Wednesday, December 12, 2012

உங்களுக்கெல்லாம் நட்புன்னா என்னன்னு தெரியுமா?

உங்களுக்கெல்லாம் நட்புன்னா என்னன்னு தெரியுமா? நண்பன்னா என்னன்னு தெரியுமா? மொக்கராசு மாமான்னா என்னன்னு தெரியுமா? கடமைன்னா என்னன்னு தெரியுமா? இதோ இப்போ தெரிஞ்சுக்கங்க.

உங்களுக்கெல்லாம் நம்ம சந்தானம் பான்ஸ் ப்ளாகும் அதுல ரெண்டுபேர் ப்ளாகுறதும் மட்டும் தெரிஞ்சிருக்கும், இதுக்கு பின்னால முன்னால எத்தன ரகசியங்கள், கொள்கைகள் இருக்குன்னு தெரியுமா? எவ்வளவு அழகான ஒரு நட்பு இருக்குன்னு தெரியுமா? அதையெல்லாம் விளக்கவே இந்த பதிவு.

எனக்கு ரெண்டு வயசு இருக்கும் போது....
உங்க கற்பனைய கொஞ்சம் நிறுத்துங்க. அப்பல்லாம் எனக்கு ஒன்னுக்கு வருதுன்னு சொல்லவே தெரியாது, மொக்க ராசு மாமாவ எப்படி தெரியப்போகுது. நாங்க சந்திச்சிக்கிட்டது பத்தாம்பு படிக்கறப்போதான், அதுக்காக பள்ளி சிநேகிதம்ன்னு நெனச்சிக்காதீங்க, எப்பவுமே எட்டு மணிக்கு பள்ளி ஆரம்பிக்கும்னா நான் எட்டர மணிக்குத்தான் பஸ்ல ஏறுவேன், அதே பஸ் எட்டே முக்கா மணிக்கு நம்ம மொக்க ராசு மாமா ஸ்டாப்புக்கு வரும், தவறாம அவரும் அந்த பஸ்ல ஏறிக்குவாறு. இப்படி ஆரம்பிச்சதுதான் எங்க சிநேகிதம்.
அவரு பள்ளியும் எங்க பள்ளியும் பரம எதிரிக, அவரு தல ரசிகன், நான் தளபதி ரசிகன், அவரு சூப்பர் ஸ்டார், நான் உலக நாயகன். அவரு சிம்பு, நான் தனுஷ். அவுரு கேபிள் சினிமா, நான் பிலாசபி சினிமா. அவுரு சல்மான், நான் ஷாரூக். சினிமாவுல தொடங்கி வாழ்கையில எல்லாத்துலயுமே நானும் ராசு மாமாவும் எதிரும் புதிரும்தான். அவரு கூட எப்பவுமே ஒரு கூட்டம் இருக்கும், அது அவரா கஷ்டப்பட்டு சேர்த்த கூட்டம், என் கூடவும் ஒரு கூட்டம் இருக்கும், அது தானா சேர்ந்த கூட்டம். ரெண்டுமே வேற வேற கூட்டம். நாங்க ரெண்டுபேரும் போன யூனிவர்சிட்டி வேணும்னா ஒண்ணா இருக்கலாம், ஆனா அவுரு வேற படிப்பு நான் வேற படிப்பு. அவுரு விண்டோஸ், நான் மேக். அவுரு சாம்சுங் ஆன்ட்ராய்ட் நான் ஆப்பில் ஐ.ஓஎஸ். தலைவரு சந்தானம் தவிர எனக்கும் ராசு மாமாவுக்கும் எந்த விஷயத்துலயும் ஒத்துப்போறதே கெடயாது. இப்படி ரெண்டுபேர் ஒண்ணா சேர்ந்து ஒரு ப்ளாக் நடத்துறோம்னா அது எப்படி சாத்தியமாச்சி? இதுக்கெல்லாம் என்ன காரணம்னா எங்க ரெண்டுபேர் நட்பும் இந்த வேற்றுமைகள் எல்லாம் தாண்டிய புனிதமான நடப்பு. 
இங்கதான் நம்ம கதையில ஒரு ட்விஸ்ட்டு. இந்த புனிதமான நட்பு, மூழ்காத ஷிப்பு  ப்ளா ப்ளா ப்ளா... இதெல்லாம் லாரிக்கு பின்னாடி வேணும்னா எழுதலாம், ஆனா லைப்க்கு செட் ஆகாது. நான் என்ன பண்ணினாலும் ராசு மாமா என்ன தாறு மாறா கலாய்ப்பாரு, அதே மாதிரி நானும். இப்படியே எங்க வண்டி ஓடிக்கிட்டு இருந்திச்சு, ஒரு நாள் நாடு ராத்திரி, நான் கழிவறையில் ஒக்காந்திருந்தப்போ கணப்பொழுதில் ஒரு யோசனை உதிச்சது. அதுதான் எத்தன நாளைக்குத்தான் நாமளும் நம்மளையே மாறி மாறி கலாய்ச்சுக்கிட்டிருக்கறது, நாம ஏன் நம்ம வட்டத்துல இருந்து வெளிய வந்து இந்த உலகத்துல இருக்கற ஒருத்தனையும் விடாம கலாய்க்கக்கூடது? இத நான் ராசு மாமாக்கிட்ட சொன்னதும் அவரும் செம குஷி ஆயிட்டாரு, நாம நாளைக்கே ஒரு ப்ளாக் ஆரம்பிக்கறோம், ஆரம்பிச்சு "எவனா இருந்தாலும் கலாய்ப்போம்" ன்னு சொல்லிட்டாரு, அப்புடி ஆரம்பிச்சதுதான் எங்க ப்ளாக்கர் பயணம். அப்புறம் தலைவர் சந்தானம் மேல உள்ள அதீத பிரியத்தினால அவருக்காக ஒரு டிவிட்டர் ஃபேன்ஸ் அக்கவுண்ட் ஓபன் பண்ணோம், அது சக்சஸ் ஆகுனாப்புறம் அதன் தொடர்ச்சியா ஒரு சந்தானம் பிளாக் உருவாக்கனும்ன்னு சொல்லி அந்த பழைய ப்ளாக்க(!) மூடிட்டு ஆரம்பிச்சதுதான் நீங்க இப்போ படிச்சிக்கிட்டு இருக்கற இந்த "அகாதுகா அப்பாடக்கர்ஸ், ரியல் சந்தானம் ஃபேன்ஸ்" ப்ளாக்.

