என்னன்னே தெரியலப்பா, ஹாலிடே சீசன் ஆபர்ன்னு ஒவ்வொரு நாளும் ஏழெட்டு ஈமெயில் மட்டும் வருது, ஆனா அந்த ஹாலிடேஸ் எப்பன்னே தெரியல, ஆபிஸ்ல வேல மட்டும் கொறஞ்ச பாடில்ல. ஊருக்குள்ள அவன் அவன் ஒரே ஒரு பாஸ வச்சிக்கிட்டே சங்க அத்துக்கிட்டு திரியறானுக, நாலு பாஸ் இருக்கற நான் படுற அவஸ்த இருக்கே.....
கொலாபரேசன் வோர்க்குன்னுட்டு நாலு காம்பெனில இருந்து நாலு பாசு நமக்கு, அதுல ஒருத்தரு நம்ம மேல பிரியப்பட்டு ஒரு பார்டிக்கு கூப்பிட்டாரு, பார்ட்டின்னா அந்த பார்ட்டி இல்லங்க, வேல விசயமா எதோ ஒரு டிஸ்கஷனாம், அது முடிஞ்சதும் பார்டியாம்னு சொல்லியிருந்தாரு, மறந்துடாம இருக்கனும்ன்னு ஒரு மெமோ வேற அடிச்சு குடுத்திருந்தாரு. நமக்குதான் எந்த எடத்துக்கும் நேரத்துக்கு போற பழக்கம் இல்லையே, ஆனா பார்டிக்கு நேரத்துக்கு போயிரனும்ன்னு கூட வேல பாக்குற நம்ம நண்பருக்கிட்டையும் சொல்லி வச்சிருந்தேன். பார்ட்டி சரியா ராத்திரி எட்டு மணிக்கு ஆரம்பிக்குது, நாம போற எடம் ஒரு மணி நேர வண்டி ஓட்டம், சரி அப்போ ஆறு மணிக்கெல்லாம் புறப்படனும்னு சரியா நேரத்துக்கே வண்டில ஏறிட்டோம், எல்லாம் ஒரு முன்ஜாக்கிரததான்.
வண்டில ஏறி நம்ம நண்பருக்கிட்ட மெமோவ பாத்து GPS ல அட்ரெஸ போடுப்பான்னு சொல்லிட்டு, வண்டிய கெளப்பிட்டேன். அவரும் நவிகேசன் எல்லாம் போட்டு வச்சாரா சரியா ஆறு நாப்பதுக்கெல்லாம் லோகேசன் போயிட்டோம். அது நம்ம பாஸோட ஆபிஸ், அங்க பார்த்தா பார்டிக்கான அடையாளம் எதுவுமே இல்ல. என்ன வம்பாபோச்சே நம்ம நேரத்துக்கே வந்துட்டம் போலிருக்கே, இப்போ என்ன செய்யலாம்னுட்டு சரி ஆபிஸ சுத்திப்பார்போம்ன்னு கொஞ்ச நேரம் சுத்தினோம், ஆபீஸ்ல செக்கியூரிட்டிய தவிர ஒரு ஈ காக்கா கூட இல்ல, அப்பத்தான் திடீர்ன்னு ஒரு ஞானம் வந்து அந்த மெமோவ எடுத்து பார்த்தேன். மெமோ ஸ்லிப்புல மேலே ஹெட்டர்ல இருக்கற அட்ரசுக்கு நம்ம மாப்ள நவிகேசன் போட்டிருக்கறது அப்பத்தான் தெரிஞ்சிச்சு, கீழே லோகேசன் அப்புடின்னு வேற ஒரு ஹோட்டல் பெயர் போட்டிருக்கு, மறுபடியும் அதுக்கு நேவிகசன் போட்டோம், ஒரு மணிநேர தூரம்ன்னு வந்திச்சு, நல்ல வேளை நேரத்துக்கே வந்ததுன்னு நெனச்சிக்கிட்டு, மறுபடியும் கெளம்பினோம்.
