இந்த வருடம் ஜூன் மாதம் வெளிவந்த Tranformers 3 படம் பற்றி அறிந்திருப்பீர்கள். உலக அரங்கில் அதிக வசூல் பெற்ற படங்கள் வரிசையில் நான்காவது இடத்தில் இருக்கும் படம். முதல் மூன்று இடங்களில் இருப்பது அவதார், டைடானிக் மற்றும் ஹர்ரி போட்டர். படத்தின் நீளம் காரணமாகவும் இன்னும் சில குறைகள் காரணமாகவும் விமர்சன ரீதியாக வெற்றி பெறாத ஒரு படம். இந்த திரைப்படம் ஒரு தமிழ் படமாக இருந்திருந்தால் நமது விமர்சனம் எவ்வாறு இருந்திருக்கும் என ஒரு சிறு கற்பனை.
கோடி கோடியா பணத்த எப்படி குப்பையில கொட்டுறதுங்கறதுக்கு ஒரு சிறந்த உதாரணம் இந்த படம். சாதரணமான கார், ரேடியோ, லேப்டாப் போன்றவை ஜயன்ட் ரோபோட்ஸாக மாறினால் எப்படி இருக்கும் என்கிற கற்பனையை தவிர்த்து படத்தில் எதுவுமே ரசிக்கும்படியாக இல்லை. அதுவும் ஆடோபாட்சின் ஒரு தொழில்நுட்பத்தை கண்டறியவே மனிதனின் நிலாவுக்கான பயணம் நடந்தேறியது என்பது வரலாற்றை திரிப்பது. மனிதன் உண்மையில் நிலாவில் கால் வைத்தானா என்பதே விவாதத்துக்குரிய விடயமாக இருக்கும் போது கொஞ்சமும் அக்கறை அற்று இவ்வாறு சித்தரித்திருப்பது முட்டாள் தனத்தின் உச்சகட்டம். "ஸ்பேஸ் பிரிட்ஜ்" அப்பிடின்னு ஒன்னு, சார்பியல் தத்துவத்தின் வோர்ம்-ஹோல்ஸ்ல இருந்து அப்புடியே உருவியிருக்காங்க, இத பார்த்தப்போ சிரிக்கறதா இல்ல அழுறதான்னு தோனல. ஒரு விஞ்ஞான மாணவனா அது எவ்வளவு மொக்கைன்னு எனக்கு நல்லாவே தெரியும். இதுக்கு, முதல்பாகத்துல பென்டகனோட செக்யூரிட்டி பயர் வால்ல அஞ்சி நிமிசத்துல ஹாக் பண்றதா காட்டுறது எவ்வளவோ தேவல. ஒரு காட்சில லிங்கன் சிலைய உடைக்கிற மாதிரி காட்டியிருக்கறது தேசிய தலைவர்களுக்கு மிகப்பெரிய அவமதிப்பு. (இத கறுப்பின அமெரிக்கர்கள் மேல இயக்குனர் வச்சிருக்கற காழ்புணர்ச்சி, அரசியல் அவமதிப்பு அது இதுன்னு இன்னும் நிறைய விசயங்கள கோர்த்து போராட்ட லெவெலுக்கு கொண்டு போகனும்). நாலு பில்லர வச்சிக்கிட்டு, சென்டினல் ப்ரயிம் அவங்க நாகரீகத்துல ஐன்ஸ்டைன்னு சொல்றதுக்கு பதிலா பேசாம ஐன்ஸ்டைன தூக்குல போட்டிருக்கலாம்.
