Wednesday, April 16, 2014

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், மான் கராத்தே #சும்மாஒருபதிவு

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ சமீபத்தில் ரிலீஸ் ஆகியுள்ளன. சென்ற வருட இறுதியில் நாங்க "சந்தானம் இனி அவ்வளவுதானா"ன்னு ஒரு பதிவிட்டிருந்தோம். சென்ற வருடம் தீ.வே.செ.கு, க.ல.தி.ஆ தவிர சந்தானத்துக்கு சொல்லி கொள்ளும் படி ஒரு படமும் அமையவில்லை எனும்  கவலையை வெளிபடுத்தி, இந்த 2014 வருட சந்தானம் படங்கள் வெற்றியடைய வாழ்த்து சொன்ன பதிவு அது.


அதே மாதிரி என்றென்றும் புன்னகை, வீரம் படங்களில் கலக்கியிருந்தார். இது கதிர்வேலன் காதல், பிரம்மன் என சில  படங்கள் மொக்கையா இருந்தாலும் சந்தானம் காமெடி ரசிக்கும் படியாகவே இருந்துச்சு. இப்போ சந்தானம் நடிக்கும்  வ.பு.ஆ  வெளிவரும் அதே கோடை விடுமுறையில் பழைய காமெடி நடிகர்கள் வடிவேலு, லெஜன்ட் கவுண்டமணியின் படங்களும் வெளிவர உள்ளன. மேட்டர் என்னன்னா, சில சமூக வலைதளங்களில் "வடிவேலு போன்றோரின் மீள் வருகையால் சந்தானத்தால் இனி காமெடியனாக தாக்கு பிடிப்பது கஷ்டம், இந்த வருஷமே சந்தானத்தின் 'காமெடி எரா' முடிவுக்கு வந்துடும்"ன்னு சிலர் கெளப்பி விடுறாங்க.

யெஸ் பாஸ். நமக்கும் அதேதான் தோணுது. சந்தானத்தால் இனி காமெடியனாக தாக்கு பிடிப்பது கஷ்டம்! சந்தானத்தின் 'காமெடி எரா' இந்த வருஷமே முடிவுக்கு வந்துடும்! ஏன்னா, நம்மாளு இப்போ ஹீரோ ஆகிட்டாருல்ல. நம்மாளின் ஹீரோ லுக்கை பாருங்க,  இன்னிக்கு உள்ள பல "சுமார் மூஞ்சி குமாரு"  ஹீரோக்களை விட செம்மையா, ஃபிட்டா இருக்காரு நம்மாளு.  இனி நம்மாளு ஸ்ட்ரெய்ட்டா ஹீரோதான். "மர்யாத ராமண்ணா" படத்தின் ரீமேக் என்பதால் ஜஸ்ட் காமெடியன் என்பதை தாண்டி ஒரு முழு ஹீரோவுக்கான எல்லா விஷயங்களும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதத்திலும் எதிர் பார்க்கலாம். டெபநீட்டா நம்மாளு கலக்கத்தான் போறாரு.


அப்புறம், "மான் கராத்தே" பார்த்தாச்சு. யாரு என்ன சொன்னாலும், படம் செம்மையா இருக்கு. தியேட்டரில் முழு கமெர்சியல் காமெடி என்டர்டயினர் படத்தை எதிர்பார்த்து போகும் சாதாரண  ரசிகர்களை ஏமாற்றாமல் படம் முழு திருப்தியை தருது. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் இந்தப்படம்  ரொம்ப புடிச்சிருக்காம். ஒவ்வொரு வீட்டிலும் பெண்கள், குழந்தைகள் இந்த படத்துக்கு அழைத்து செல்லுமாறு நச்ச்சரிகின்றனறாம். ஆனாலும்,  அதி புத்திசாலிகளுக்கு(!) கண்டிப்பா இந்த படமும் ஓகே ஓகே போலவே  புடிக்காது, நமக்கென்ன, படம் ஆல்ரெடி சூப்பர் ஹிட்டு. சிவாகார்த்திகேயனின்  சுக்கிர திசை தொடர்கிறது.

 அப்புறம், சமூக வலைதள ரசிகர்கள்  நகைச்சுவையில் இனி  "சந்தானமா? வடிவேலுவா?", "சந்தானமா? சூரியா?"ன்னு வெட்டி அரட்டை அடிப்பதை தவிர்த்து கொள்வது நலம். சந்தானம் ஹீரோ மெட்டீரியல் ஆகிவிட்டதால், "சந்தானமா? சிவகார்த்திகேயனா?" என்னும் டாபிக்கில் சண்டை போடுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றோம்.

டிஸ்கி: சைக்கிளுக்கு டப்பிங் கொடுக்க போகும் ஹீரோ ஆர்யாவா, ஜீவாவா, இல்ல உதயநிதியா?. 

7 comments:

 1. //"சந்தானமா? சிவகார்த்திகேயனா?" //

  சந்தானம் ரூட்டு வேற, சிவகார்த்திகேயன் ரூட்டு வேற பாஸு.. சிவா சீரியஸா நடிச்சா நாம பார்ப்போம், சந்தானம் சீரியஸா பண்ணினாலும் நமக்கு சிரிப்பு வந்துடும்.. ரெண்டு பெரும் ஜெயிக்கட்டுமே..!

  ReplyDelete
  Replies
  1. யெஸ் பாஸ்... அதேதான் நானும் சொல்றேன்....ரெண்டு பெரும் போட்டி போட்டு ஹீரோவா ஜெயிக்கட்டுமே....

   Delete
 2. வணக்கம்,மொ.ரா மாமா!நலமா?லேட் தமிழ்ப்-புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!///நல்ல பதிவு&பகிர்வு!///சந்தானம் ஹீரோ மெட்டீரியல் ஆகிவிட்டதால்..........................படம் வந்தப்புறம் பாத்துக்கலாம்.ஏலவே,சில காமெடியன் கள் கதாநாயகனாகி கந்தறுந்து போயிட்டதால,இப்போதைக்கு நத்திங் டெல்................வாழ்க சந்தானம் & பான்'ஸ்!!!!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா, புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும்... உங்க வாக்கு படியே சந்தானமும் அவர் ஃபான்ஸ்ஸும் ஜெயிப்பாங்க... :-)

   Delete
 3. சந்தானம் ஹீரோவா நிலைக்க முடியாது..!

  ReplyDelete
  Replies
  1. ஏன்ணே ஏன்? எங்க தலைவருக்கு அழகில்லையா, இல்ல அறிவில்லையா, இல்ல காமடி ஸென்ஸ்தான் இல்லையா? கமல், ரஜ்னி எல்லாம் ஹீரோவா நிலைக்கும்போது தலைவருக்கு என்ன குறை?

   Delete
 4. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

  அறிமுகப்படுத்தியவர் : நேசன் அவர்கள்

  அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : தனிமரம்

  வலைச்சர தள இணைப்பு : தனிமரங்கள் கூட நடப்பது போல !

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள்!!