Showing posts with label கும்ப்ளிங். Show all posts
Showing posts with label கும்ப்ளிங். Show all posts

Sunday, November 6, 2011

நிர்வாண மிருக நேயமும் இளைய தளபதி பிளாட் ஜெனேரேட்டரும் -: கும்ப்ளிங் கும்ப்ளிங் 6/11/2011


PeTA, PeTA ன்னு ஒரு அமைப்பு இருக்கு. "பீபில் பார் எதிக்கள் ட்ரீட்மென்ட் ஆப் அனிமல்ஸ்" என்பதுதான் அதன் விரிவாக்கம். கொஞ்ச நாளுக்கு முன்னாடி நாய்களை தத்து எடுங்கள்ன்னு நம்ம திரிஷாவ வச்சு இந்தியாவுல ஒரு பெரிய காம்பைன் பண்ணினாங்க. அந்தம்மா மிருக நேயம் நெறஞ்சவங்க, அவங்க வளர்க்குற நாய் கூட தத்து எடுத்ததுதான்-பின்ன அவுங்க நாய பெத்தா எடுக்க முடியும்- அதனால அவங்கதான் இதுக்கு மிகப்பொருத்தமாக இருப்பாங்கன்னு சொன்னாங்க, த்ரிஷா பத்தி கிசு கிசு மட்டுமே எழுதற பலபேர் கூட அந்தம்மாவோட மிருக நேயத்த பாராட்டி கட்டுரயெல்லாம் எழுதினாங்க. என்னடா இது புதுசா இருக்கேன்னு யோசிச்சிட்டே இருந்தேம். அப்புறமாதான் நமக்கு  அவுங்க மிருக வதைக்கு எதிராக எல்லோரையும் வெஜிடேரியன் ஆகும்படி ஒரு காம்பைன் நடத்தின சில படங்கள பார்க்க கிடைச்சுது, அதுக்கப்புறமாதான் அவங்க காம்பைன் திட்டங்கள வாசிச்சா, பாதிக்கு மேல நிர்வாணத்த மையப்படுத்தியது. அது ஏன்னு ஒரு அழகான விளக்கம் குடுத்திருக்காங்க, "இலாப நோக்கமற்ற நிறுவனமான எங்களுக்கு விளம்பரம் செய்வதற்கு கோடி கோடியா பணம் கிடைக்கிறது கஷ்டம், ஆனா இவ்வாறான ஒரு காம்பைன் பண்ணினா இலவச விளம்பரம் கிடைக்கும், நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவுமே தப்பில்ல" அப்புடின்னு இருக்கு அந்த விளக்கம். இப்ப புரியுதா அவங்க எதுக்கு த்ரிஷாவ தெரிவு செஞ்சாங்கன்னு?

ஒஸ்தி படத்துல நடிக்கிற பொண்ணு..எவன்யா டைரக்டர்?
ஒஸ்தி படம் ரிலீஸ் மறுபடியும் தள்ளி போச்சாம், 11/11/11 க்கு வரும்ன்னு எதிர்பார்க்கப்பட்ட படம், அதேபோல  மயக்கம் என்னவும் 18/11/11தான் ரிலீஸ்ன்னு செல்வா சொல்லிட்டாரு. சித்தார்த்தோட தெலுங்கு படமான ஓ மை ப்ரெண்டு மட்டும்தான் இந்த டேட்டுக்கு வரும் போலிருக்கு. சிதார்த்தோட படம் பத்தி ஏன் சொல்றோம்னா அதுல ரெண்டு ஹீரோயின், ஒன்னு ஸ்ருதி, மத்தது ஹன்சிகா. வேலாயுதம் வெற்றிக்கு அப்புறமா ஹன்சிகா நமக்குதான்னு பதிவுலகத்துல ஒரு பெரிய நம்பிக்க துளிர் விட்டு இருந்தாலும் இந்த படம் ஜெயிச்சா மறுபடியும் தெலுங்கு வாலாக்கள் கொத்திக்கிட்டு போயிட வாய்ப்பு இருக்கு. ஏன்னா ஹன்சிகாவோட ஆகஸ்ட் வெளியீடு தெலுங்கு படம் kandireega பெரிய வெற்றி, அதே போல வேலாயுதமும் வெற்றி, அதனால ஒ மை பிரெண்ட் படத்துக்கு லக்கி சார்ம் ஹன்சிகாதான்னு சித்தார்த் சொல்றாரு.  அதுதான் எதுக்கும்னு சொல்லி வச்சுக்கறோம். என்னென்ன பூஜையெல்லாம் பண்ண இருக்கோ இப்பவே ரெடியாகுங்கப்பா.

