Saturday, March 17, 2012

வழி காட்டிய நோக்கியா பொண்ணும் கவிஞர் ஆகிவிட்ட சந்தானமும் - கும்பளிங் கும்பளிங்

எல்லாருக்கும் வணக்கமுங்க, 

மறுபடியும் பதிவு எழுத ஆரம்பிக்காலமுன்னு பார்த்தா உருப்படியா ஒரு மேட்டரும் சிக்க மாட்டேங்குது. அப்புடி எதாச்சு சிக்கினாலும் நாம பதிவு ரெடி பண்ணரதுக்குள்ள அது ஒவுட் டேட்டட் ஆகிடுது. இப்புடியே போனா பதிவுலகமே நம்மள மறந்திடுமேன்னு யோசிக்கிட்டு இருந்தப்போதான் ரொம்ப நாளா ட்ராப்டுல இருந்த சில பதிவுகள் கண்ணுல பட்டது,  கொஞ்சமா தூசு தட்டி டின்கேரிங் பண்ணி பப்ளிஷ் பண்ணலாம்ன்னு ஒரு ஐடியா, இருந்தாலும் அது வெளியில தெரியாம இருக்கறதுக்காக அப்பப்போ மானே தேனே எல்லாம் போட்டு பக்காவா ரெடி பண்ணனும்ன்னு ராசு மாமா கண்டிஷன் போட்டுட்டாரு, எவ்வளவோ பண்ணிட்டோம், இதையும்தான் பண்ணிப்பார்போமே...
இனிமே பதிவுக்கு போகலாமா...

பழைய கள்ளு...

அது என்னமோ தெரியலைங்க ஆணி ஜாஸ்த்தியானாலே எதுலயுமே சரியான கான்சென்ற்றேசன் வர மாட்டேங்குது. ஏற்கனவே மெமோவ சரியா படிக்காம ஒரு மீட்டிங்குக்கு போயி பல்பு வாங்கினோம், அதே போலதான் இதுவும். டவர் ஹெயஸ்ட்ன்னு ஒரு படம், ஒரு வழியா படம் பாக்கலாமேன்னு ரெண்டு நண்பர்கள் கூட தேடருக்கு கெளம்பினோம். நமக்கு புது இடம், அதனால எங்க போனாலும் நேவிகேசன் போட்டுட்டுதான் போறது, நாம நேவிகேசன் போடுறது நோக்கியா போன்ல, அந்த நோக்கியா பொண்ணும் எப்பவுமே நமக்கு சரியான வழிதான் காட்டும். அன்னைக்கும் அப்புடியேதான் காட்டிச்சு, (அது டேர்ன் லேப்ட்ன்னு சொன்னதும் நம்ம நண்பர் வலதுபக்கமா கைய காட்டிக்கிட்டே டேர்ன் லேப்ட்ன்னு சொல்லி நாங்க ரோடு மிஸ் பண்ணினதெல்லாம் தனி கதை). இப்போ ஏன் இதப்பத்தி சொல்றேன்னா சம்பவ நாள் தேட்டேருக்கு போய் சேர்ந்ததும் நான் GPS ஆப் பண்ண மறந்துட்டு போன பாக்கேட்ல போட்டுட்டு போய்ட்டேன். நேரா டாய்லெட் போனோம். அங்க ஆசுவாசமா போய்க்கிட்டு இருக்கறப்போ திடீர்ன்னு அந்த நோக்கிய பொண்ணு "டேர்ன் ரைட் அண்ட் என்ட்டர் த ஹை வே" அப்புடின்னு சொல்லிச்சே பார்க்கணும், டாய்லெட்டே சிரிச்சது, நமக்கு ஒரே ஷேமா போச்சி. 


21 ஜம்ப் ஸ்ட்ரீட்

ரொம்ப நாளாவே சிரிச்சபடியே பாக்கக்கூடியதா ஒரு படமும் தேறல, ரொம்பவும் எதிர்பார்த்த தலைவர் படங்கள் ஓகே ஓகே, சகுனி, மசாலா கபே ரிலீசான பாடும் இல்ல, என்னடா பண்றதுன்னு யோசிக்கிட்டு இருந்தப்போதான் 21 Jump Street படத்தோட ஞாபகம் வந்தது, ரொம்பநாளா எதிர்பார்த்திருந்த படம், பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ போய் பார்த்தோம், செம காமெடி மாமா செம காமெடி. படம் ஆரம்பிச்சதுல இருந்து முடியற வரைக்கும் சிரிச்சு சிரிச்சே உசிரு போயிடிச்சு, அதுவும் அந்த ரெண்டு போலீஸ் பசங்களும் போதை மருந்து சாப்பிட்டிட்டு அடிக்கற கூத்து செம சீன். சில காட்சிகள்ல அமெரிக்கன் பை  டீன் மூவீஸ் சாயல் அடிச்சாலும் ஒன்றரை மணி நேரம் கவலய மறந்து வாய் விட்டு சிரிக்கறதுக்கு சொல்லி வச்ச படம். இதே படத்த கொஞ்சம் தமிழ் படுத்தி ஆர்யா சந்தானம் காம்பினேஷன்ல ராஜேஷ் இயக்கினார்ன்னா செமையா இருக்கும். பட் இங்க்லீஸ் படத்த காப்பி அடிக்கறதுக்கு அவரு என்ன AL விஜயா? அதனால சிவா-சந்தானம் காம்பினேஷன்ல வெங்கட் பிரபு இயக்கினார்னா கண்டிப்பா கலெக்சன அள்ளும் படம்.  காமெடி ரசிகர்களுக்கு செம விருந்து.