எப்படியும் எட்டு மணிக்கு கரெக்டா போயி சேந்திடனும்ன்னு , வேகமாவே வண்டி ஓட்டினேன், டான்னு எட்டு மணிக்கு ஹோடெல்ல, நாங்க போறப்போ எல்லாரும் சாப்பிட்டுட்டு இருக்காங்க, நம்ம பாஸூ நம்மள கேவலமா ஒரு லுக்கு விட்டுட்டு, வந்ததுதான் வந்துட்டீங்க சாப்பிடுங்கன்னு சொன்னாரு, என்னாடா இது நாம கரெக்டா நேரத்துக்கு வந்தும் இந்தாளு இப்படி சொல்றாரேன்னு யோசிச்சிக்கிட்டே சாப்டோம். அப்போதான் நம்ம நண்பர் சொன்னாரு, நாம லேட் ஆனதுல டிஸ்கசன சாப்பாட்டு அப்புறம் ஷிபிட் பண்ணிட்டாங்க போல அதுதான் பாஸ் கடுப்பா இருக்காருன்னு, அதுவும் சரிதான்னு நினச்சிக்கிட்டு, சாப்பிடவும் முடியாம விடவும் முடியாம இருந்த ஐட்டங்கள் ஒன்னொன்னா டேஸ்ட் பார்த்திட்டு வந்திட்டோம், அப்புறம் ஒம்பது மணி, பத்து மணி ஆகுது பார்ட்டில தான் இருக்காங்களே தவிர டிஸ்கஷன் பத்தி ஒரு தகவலும் இல்ல, அப்புறம் பதினோரு மணியும் தாண்டிரிச்சு, ஆளாளுக்கு கெளம்பி போய்க்கிட்டே இருக்காங்க, நடுவுல நம்ம பாஸும் கெளம்பிட்டாரு, சரி டிஸ்கசன் காலின்னு நெனச்சிட்டு நாங்களும் வண்டி ஏறிட்டோம். அப்போதான் நம்ம நண்பர் மறுபடியும் மெமோ எடுத்துப் பார்த்தாரு. அதுல
அப்புடின்னு போட்டிருந்திச்சு, அப்புறம்தான்யா வெளங்கிச்சு பாசு ஏன் நம்மள அப்படி மொறச்சு பார்த்தார்ன்னு. மெமோ நம்ம கையிலேயே ஒரு வாரமா இருந்திருக்கு, ஆனா தலையில இருந்தது எல்லாமே சாப்பாட்டு நேரம் மட்டும்தான், நாங்களும் கரெக்டா அந்த நேரத்துக்கே போய் சேர்ந்திருக்கோம். அப்புறம் உண்மைய எடுத்துச்சொல்லி நம்ம பாஸ சமாளிக்க நாங்க பட்ட பாடு இருக்கே..
டிஸ்கி: இந்த கொடுமைய மறக்க படம் பார்க்க போயி பட்ட கொடும அடுத்த வாரம்.

Project Presentation 6.00 - 7.00
Discussion on presentation 7.00 - 8.00
Dinner 8.00-11.00
Dinner 8.00-11.00
அப்புடின்னு போட்டிருந்திச்சு, அப்புறம்தான்யா வெளங்கிச்சு பாசு ஏன் நம்மள அப்படி மொறச்சு பார்த்தார்ன்னு. மெமோ நம்ம கையிலேயே ஒரு வாரமா இருந்திருக்கு, ஆனா தலையில இருந்தது எல்லாமே சாப்பாட்டு நேரம் மட்டும்தான், நாங்களும் கரெக்டா அந்த நேரத்துக்கே போய் சேர்ந்திருக்கோம். அப்புறம் உண்மைய எடுத்துச்சொல்லி நம்ம பாஸ சமாளிக்க நாங்க பட்ட பாடு இருக்கே..
ஈ லோகத்தில் உள்ள பாஸூ எல்லாரும் பொறம்போக்கு பாஸு ஆயி.....
டிஸ்கி: இந்த கொடுமைய மறக்க படம் பார்க்க போயி பட்ட கொடும அடுத்த வாரம்.