எனக்கே எனக்கா?
வேலாயுதமும் ஏழாம் அறிவும் அசாசின் கிரீட் அப்புடின்குற ஒரு வீடியோ கேமோட காப்பின்னு ரெண்டு படமும் ரிலீஸ் ஆக முதல்லையே பெரிய கலவரமே நடந்திச்சு. இது என்னடா அநியாயமா இருக்குன்னு யோசிச்சுக்கிட்டே இருந்தோம், ஹாலிவூட் காரங்க மட்டும் நம்ம தமிழ் படங்கள காப்பி பண்ணலாம் நம்மாளுக பண்ண கூடாதா? ஏற்கனவே குருவி படத்த காப்பி பண்ணி வந்த ரெண்டு ஹாலிவூட் படங்கள பத்தி நாங்க பதிவு போட்டது எல்லாருக்குமே தெரியும், இப்போ புதுசா இன்னுமொன்னு, அதுதாங்க அந்த ஜானி இங்க்லீஷ் படத்துல நம்ம தளபதியோட சிவகாசி இன்ட்ரோடக்ஸன் சீன அப்புடியே காப்பி அடிச்சிருக்காங்க, தளபதி வெல்டிங் பீம் வச்சு கதவ அவரு ஷேப்புக்கே வெட்டி எடுத்து வெளிய வருவாரே, அதே தான் அங்க ஒரு கார் லேசர் பீம் வச்சு காரோட ஷேப்புக்கே கதவ வெட்டி வெளிய வரும். யாருக்கிட்ட, நாங்கெல்லாம் தளபதி படத்த இம வெட்டாம பாக்குறவங்களாச்சே, நம்மள ஏமாத்த முடியுமா, சூரியா படத்த பாலிவூட்ல ரீமேக் பண்றாங்கன்னா தளபதி படத்த ஹாலிவூட் காரங்க சுடுறாங்க, தளபதி மாஸ சொல்ல வேற எதனாச்சு வேணுமா? நிலைமை இப்புடி இருக்க இந்த அநியாயத்த கொஞ்சம் பாருங்க, இளைய தளபதி பிலாட் ஜெனேரேட்டர், இதுல படத்துல தளபதியோட பெயர், கூட நடிக்கற காமெடியன், தங்கச்சி பெயர் அப்புடி கொஞ்சம் விசயங்கள குடுத்தா படத்தோட கதை வர்ற மாதிரி பண்ணி வச்சிருக்காங்க. என்னா ஒரு எகத்தாளம்.அப்புறம் எதுக்கு ஜெயம் ராஜா,பாபு சிவன், பிரபு தேவா எல்லாம் இருக்காங்க?


கார்த்தி கார்த்தின்னு ஒரு மார்கட்டே இல்லாத தமிழ் சினிமா நடிகர் இருக்காராமே, அவரு எதோ சகுனின்னு ஒரு படம் நடிக்கராராமாம். அந்த படத்துல ஹீரோயின்னா ப்ரனிதா பொண்ணு நடிக்குதுன்னும், காமெடிக்கு தலைவர் சந்தானம் இருக்காருன்னும் உங்க எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும், இப்போ என்னடான்னா அந்த படத்துல புதுசா அனுஷ்கா வேற ஒரு முக்கியமான காரெக்டர் பண்றாங்களாம், ஏற்கனவே ராதிகா சரத்குமார், ரோஜா, மும்தாஜ்ன்னு ஒரு பட்டாளமே இருக்கு, போதும் போதாததுக்கு ஸ்ரேயா வேற நடிக்கறதா அரசல் புரசலா ஒரு கத இருக்கு. எதுக்குடா இம்புட்டு பெரிய பட்டாளத்த வச்சு நடிக்க வக்கிராங்கன்னு யோசிச்சிட்டே இருந்தோமா, நேத்துத்தான் அது எதுக்குன்னு வெளங்கிச்சு, ஒன்னுமில்லைங்க, இந்த கார்த்தி பய அவரோட மார்கெட் நிலவரம் தெரியாம தளபதியோட காவலன் படத்துக்கூட சிறுத்தைன்னு எதோ ஒரு படம் ரிலீஸ் பண்ணி அட்ரசே தெரியாம போச்சாமே, இப்பவும் சகுனி பொங்கலுக்குதான் வரும் போல இருக்காம், ஏற்கனவே நண்பன் பொங்கல் ரிலீஸ்னால ரொம்பவே பயந்து போயிதான் இப்படி நட்ச்சத்திர பட்டாளமா போட்டு நிரப்புறதா கோடம்பாக்கத்துல ஒரு பேச்சு இருக்கு. ஆனானப்பட்ட ரஜனிகாந்தே நண்பனுக்கு பயந்து ராணாவ தள்ளிப்போட்டப்போ, கார்த்தி என்ன கார்த்தி... (இத நீங்க நம்பினா முட்டாள், இல்லன்னா சைக்கோ எப்புடி வசதி?)