அதுசரி நட்பு, நண்பன், மொக்கராசு மாமா எல்லாம் சொல்லியாச்சு, கடமைன்னு எதோ சொன்னியே அது எங்கன்னு தேடறீங்களா? அதாவது, நம்ம ராசு மாமா ரொம்ப நாளா டாக்டர் ஆகணும்ன்னு படிச்சிக்கிட்டு இருக்காரு. ப்ளாக்கர் ட்விட்டர்ன்னு வெட்டியா சுத்திக்கிட்டு இருக்கறதால அந்த வேல ரொம்ப நாளா இழுத்துக்கிட்டு கெடக்கு. இப்போ என்னன்னா சீகிரமாவே படிப்ப முடிச்சுடனும்ன்னு விடா பிடியா இருக்கார். முதல் வேலையா ப்ளாக்கர் அக்கவுன்ட் டெம்பரரி டீஆக்ட்டிவேட் பண்ணிட்டார். இதுனால உங்க எல்லாருக்கும் தெரியப்படுத்துவது யாதெனில் இன்னும் கொஞ்ச நாளைக்கு  மொக்கராசு தொல்ல இந்த ப்ளாக்கருக்கு இல்ல. அதுனால, அவரு திரும்ப வர்ற  வரைக்கும், நானு மட்டும் (சில பல ஆணி புடுங்கல்கள் எனக்கும் இருந்தாலும்) தனியாளா பதிவுலகத்துல நடமாடலாம்ன்னு இருக்கேன். இதெல்லாம் என்ன பெருமையா, இல்ல...., உன்னதமான நட்புக்கு செய்யுற கடமை!!