சமந்தா பின்னாடி நிக்கறது நான்தான்னு சொன்னா நம்பவா போறீங்க... |
சூப்பர் பாஸ்!!!! :-))
ReplyDelete////சமந்தா பின்னாடி நிக்கறது நான்தான்னு சொன்னா நம்பவா போறீங்க... ////
ReplyDeleteடாக்டரே யார் நின்னா என்ன ஆனா சமந்தாவை பாக்கிற பார்வை சரியில்லை ஹி.ஹி.ஹி.ஹி
//// அப்புறம்தான்யா வெளங்கிச்சு பாசு ஏன் நம்மள அப்படி மொறச்சு பார்த்தார்ன்னு. மெமோ நம்ம கையிலேயே ஒரு வாரமா இருந்திருக்கு, ஆனா தலையில இருந்தது எல்லாமே சாப்பாட்டு நேரம் மட்டும்தான், நாங்களும் கரெக்டா அந்த நேரத்துக்கே போய் சேர்ந்திருக்கோம். அப்புறம் உண்மைய எடுத்துச்சொல்லி நம்ம பாஸ சமாளிக்க நாங்க பட்ட பாடு இருக்கே..////
ReplyDeleteடாக்டரே நல்லாத்தான் பல்பு வாங்கியிருக்கீங்க..........
சுவாரஸ்ய தொகுப்பு அப்பறம் ஒன்னு சொல்லனும் உங்கள் கடந்த பதிவுக்கு என்னால் கமண்ட் போட முடியவில்லை என் ஜடியில் போட முடியாதுனு மேசேஜ் சொன்னது என்ன ப்ராப்ளம் இப்ப ஓக்கே(அதனால் தானே கமண் போட்டு இருக்கேன்)
ReplyDeleteசெம பல்பு - (நம்மெல்லாம் யாரு ப்ரீயா கொடுத்தா பினாயில்யே குடிபோம்லே) எப்பவுமே சோத்துமேல தான் கண்ணு என்ன பண்ண... ஹிம்.
ReplyDelete////சமந்தா பின்னாடி நிக்கறது நான்தான்னு சொன்னா நம்பவா போறீங்க... ////
ReplyDeleteஎட்றா அந்த வீச்சருவாளை எலேய் சன்முகப்பாண்டி எட்றா வண்டியை.....
சனி?!வணக்கம்!பொன் ஜூர்!!!!கம்பியூட்டர் குளறுபடியால் கடந்த சில நாட்கள் பதிவுலகப் பக்கமோ,ஏனைய செய்தி தளங்களுக்கோ வர முடியவில்லை.இன்று சரியாக்கி விட்டோம்.தொடரும்!
ReplyDeleteSamantha I love you...intha comment podhuma baas..
ReplyDelete// ஜீ... said...
ReplyDeleteசூப்பர் பாஸ்!!!! :-))//
நன்றி பாஸ்.
K.s.s.Rajh said...
ReplyDelete////சமந்தா பின்னாடி நிக்கறது நான்தான்னு சொன்னா நம்பவா போறீங்க... ////
டாக்டரே யார் நின்னா என்ன ஆனா சமந்தாவை பாக்கிற பார்வை சரியில்லை ஹி.ஹி.ஹி.ஹி////
விடுங்க பாஸ்... நல்ல பொண்ணு..
K.s.s.Rajh said...
ReplyDelete//// அப்புறம்தான்யா வெளங்கிச்சு பாசு ஏன் நம்மள அப்படி மொறச்சு பார்த்தார்ன்னு. மெமோ நம்ம கையிலேயே ஒரு வாரமா இருந்திருக்கு, ஆனா தலையில இருந்தது எல்லாமே சாப்பாட்டு நேரம் மட்டும்தான், நாங்களும் கரெக்டா அந்த நேரத்துக்கே போய் சேர்ந்திருக்கோம். அப்புறம் உண்மைய எடுத்துச்சொல்லி நம்ம பாஸ சமாளிக்க நாங்க பட்ட பாடு இருக்கே..////
டாக்டரே நல்லாத்தான் பல்பு வாங்கியிருக்கீங்க..........//
வாங்கின பல்புகள வச்சு ஒரு பாக்டரி போடலாம்னு இருக்கேன்..
K.s.s.Rajh said...