அழகே உன்பெயர்தான் சமந்தாவோ...


Monday, September 26, 2011

ஏழாம் அறிவு, அஞ்சலி, காஜல், பவர் ஸ்டார்: கும்ப்ளிங் கும்ப்ளிங் - 25/09/2011

வெல்கம் டு கும்பளிங் கும்பளிங். இதென்ன டூரா? ஆமா சார், உருப்படியா ஏதாச்சும் பதிவு போடுங்கன்னு ஆளாளுக்கு மெயில்ல மெரட்றாங்க (நாங்க என்ன வச்சுகிட்டா வஞ்சகம் பண்றோம்) அதனால இனிமே வாரா வாரம் நாங்க பார்த்த, ரசிச்ச விடயங்கள தொகுக்குறதா முடிவு பண்ணிட்டோம். ஆளாளுக்கு கொத்துபராட்டா போடறாங்க, அவுங்களா யோசிச்சுக்கிறாங்க, நாங்களும் போடுவோம்ல, அதுதான் இந்த கும்பளிங் கும்பளிங்.

இது தேறாதுன்னு முடிவு பண்ணிட்டாங்களாமே உண்மையா? 
தலைவர் படம் வந்தான் வென்றான் அப்புறம் எங்கேயும் எப்போதும்ன்னு ஒரு படம்  வந்திருக்கே, இந்த சுகாசினி அம்மா என்ன சொல்றாங்கன்னு பாப்போமேன்னு ஹாசினி பேசும் படத்த தேடினா, ஜெயா டிவில இருந்தே அவுங்கள தூக்கிட்டாங்களாமே, இப்போ நம்ம மதன் சார்தான்  அந்த புரோகிராம செய்றாராம், விசாரிச்சு பாத்ததுல அவுங்க விமர்சனத்துக்கு நாங்க எழுதின எதிர் விமர்சனத்த பாத்துட்டுத்தான் அப்புடி பண்ணினதா மீடியா வட்டாரத்துல பேசிக்கறதா சொல்றாங்களே உண்மையாவா? பச்சத்தண்ணிய குடிச்சுட்டு பாயசம் சாப்பிட்டதா பில்டப் குடுக்குறதும்பாங்களே ஒரு வேள அது  இதுதானா?

ஏழாம் அறிவு ஆடியோ வெளியீட்டு விழால இயக்குனர் விஜய் பேசறப்போ, “இதுவரை ஆங்கிலப் படங்களைத்தான் ரெஃபரன்ஸுக்கு வைத்துக் கொள்வார்கள் தமிழ் இயக்குனர்கள். இனி ஏழாம் அறிவை அந்த லெவலில் வைக்கலாம். தமிழ்ப் படங்களை உலகமே பார்க்கிறது. அந்த வகையில் இனி ஹாலிவுட் காரர்களும் இந்தப் படத்தை ரெபரன்ஸுக்கு வைக்கும் அளவுக்கு படம் உள்ளது” அப்புடின்னு சொல்லி இருக்காராம். ஒரு வேள இந்த 7ம் அறிவு படத்த இன்ஸ்பிரேஷனா வச்சுகிட்டு ஒரு படம் இயக்குறது இவரோட அடுத்த கட்ட திட்டமா இருக்குமோ? பட் இந்தாளு நேர்ம நமக்கு புடிச்சி இருக்கு. இதுக்கே எத்தன நாளக்கிடா செத்த பாம்பையே அடிப்பீங்கன்னு கடுப்பாகுரீங்களே, அப்புடின்னா அல்கா அஜித் பாடிய சிறகெங்கு என்கிற மலையாள பாடலை டவுன்லோட்பண்ணி சீக்கிரம் சுடனும்ன்னு  வெள்ளிகிழமை  இரவு நடந்த எயார்டெல் சூப்பர் சிங்கர் கிராண்ட் பினாலேவில் தனுஷ், ஜி.வி.பிரகாஷ் தோள்ல கைய போட்டுகிட்டே சொன்னாரே அத என்ன சொல்றது? அது உள்குத்தா, வெளிகுத்தா இல்ல கும்மாங்குத்தா? ஆனா ஒன்னு, பல பேரோட ஃபேவரிட்டான சத்தியபிரகாஷ்க்கு தன்னோட "3" படத்துல வாய்ப்புகுடுக்கறதா ட்வீட் பண்ணியிருக்கறத கண்டிப்பா பாராட்டனும்.



