Wednesday, March 12, 2014

ஒருவேள நிஜமாவே எனக்கு வயசாயிடிச்சா? 28+

சமீபத்துல, ராசு மாமா அவரோட "கும்பளிங் கும்பளிங்" பதிவுல தனக்கு வயசாயிடிச்சின்னு ரொம்பவே வருத்தப்பட்டு எழுதியிருந்தாரு. மாம்ஸ் இதற்கு முதலும் கூட இப்படி அடிக்கடி கவலப்பட்டிருக்காரு, அப்போவெல்லாம் நான் அவருக்கு சின்னவன்ங்கர திமிருலையே அவர கேலி செஞ்சிக்கிட்டு திரிவேன். ஏன்னா எனக்கு அவரைவிட ரெண்டு மாசம் வயசு கம்மி (சாரி பாஸ், ஒரு மாசம் ஒன்பது நாள் : மொக்க ராசு போஸ்ட்ட டபுள் செக் பண்ணும்போது கமென்ட்). ஆனா இந்தவாட்டி மாம்ஸ் நம்மள ரொம்பவே யோசிக்க வச்சிட்டாரு, அதன் விளைவு என்னன்னு நீங்களே கேளுங்களேன், சார், நீங்க கேளுங்களேன், அட நீங்களாச்சி கேளுங்க சார்.


அது என்னமோ தெரியல சார், திரிஷான்னா சின்ன வயசுல இருந்தே நமக்கு ஒரு பிரியம். அந்த வீடியோ ரிலீஸ் ஆனப்போவேல்லாம் பெரிய துப்பறியும் நிபுணர் மாதிரி ஆராய்ச்சியெல்லாம் செஞ்சி அது அந்த பொண்ணே இல்லையின்னு என்னோட நண்பர்கள் கூடவெல்லாம் சண்டயே போட்டுருக்கேன். ஆனாலும் என்னன்னு தெரியல இடையில சில காலம் எல்லாரும் சொல்றாப்ள நிஜமாவே இது ஒரு மொக்க பிகரோன்னு ஒரு டவுட்டு. சரி வேற யாராவது ஹீரோயின் நமக்கு புடிக்குதான்னு பார்க்கலாமேன்னு பார்த்தா அனுஷ்கா ஷெட்டி, ஸ்ரேயா சரண் எல்லாம் செம்ம பிகரா இருக்காங்களேன்னு தோணிச்சு, இங்க நீங்க கவனிக்க வேண்டியது என்னன்னா ஸ்ரேயாவுக்கு த்ரிஷாவ விட ஒரு வயசு ஜாஸ்தி, அனுஷ்காவுக்கு இரண்டு. எப்பவுமே மொக்க பிகருன்னு நெனச்சிட்டு இருந்த நயன் தாரா கூட, பாஸ் (எ) பாஸ்கரனுக்கு அப்புறமா சூப்பரா தெரிஞ்சாங்க. மறுபடியும் தம்மு, சமர், என்றென்றும் புன்னகை எல்லாம் பார்க்கறப்போ திரிஷா அப்போ இருந்தத விட இப்போ செம்ம பிகரா தோணுது. இந்த ஹன்சிகா, சமந்தா, ஸ்ருதின்னு எத்தனையோ பேரு வந்தாக்கூட எல்லாமே நம்ம வயசுக்கு ரொம்ப சின்னப் பொண்ணுகளாவே இருக்கேன்னு ஒரு பீலிங். இப்போ இந்த ஸ்ரீ திவ்யா பொண்ணு கூட மகேஷ் பாபு படத்துல குழந்தை நட்சத்திரமா நடிச்சதுதான். நம்ம கண்ணுமுன்னாடி கொழந்தையா இருந்த பொண்ணுங்கதான் இன்னிக்கி, ச்சே ச்சே, அதெல்லாம் சொல்லகூடாது.


சவுத் நிலைமைதான் இப்படியிருக்குன்னு நார்த் பக்கம் போனா அங்க இன்னும் மோசம். ப்ரீதி ஜிந்தா, ராணி முகர்ஜின்னு நம்ம காலத்து ஹீரோயினிகள எல்லாம் இப்போ யாரும் கண்டுக்கறதே இல்ல, கரீனா, பிரியங்கா மட்டும்தான் நம்ம வயசுக்கு ஓரளவு ஓக்கேன்னு தோணினாலும் அவுங்க கூட இப்போ 30+. புதுசா வந்த ஹீரோயினிக எல்லாருமே நமக்கு குழந்த சைஸ்லதான் இருக்காங்க, இந்த ஆலியா பட் இப்போதான் பத்தாம்பு படிக்கற பொண்ணு, நாம பத்தாம்பு படிச்சபள்ளிக்கூடமே இந்த உலக வரைபடத்துல இருந்து இன்னும் கொஞ்சம் நாள்ல அழிஞ்சிடப்போற நிலைமை. இந்த அனுஷ்கா ஷர்மா, சோனம் கபூர் போல அங்கங்க ஏதாவது நம்ம வயசுக்கு தக்கதா ஒன்னு ரெண்டு இருந்தாலும் அவுங்களுக்கும் பெரிய அளவுல எந்த படம் வாறதுமில்ல. இது என்ன நமக்கு வந்த சோதனைன்னு தெரியல.