ReplyDelete//சுவாரஸ்ய தொகுப்பு அப்பறம் ஒன்னு சொல்லனும் உங்கள் கடந்த பதிவுக்கு என்னால் கமண்ட் போட முடியவில்லை என் ஜடியில் போட முடியாதுனு மேசேஜ் சொன்னது என்ன ப்ராப்ளம் இப்ப ஓக்கே(அதனால் தானே கமண் போட்டு இருக்கேன்)///
என்னண்ணே தெரியல பாஸ்.. இந்த ப்ளாக்கர் அப்பப்போ எதாச்சு தலைவலி குடுத்துக்கிட்டே இருக்கு..
மனசாட்சி said...
ReplyDelete//எப்பவுமே சோத்துமேல தான் கண்ணு என்ன பண்ண... ஹிம்.//
அதுக்காகத்தானே இம்புட்டு கூத்தும்..
MANO நாஞ்சில் மனோ said...
ReplyDelete////சமந்தா பின்னாடி நிக்கறது நான்தான்னு சொன்னா நம்பவா போறீங்க... ////
எட்றா அந்த வீச்சருவாளை எலேய் சன்முகப்பாண்டி எட்றா வண்டியை.....///
அண்ணன் மறுபடியும் டென்சன் ஆகிட்டாரே..
Yoga.S.FR said...
ReplyDelete//சனி?!வணக்கம்!பொன் ஜூர்!!!!கம்பியூட்டர் குளறுபடியால் கடந்த சில நாட்கள் பதிவுலகப் பக்கமோ,ஏனைய செய்தி தளங்களுக்கோ வர முடியவில்லை.இன்று சரியாக்கி விட்டோம்.தொடரும்!//
வணக்கம் ஐயா.. உங்கள காணோம்ன்னு தேடிக்கிட்டு இருந்தோம், கம்பியூட்டர் பன்ன வேலையா அது.
VITHYAN'S said...
ReplyDelete//Samantha I love you...intha comment podhuma baas..//
என்னய்யா நீரு, நான் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிக்கிட்டு..
புட்டி பாலு ரொம்ப ப்ளட் வந்துச்சாய்யா.... சம்பளம் வாங்கறோம்ல... கொஞ்சமாச்சும் அவங்களுக்காக வேல பாக்கலாம்.....
ReplyDeleteநம்ம தளத்தில்:
மொபைல் அப்ளிக்கேஷன்ஸ் டவுன்லோட் செய்ய சிறந்த பத்து தளங்கள்
சமந்தா பின்னாடி நீ நிக்ரதுனால சமந்த அழகுல கொறஞ்சு ஒன்னும் போகல???
ReplyDeleteசமந்தா பின்னாடி நிக்கறது நான்தான்னு சொன்னா நம்பவா போறீங்க...///காலை வணக்கம்!"அவங்க" பின்னாடி தான் நீங்க நிக்கணும்னு விதி இருந்தா அத பிரமனால கூட மாத்த முடியாதுன்னு தெரிஞ்சுக்குங்க!ஹி!ஹி!ஹி!!!
ReplyDeleteDr. Butti Paul said...
ReplyDeleteவணக்கம் ஐயா.. உங்கள காணோம்ன்னு தேடிக்கிட்டு இருந்தோம்,கம்பியூட்டர் பன்ன வேலையா அது.///எனக்கு கம்பியூட்டர் தண்ணி காட்டுச்சு.உங்களுக்கு சாப்பாட்டு ரூபத்தில காட்டியிருக்கு!என்ன செய்ய? அதான் விதிங்கிறது!
Dr.Butti Paul
ReplyDeleteஉங்க நுரை டப்பா எப்படி இருக்கு???
சாப்பாடு தான் நமக்கு முக்கியம்...
ReplyDeleteஅத விட்டுட்டு meeting-ஆ முக்கியம்?
ஓ... இதான் சமந்தாவா... என்ன சமஞ்சாப்பல??
ReplyDelete//இந்த கொடுமைய மறக்க படம் பார்க்க போயி பட்ட கொடும அடுத்த வாரம்.
ReplyDeleteகொடுமையோ கொடுமை...
சந்தானம் படம் போட்டு ஓட்டு கமெண்ட் கேட்கும் பாணி செம
ReplyDelete