எங்களோட ஏழாம் அறிவு பாடல் விமர்சனத்த படிச்சிட்டு இலங்கையில இருந்து வாசக நண்பர் ஒருவர் நமக்கு ஒரு மெயில் தட்டியிருந்தாரு, அதுல இந்த வீடியோ இணைப்பு இருந்திச்சி(பிண்ணனில போறது அவுங்க நாட்டு ஒவ்வொரு பிரண்டும் தேவ மச்சான்). அப்புடியே ரிங்கா ரிங்கா பாட்ட ஓடவிட்டா ஏழாம் அறிவு ஹீரோ இன்றடக்சன் சாங் பாக்க தேவயில்ல, அதேதான் எடுத்திருக்காங்க, வீடியோவையும் கூடவே ரிலேடட் வீடியோக்களையும் பாருங்க, முருகதாஸ் காப்பி அடிச்சுட்டர்ன்னு ஒரே பந்தா, நிச்சயமா படம் வந்ததுக்கப்புறம் சுட்டுட்டாங்கன்னு நெறையபேர் கூச்சல் போட போறாங்க, அந்த அளவுக்கு வேற வேற வீடியோக்கள் இருக்கு. அதனால இப்பவே  சொல்லிக்கறோம், இது ப்ளாஷ்மெப் அப்பிடின்குற வகை. இதுக்கு காபி ரைட்ஸ் எல்லாம் தேவையில்ல, யாரு வேணும்னாலும் பண்ணலாம். மேலதிக விபரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

நம்ம சிவகார்த்திகேயன் தம்பி அது இது எது ப்ரோக்ராமுக்கு வந்திருந்த ஜெய்கிட்ட உங்களுக்கு எப்படிப்பட்ட பொண்ணு பொண்டாட்டியா வரணும்ன்னு கேட்டதுக்கு அவரு அந்த எங்கேயும் எப்போதும் மணிமேகல மாதிரி பொண்ணுதான் வேணும்ன்னு  சொல்லிட்டு, ப்ளூ ஜீன்ஸ் வைட் டீஷர்ட்  போட்ட பொண்ணா இருந்தாகூட ஓகேன்னு அஞ்சலிய பாத்துகிட்டே சொன்னாரு.  மேட்டர் என்னான்னா அன்னிக்கு அஞ்சலி பாப்பா ப்ளூ ஜீன்ஸ் வைட் டீஷர்ட்ல வந்திருந்தது மட்டுமில்ல,  நான் ரியல் லஃப்லையும் எங்கேயும் எப்போதும் மணிமேகல மாதிரி பொண்ணுதான்னு ஸ்டேட்மென்ட் வேற குடுத்திருந்திச்சு. அப்புடின்னா  நாங்க கேள்விப்பட்ட கிசு கிசு எல்லாமே உண்மையா? இந்த நியூஸ வாசிச்சிட்டு எத்தின பதிவர்கள் ஹார்ட்அட்டாக் வந்து சோனா அட்மிட் ஆன அதே ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகப்போராங்களோ?

நல்லாதானே இருந்தாங்க, ஏன் மறுபடியும் இப்புடி ஆகிட்டாங்க?
ஹாஸ்பிட்டல்னதும் தான் ஞாபகத்துக்கு வருது, சமீபத்துல பவர் ஸ்டார்  பேட்டி ஒன்னு பார்க்கக் கெடச்சிச்சு. பவர் ஸ்டார் அவர நம்பி இருக்கற அஞ்சு லட்சம் ரசிகர்களுக்காக கான்சசன் ரேட்டுல பைத்தியம் சாரி வைத்தியம் பாக்குற திட்டம் பத்தி சொன்னாரு, அப்புறம்தான்யா வெளங்கிச்சு அவரு ஏன் நடிக்க வந்தாருன்னு, ரெண்டு ஹாஸ்பிட்டல் கட்டி வச்சிருக்கருல்ல, கூட்டம் வர வேணா, எல்லாம் ஒரு விளம்பரம்தான். அதுசரி, கேள்வி கேக்குறவன் எதுக்கு கில்மா பட போஸ்டர் மாதிரியே போஸ்டர் ஒட்டுரீங்கன்னு சுத்தி வளச்சி கேக்குறதுகூட புரியாம சீரியஸா பதில் சொல்ற ஆளு இம்புட்டு யோசிச்சிருப்பாருங்குறீங்க, டீல்ல விடுங்கப்பா.