படம் முழுதும் அமெரிக்க மயம், அமெரிக்கர்கள்தான் உலகத்தையே காக்க பொறந்தவங்க மாதிரி பில்டப். தாங்கல. அதுலயும் மகா கொடும ஒரு காலேஜ் முடிச்ச பையன் உலகத்தையே காப்பாத்துறது. ஏலியன் இனங்களுக்கு இடையில நடக்குற பிரபஞ்ச யுத்தத்த அசால்டா இவரு சமாளிக்கறதா சொல்றது பார்வையாளன முட்டாளாவே பாக்குற இயக்குனர்களின் மனப்பாங்கு. அவரு பண்றதா காட்ற ஆக்ஷன் காட்சிகள் லாஜிக் மீறலின் உச்சகட்டம். இன்னும் எத்தன நாளுக்கு இதையே பாக்க போறோம்? படத்தோட க்ளைமாக்ஸ்ல ஷாக் வேவ் வந்து ஒரு நகரத்தையே நாசப்படுத்துது, எவ்வளவு ரண களம் நடந்தாலும் அதுல எந்த கன ரக ஆயுதங்களும் இல்லாம சும்மா மாட்டிக்கிட்ட ஹீரோவுக்கோ, அவரோட கூட்டத்துக்கோ ஒண்ணுமே ஆகலியே அது எப்புடி? ஸ்பேஸ் ப்ரிட்ஜுக்கான கண்ட்ரோல் பில்லர சென்டினல் ப்ரயிம் ஒருவரால்தான் இயக்க முடியும்னு சொல்லிட்டு, க்ளைமாக்ஸ்ல வேறொருத்தர் இயக்குறாரு, இப்படி லாஜிக் மீரல்கள சொன்னா அதுவே தனி பதிவு போடுற அளவுக்கு வரும். ஒரு போலியான வரலாறா இருந்தாலும் எதோ பெரிசா சொல்லி தொடங்கின படம் க்ளைமாக்ஸ் அப்புடியே யூகிக்க கூடியதா இருக்குறது படத்துல உள்ள பெரிய்ய்ய குறை. படம் தொடங்கும்போதே தெரியும் அந்த சின்ன பையன் உலகத்தையே காப்பாத்த போறான்னு. அதுக்காக மூணு மணிநேரம் செலவழிச்சு படத்த பார்க்கணுமா?
அந்த சின்னப்பையன் நடிப்பு சகிக்கல, அவனுக்கெல்லாம் எவன்யா இந்த படத்துல நடிக்க சான்ஸ் கொடுத்தது? மேகன் பாக்ஸ தூக்கிட்டு ஒரு பிகர போட்டிருக்காங்க, சாயல்ல அப்புடியே காமரூன் டயஸ பாக்குறது மாதிரியே இருக்கு, கவர்ச்சி காட்றதா நெனச்சு அவ பண்ற கூத்துல நமக்கு வாந்திதான் வருது. மேகன் பாக்ஸ் எடத்துல வச்சு பார்த்தா கொமட்டிக்கிட்டு வருது. இயக்குனருக்கு என்ன ரசனையோ. படத்துல இருக்கற ஒரே ஒரு ஆறுதல் 3-D எபெக்ட் தான், ஆனா அதுக்காகவெல்லாம் தேட்டருக்கு போயி படம் பார்க்க முடியாது, திருட்டு VCD லதான் இந்த படம் பார்க்கணும். (3D எபெக்ட திருட்டு VCD ல எப்புடி பார்க்குறதுன்னு நீங்க கேள்வி கேக்க கூடாது, இவனுங்க படத்த எல்லாம் அப்புடி பார்க்குறதுதான் பொருத்தம்ன்னு கமெண்டு போடணும்)
மொத்தமா இது ஒரு சுத்த வேஸ்ட்டு படம், இத எடுத்தவன்தான் முட்டாள்னா இத பார்க்க போனவன் எல்லாரும் வடிகட்டின முட்டாள், அந்த படத்த பார்த்துட்டு அதுக்கு விமர்சனம் எழுதின புட்டிபால் உலக மகா முட்டாள். அப்புறம் அதஉட்காந்து இவ்வளவு நேரம் வாசிக்கிற நீங்க எல்லாம் ...............
அமெரிக்கர்கள் யாரும் இந்த படத்துக்கு ஏன் இப்புடி ஒரு விமர்சனம் இதுவரைக்கும் எழுதல்லன்னு யோசிச்சிட்டே இருந்தேன், திடீர்னுதான் தோணிச்சு, இந்த படத்த எடுத்தவங்க யாரும் நாங்க ஒரு மறைக்கப்பட்ட உண்மைய உலகுக்கு எடுத்து சொல்லியிருக்கோம்னோ, இந்த படத்த பார்த்தா உங்களுக்கு அமெரிக்கான்னு ஒரு திமிரு வரும்னு டிவில மணிக்கொருதரம் வந்து கூவல, இன்னொன்னு அமெரிக்க விமர்சகர்கள் விளம்பரத்த பார்த்துட்டு படத்துக்கு விமர்சனம் எழுதுறதும் இல்ல.
டிஸ்கி: சினிமா விமர்சனம் எழுதுறதுல நாலு வகை இருக்கு. ஒன்னு ஒரு படத்த பார்த்ததும் நம்ம மனசுக்கு பட்டத எழுதுறது. ரெண்டு நடுநிலையாகவே குறை நிறைகள சொல்றது, மூணு சினிமா இயக்குனர்கள் நடிகர்கள் எல்லாரும் முட்டாள்ன்னு நினைச்சு எழுதறது, நாலு தமிழ் சினிமா பாக்க போற ரசிகர்கள் எல்லாரும் முட்டாள்கள்ன்னு நினைச்சு எழுதறது. இது அஞ்சாவது வகை.