சதம் அடித்த சச்சின்

நம்ம சச்சின் ஒரு வழியா நூறாவது சதம் அடிச்சுட்டாரு, இன்னும் கொஞ்சநாள் தாமதிச்சிருந்தாரு, பெரிய கலவரமே பண்ணியிருப்பாங்க நம்ம பசங்க. ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் சச்சினின் 99 ஆவது சதத்துக்கு ஆண்டு நிறைவு விழா கொண்டாடினாங்க, நல்ல வேளை மனுஷன் தப்பிச்சிட்டாரு. என்ன ஒரு கொற, நூறாவது சதம் கூட தோல்வியில்தான் முடிஞ்சது, சச்சின் சதம் அடிச்சா இந்தியா தோர்க்கும்கர செண்டிமென்ட என்னைக்குதான் அண்ணன் முறியடிக்கபோராரோ. ஊரே கூடி சச்சினோட நூறாவது சதத்துக்கு வாழ்த்து சொல்லுது, இந்த நேரத்துல நம்ம CS அமுதன் (தமிழ் படம் இயக்குனர்) என்ன சொல்றாருன்னா, சச்சின் மயில் கல்லான நூற்றி ஓராவது சதத்துக்கு ஒருசதம் சமீபத்துல வந்துட்டாராம், ஏன்னா கொழுப்பு இந்தாளுக்கு, அது கெடக்குது கழுத, நாம தனுஷோட சச்சின் சாங் கேட்டு என்ஜாய் பண்ணுவோமா?

சச்சின் சாங் லிங்க் 

சந்தானத்தின் முதல் பாடல் வரிகள்


இப்போதான் முக்கியமான மேட்டரே, தலைவர் ஒரு பாடலுக்கு முதல் முதலா வரிகள் எழுதி கவிஞர் ஆகிட்டாரு, அதுதாங்க லேடஸ்ட் சென்சேசன் வேணாம் மச்சான் பாடலுக்கு கோரஸ் வரிகள் எழுதினது நம்ம தலைவர்தான். கோரஸ் வரிகல்ன்னா ஆ ஆ ..... ஊ ஊ ..... லா லா லா அப்புடின்னு நெனச்சிராதீங்க செம ஹைலயிட்டான தத்துவ வரிகள். "கண்ண கலங்கவைக்கும் பிகரு வேணாம்டா நமக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டும் நண்பன் போதும்டா" செம கிக்கானா பாடல், அதவிட அந்த பாடல் படமாக்கப்பட்ட விதம் பற்றி அண்ணன் விவரிக்கராறு பாருங்க அதோட சுவையோ தனி, ஆடமுடியாதுங்கரதுக்காக த்ரோட் இன்பெக்சன்னு சொன்ன மொத ஆளு நம்ம தலைவர்தான்.


டிஸ்கி: யாராச்சும் இந்த பதிவ கொஞ்சம் இந்த திரட்டிகள்ள இணைச்சு விட்டீங்கன்னா கோடி புண்ணியமா போகும்.

5 comments:

  1. வணக்கமுங்க!என்னமோ போங்க,ஆடிக்கொரு தடவ ஆவணிக்கொரு தடவன்னா?சரி,சரி புரியுது!ஆணி அதிகமுன்னா அப்புடித்தான் ஆவும்.அந்த நோக்கியா பொண்ணு செம காமெடி,சிரிச்சே மாளல!!!!!!!!தேங்க்சு!

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா! நலமா? வர வர இந்த பாசுகள் தொல்ல கொஞ்சம் ஓவராவேதான் போய்க்கிட்டு இருக்கு, அதுதான் சரியா பதிவுகள் போட முடியல. இனிமே கொஞ்சம் ரெகுலரா பதிவுகள் போட முயற்சிக்கறோம்.

    ReplyDelete
  3. அப்புறம் ஐயா, இந்த செங்கோவிக்கு என்ன ஆச்சு? இன்னும் ஆணி புடுங்கி முடிக்கலயா அவரு? வாரா வாரம் அவரோட கடைக்கு போய்க்கிட்டுத்தான் இருக்கோம், ஆனா பதிவைத்தான் காணல, காமென்ட் வேற ரெஸ்ட்ரிக்சன் பண்ணி வச்சிருக்காரு... ஈமெயில் அனுப்பிலாவது பதில் அனுப்புவாரா?

    ReplyDelete
  4. இரவு(எனக்கு)வணாக்கம் டாக்டர்!பரவாயில்லை.உங்களுக்குச் சொன்னாலென்ன,உண்மையில் என்றிலிருந்தோ உங்கள் தளங்களுக்கெல்லாம் செங்கோவி தளமூடாகவே வருகிறேன்.அதாவது,மனதைத் தொட்ட பூக்கள் என்று "அன்பான"சில பதிவர்களை வைத்திருக்கிறார்,இல்லையா?அதன் மூலமே,தமிழ்வாசி,அட்ராசக்கை,நாற்று,அகாதுகா..........என்று அழுத்தி,அழுத்தி பதிவுகளை பார்ப்பேன்.இரண்டொரு தடவை செங்கோவி சிலரின் தளங்களுக்கு வரும்போது ஹாய் சொல்லுவேன்,அவரும் சொல்லுவார்!பொதுவாகவே,முன்பிருந்தே அவர் மெயில் பார்ப்பது குறைவு என்று அவரே சொல்லியிருக்கிறார்.முயற்சியுங்கள்.

    ReplyDelete
  5. மறுபடியும் எழுதுங்க, நேரம் கெடைக்கும்போது எழுதுங்க... என்ன வேணாலும் எழுதுங்க...

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்!!