டிஸ்கி 1: இம்புட்டு நேரமா பொறுமையா ஒக்காந்து இந்த பதிவ படிச்ச உங்களுக்கு நம்ம மனமார்ந்த நன்றிகள். பதிவு எழுதி ரொம்ப நாளாச்சா, சங்கம் நம்மள மறந்துட கூடாதுன்னதான் சின்னதா ஒரு சுய பதிவு. வழமையா, இது மாதிரி பதிவு எல்லாம் நூறாவது பதிவு மாதிரி எதாவது ஸ்பெஷல் பதிவாதான் போடுவாங்க, ஆனா நாங்க போற ஸ்பீட்க்கு நூறாவது பதிவு எல்லாம்?? அட போங்க சார்!! 

டிஸ்கி 2: எவ்வளவு உயரத்துக்கு போனாலும், நட்புக்கு மரியாத செஞ்சு, நட்பு மாறாமா இருக்குற சூப்பர் ஸ்டாருக்கு இந்த பதிவு சமர்ப்பணம். எங்க ரெண்டு பேர் சார்புலையும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லிக்கறோம்.

11 comments:

  1. காலை(நமக்கு)வணக்கம்,டாக்டர்!மொ.ரா.மாமாவும் டாக்டர் ஆயிட்டா,அப்புறம் ரெண்டு பேரையும் எப்புடிக் கூப்புடுறது?சரி விடுங்க;அதென்ன பெப்ருவரி -?ஓ வலண்டைன் டே இல்ல,ஹி!ஹி!ஹீ!!!!////(எப்புடியோ,ஒரு பதிவு தேத்தியாச்சு,)நட்புக்கு இலக்கணம்னா அது நீங்க தான்!ரஜனி சாருக்குப் பொறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லிடுங்க!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா! முக்கியமான மேட்டர் அது விடுபட்டிரிச்சு, இப்போ சேர்த்துடறேன்.

      Delete
  2. பதிவு நல்லா இருக்கறதால கயிவி கயிவி ஊத்தமுடியலை..!

    ReplyDelete
  3. சூப்பர் கலக்கலா இருக்கு

    ReplyDelete
  4. இந்த ஸ்டோரியை எங்கேயேக் கேள்விப் பட்டு இருக்கேனே, ... ம்ம்ம்.. மாமாவின் காதல் ஜெயிக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. ////ஒரு நாள் நாடு ராத்திரி, நான் கழிவறையில் ஒக்காந்திருந்தப்போ /////

    அடேடே.........

    ReplyDelete
  6. //// நாம ஏன் நம்ம வட்டத்துல இருந்து வெளிய வந்து //////

    உங்க கக்கூசு வட்டமாவா இருக்கு........?

    ReplyDelete
  7. /////முதல் வேலையா ப்ளாக்கர் அக்கவுன்ட் டிலீட் பண்ணிட்டார். /////

    24 மணிநேரமும் ஆன்லைன்ல இருந்து பதிவும் கமெண்ட்டும் போட்டுக்கிட்டு இருந்த மாதிரில பண்ணி இருக்காரு......?

    ReplyDelete
    Replies
    1. Aaamalla.. konjam unarchivasapattuthan delete panniputteno!! vidunganne, feb 13thkkapuram santhipom..

      Delete
  8. To Dr.buttiPaul,

    Respected Sir,

    As I am suffering from loads of Aani Pudungals, Please grant me leave till Feb 13th on blogging.

    Thanking you

    Yours faithfully,
    MokkaRasuMaams

    ReplyDelete
  9. சென்று, வென்று வர மொக்கைக்கு வாழ்த்துகள்.


    (ஏம்யா,டாக்டர்.புட்ட்பால் மாதிரியே டாக்டர்.மொக்கைராசு-ன்னு பேரை மாத்திக்க வேன்டியது தானப்பா..இதுக்கு ஏன் தனியாப் படிச்சுக்கிட்டு!)

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்!!