ஒருவேள நிஜமாவே இந்த காஜல் பொண்ணுக்கு மர கழண்டுருச்சான்னு நமக்கு ஒரு கன்பூஷன். கொஞ்ச நாளா எந்த மேகசீன பாத்தாலும் டிரெஸ்ஸ கழட்டிட்டு போஸ் குடுக்குது, அப்புறமா அது நான் இல்லன்னு பேட்டி குடுக்குது. FHM மேகசீனுக்கு குடுத்த போடோவோட சலசலப்பே இன்னும் அடங்கல இந்த மாத பிலிம்பேர் மேகசினோட அட்டைப்படமும் அம்மணிதான், ஆனா என்ன பயத்துல புறமுதுகு காட்டி நிக்குது.   பாலிவூட் பட ஆசைதான் இந்த பொண்ண இம்புட்டு பாடுபடுத்துதின்னு வெளில பேசிக்கறாங்க. பாலிவூட் பட வாய்ப்பு கெடைக்குதோ இல்லையோ நெறைய பிட்டுப்பட வாய்ப்பு கெடைக்குதாம். ஏம்மா, ப்ளே பாய்ன்னு ஒரு மேகசீன் இருக்காமே, அதுல போட்டோ வந்தா டைரெக்டா ஹாலிவூடுக்கே போயிடலாமே, அத விட்டுட்டு எதுக்கு வீணா லோகல்ல ட்ரை பண்ணிக்கிட்டு. இது கிக்கான பிகருதான் ஆனா கன்போமா மக்கு பிகரு. நமக்கு ஒன்னு மட்டும் புரியல, ஏன் இந்த கலாசார காவலர்கள் இன்னும் போராட்டம் நடத்தல?
பண்ணறதையும் பண்ணிட்டு என்ன கோபமா லுக்கு வேண்டி கெடக்கு.

ஆங், ஒரு முக்கியமான மேட்டர், நல்ல வேள போராட்டம்னதும்  ஞாபகம் வந்திரிச்சு, ஐ போன், ஐ பாட், ஐ போட், ஆப்பிள் மெக்ன்னு என்னமோ எல்லாம் இருக்காமே, அதுல எல்லாம் தலைவரோட பெயர டைப் பண்ணினா அது என்னமோ "lanthanam" அப்பிடின்னு திருத்துது. அதனால அதுகளுக்கு எதிரா ஒரு போராட்டம் பண்ணலாம்னு இருக்கோம். இந்த ஆப்பிள் கம்பனிக்கு முன்னால உண்ணாவிரதம் இருக்க யாரெல்லாம் வாறீங்க? (தமிழேன்டா!!!)

வர்ற அக்டோபேர்ல நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்ல அம்மா, தாத்தான்னு ஆளாளுக்கு சிங்கம் சிங்கிளா வரும்னு ஸ்டேட்மென்ட் குடுகுறாங்க  (தேர்தலா இல்ல இது என்ன வண்டலூர்  Zoo வா). அம்மாவே சரணம்னு இருந்த கேப்டன் இப்ப என்னா பண்றதுனே  தெரியாம முழிச்சிக்கிட்டு இருக்காரு. நம்ம டவுட் என்னன்னா இந்த வாட்டி உள்ளாட்சி தேர்தல்ல அம்மா கட்சில நிக்கிறதுக்கு சீட் வாங்கி தர்றேன்னு நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களுக்கு உறுதிமொழி வழங்குனாரே நம்ம டாக்குட்டர் அப்பா, அம்மா ரிலீஸ் பண்ண வேட்பாளர் லிஸ்ட்ல  அவுங்க பேர் எல்லாம் இருக்கா? அப்புடி இல்லன்னா அவுரு மூஞ்சிய எங்க கொண்டு  போய் வச்சுப்பாரு?

சரிப்பா இன்னிக்கி நாங்க போட்ட மொக்கையில ரொம்ப கடுப்பாகி இருப்பீங்க, உங்கள ஆசுவாசப்படுத்தறதுக்காக இந்த வீடியோவ பாருங்க, இதுல உள்ள தொப்பி போட்ட ஆசாமிகள் யார்ன்னு புரியுதா? என்னமா யோசிக்கராங்கய்யா..



டிஸ்கி 1: சில பல அரசியல் காரணங்களால் இந்த வார பதிவுலக ரவுண்டப் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.  அது என்ன அரசியல் காரணம்னு யோசிக்கறீங்களா? ஒன்னும் இல்லங்க, இந்த வாரம் கொஞ்சம் பிசி ஆகிட்டதால நிறைய வலைப்பூக்கள படிக்க முடியல, அம்புட்டுதேன்.