பவன குயில்

    அதனால இன்னில இருந்து நான் தளபதி ரசிகன் ஆகிடலாம்னு இருக்கன்//

    ஒங்க பதிவ பார்த்தால் அப்படித் தெரியலயே....தளபதிய வாரு வாருன்னு வாரியிருக்கிறீங்களே....

    நீங்க நல்லவரா கெட்டவரா??????????

    நம்ம யாரு ரசிகனோ அவர வார்ரதுதானே தல தளபதி ஸ்டைல். இது திருஷ்டிக்கு, இனிமேதான் வேலாயுதம் ஆட்டம் தொடங்கும்.

    ReplyDelete
  5. தலக்கு ஒருத்தர்...தளபதிக்கு ஒருத்தரா.... தல படத்துல தளப்தி நடிச்சு... அவங்க ஃபிரண்ட்ஸிப்ப காட்டிட்டாங்க நீங்க பிரிஞ்சிட்டீங்க...ம்ம்ம்ம் எப்படியோ... பதிவு நல்லா அலசிருக்கீங்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. பிரபலங்களை வைத்துக் கலாய்த்து மகிழ்வோர் தொடர்பிலும், விஜயினை தலையினை உருட்டி மகிழும் எழுத்தாளர்களுக்கும் சாட்டையடி கொடுத்திருக்கிறீங்க.

    மொக்கையும் நிரம்பி வழிகிறது,
    நல்ல பதிவு நண்பா.

    ReplyDelete
  7. @மாய உலகம்

    நன்றி ராஜேஷ். நாங்க எப்பவுமே தலதளபதி ரசிகர்கள்தான். அதுக்காக தளபதிய விட்டுகுடுக்கலாமா?

    ReplyDelete
  8. @நிரூபன்
    வாங்க தலைவரே,

    //பிரபலங்களை வைத்துக் கலாய்த்து மகிழ்வோர் தொடர்பிலும், விஜயினை தலையினை உருட்டி மகிழும் எழுத்தாளர்களுக்கும் சாட்டையடி கொடுத்திருக்கிறீங்க.//

    நீங்க நம்ம ராசு மாமாவதானே சொல்றீங்க? (அப்பாடா கிரேட் எஸ்கேப்)

    ReplyDelete
  9. ப்ரெசென்ட் சார் .....

    இப்போதைக்கு இவ்ளோ தான்..

    ReplyDelete
  10. @Christopher(உதவாக்கரை)
    //ப்ரெசென்ட் சார் .....//
    ஹோம் வொர்க் எல்லாம் செஞ்சாச்சா?

    ReplyDelete
  11. நடிகர்களை பற்றிய நல்ல செய்திகள் பாராட்டுகள்

    ReplyDelete
  12. @மாலதி
    நன்றி.. தொடர்ந்தும் வாங்க..

    ReplyDelete
  13. ஒருவரின் பிரபலத்தில் ஒட்டிக்கொண்டு அவரை போற்றியும் தூற்றியும் பிரபலமாவது தமிழனுடைய மரபு, கலாசாரம். அது மாற்றப்பட முடியாத ஒன்று....//

    சரியாகச் சொன்னீர்கள் வாழ்த்துக்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு .ஓட்டெல்லாம் போட்டாச்சு சகோ .......

    ReplyDelete
  14. //அம்பாளடியாள் said...

    சரியாகச் சொன்னீர்கள் வாழ்த்துக்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு .ஓட்டெல்லாம் போட்டாச்சு சகோ .......

    நன்றி சகோ, பதிவுக்கும் ஓட்டுக்கும்...

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்!!