டிஸ்கி: சினிமா விமர்சனம் எழுதுறதுல நாலு வகை இருக்கு. ஒன்னு ஒரு படத்த பார்த்ததும் நம்ம மனசுக்கு பட்டத எழுதுறது. ரெண்டு நடுநிலையாகவே குறை நிறைகள சொல்றது, மூணு சினிமா இயக்குனர்கள் நடிகர்கள் எல்லாரும் முட்டாள்ன்னு நினைச்சு எழுதறது, நாலு தமிழ் சினிமா பாக்க போற ரசிகர்கள் எல்லாரும் முட்டாள்கள்ன்னு நினைச்சு எழுதறது. இது அஞ்சாவது வகை.
எல்லா படத்தையும் ரசிகன் பார்க்க வேணுமே அப்படின்னு அவசியம் இல்லை.... புதுமை இருந்தாலும் அறுவையா, கதை இல்லாம இருந்தா வேஸ்ட் தான்...
ReplyDeleteவாசிக்க:
இப்படியா துப்பட்டா போடறது? சின்ன பீப்பா, பெரிய பீப்பா அரட்டை
கருப்பின தலைவர்களை தாக்குவது ஒன்றும் இவர்களுக்கு புதிது இல்லை மக்கா, திருந்த மாட்டேங்குறாங்க...!!!
ReplyDeleteஅந்த படத்த பார்த்துட்டு அதுக்கு விமர்சனம் எழுதின புட்டிபால் உலக மகா முட்டாள். அப்புறம் அதஉட்காந்து இவ்வளவு நேரம் வாசிக்கிற நீங்க எல்லாம் ...............////புரியுது,வடிகட்டின முட்டாளுன்னு சொல்லுறீங்க!கரெக்டு!வெள்ளிக்கிழம காலங்காத்தால..................ம்.....ம் தேவ தான்!
ReplyDeleteதமிழ்வாசி பிரகாஷ் said...
ReplyDeleteஇப்படியா துப்பட்டா போடறது? ///இதுக்கு போடாமலே வுட்டிருக்கலாம்னு சொல்லுறீங்க?(ஒங்களோட தங்கமணி பதிவு,கருத்தெல்லாம் படிப்பாங்களா?)
//நாங்க ஒரு மறைக்கப்பட்ட உண்மைய உலகுக்கு எடுத்து சொல்லியிருக்கோம்னோ, இந்த படத்த பார்த்தா உங்களுக்கு அமெரிக்கான்னு ஒரு திமிரு வரும்னு டிவில மணிக்கொருதரம் வந்து கூவல//
ReplyDeleteமுருகதாச மன்னிச்சு விடுங்கண்ணே,..பாவம்...
This comment has been removed by the author.
ReplyDeleteஹி.ஹி.ஹி.ஹி விமர்சனம் அருமை ஹி.ஹி.ஹி.ஹி...
ReplyDeleteஉங்கள் பதிவைவிட ------------பால் வடியும் அமலா பால் படம் சூப்பர்
(புள்ளிக்கோட்டில் முகத்தில் என்று வரவேண்டும் குறிப்பிட மறந்துவிட்டேன்)
வணக்கம் பாஸ்...
ReplyDeleteவிமர்சனம் எழுதுவோருக்கு ஒரு உள்குத்தாக இப் பதிவு இருக்கும் என நினைக்கின்றேன்!
வித்தியாசமாக யோசித்து தமிழில் ஒரு பட விமர்சனத்தை எப்படியெல்லாம் எழுதுவார்கள் என்பதனை நக்கலும் நையாண்டியுமாகச் சொல்லியிருக்கிறீங்க.
//இத எடுத்தவன்தான் முட்டாள்னா இத பார்க்க போனவன் எல்லாரும் வடிகட்டின முட்டாள், அந்த படத்த பார்த்துட்டு அதுக்கு விமர்சனம் எழுதின புட்டிபால் உலக மகா முட்டாள். அப்புறம் அதஉட்காந்து இவ்வளவு நேரம் வாசிக்கிற நீங்க எல்லாம் ...............//
ReplyDeleteநல்லவேளை நான் புட்டிபால் விமர்சனம் படிக்கல....
உங்கள் வலைப்பூவை வலைசரத்தில் அறிமுக படுத்தி இருக்கிறேன், பார்வைஇட்டு கருத்துக்களை பகிரவும்.
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/2011/12/blog-post_16.html