இன்னும் கொஞ்சம் மேல ஹாலிவூட் பக்கம் போனா நிலைமை இன்னும் படு மோசம். நமக்கு புடிச்ச ஹீரோயினிகன்னு சல்மா ஹயேக், கேட் பெகின்சேல் எல்லாருக்கும் 40 தாண்டிரிச்சி, ஏஞ்சலினா ஜூலி, சந்திரா பல்லொக், ஜெனிபர் அனிஸ்டன், கேட் வின்ஸ்லெட்னு நம்ம பதின்ம வயசுல உலகத்த கலக்கின எல்லா ஹீரோயினிகளும் இப்போ 45+. அடுத்த கட்டமா இருக்கற மீலா கூனிஸ், நடாலி போர்ட்மேன், ரோஸ் பார்ன், அன்னா ஹதாவே எல்லாருமே 30+லதான் இருக்காங்க. சரி இந்த சிங்கர்ஸ் பக்கம் போகலாம்னா ஜென்னிபர் லோபேஸ், ஷகீரா.... அத ஏங்க கேக்குறீங்க. சரி புதுசா யாரு வந்திருக்கான்னு பார்த்தோம்னா இந்த ஜெனிபர் லாரென்ஸ், எம்மா வாட்சன், கிறிஸ்டீன் ஸ்டீவர்ட், மில்லா சைரஸ் எல்லாம் சின்னப் பொண்ணுங்க கட்டேகேரி, அதுங்கள கொஞ்சம் லுக்கு விட்டுட்டாலே எதோ நாம சிறுவர் துஷ்பிரயோகத்துல ஈடுபட்டுட்ட மாதிரியே உள்மனசு குறுகுறுக்குது. இத விட்டுட்டு நம்ம வயசுல செம்மையா ஒரு பிகருன்னு சொல்ல ஏதாவது ஒன்னு ரெண்டு எங்கவாது இருந்தா, அதுக கூட தேவையே இல்லாம ஏதாவது பிட்டு சீன்ல நடிக்குதுக, இல்லையின்னா "ஒபாமாவே என்னோட "அத" பார்த்திருக்காருன்னு" ட்வீட் போட்டு நம்மள சாகடிக்குதுக.இதைவிடவும் கேவலம் என்னனா சின்னவயசுல மீனா ஆண்டின்னு சொல்லிக்கிட்டு திரிஞ்ச நான் இப்போவெல்லாம் மீனா வரவர செம்மையா இருக்காங்கல்லன்னு மனசுக்குள்ள நெனைச்சிக்கறேன். மீனா மட்டுமில்லைங்க, காஜல் கூட தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே படத்துல இருந்தத விட மை நேம் இஸ் கான்லதான் சுப்பரா இருக்கறதா ஒரு பீலிங். அதையும் தாண்டி ஏதாவது ஒரு ஹாலிவூட் படம் பார்கறப்போ இந்த பிகரு செம்மையா இருக்கே, யாருன்னு பார்ப்போமேன்னு தேடினா கண்டிப்பா அவுக வயசு 32-43 தான். என்ன கொடும சார் இது? பொண்ணுங்க 28-40 அழகாயிடுறாங்களா,  நம்ம ரசனை இம்புட்டு மட்டமா இருக்கா, இல்ல ஒருவேள நிஜமாவே எனக்கு வயசாயிடிச்சா?


14 comments:

 1. வயசெல்லாம் ஆகலை மொக்கை..நீங்க கொஞ்சம் கொஞ்சமா ஆண்ட்டி-ஹீராவா ஆகிட்டு வர்றீங்க!

  ReplyDelete
  Replies
  1. பதிவை எழுதுனது புட்டிபால்.. போன வாட்டி வயசயிருச்சோன்னு நெஜமாவே பீல் பண்ணிருந்தேன்ல, அதுக்கு அவரு என்ன கலாய்ச்சிட்டாராமாம்...

   Delete
  2. நல்லவேள யாரு எழுதினதுன்னு அண்ணன் பார்கல, நம்ம மானம் தப்பிச்சது. ஆமாண்ணே, அது மொக்கதான் அந்த ஆண்ட்டி-ஹீரோ.

   Delete
 2. அங்க அஞ்சலி தேவி, பானுமதி எல்லாம் சொல்லுவீங்களோன்னு ஷாக் ஆயிட்டேன் நான்!

  ReplyDelete
  Replies
  1. நல்லவேள இந்த அளவோட நிப்பாட்டினேன், இல்லன்ன நம்மள பாட்டி-ஹீரோ ஆக்கியிருப்பங்க. ஆமா, அவங்கல்லாம் யாரு?

   Delete
 3. Replies
  1. நீர் என் ரத்தமடா, அழக்கூடாது.

   Delete
 4. த்சொ!த்சொ!!த்சொ!!!(நோ காமெண்ட்'ஸ்)

  ReplyDelete
  Replies
  1. நல்லவேள, நான் பத்மினி பத்தி சொல்லல.

   Delete
  2. என்னது,பண்ணையாரும் 'பத்மினி'யும் இன்னும் பாக்கலியா?அடடா........

   Delete
  3. அத ஏன் கேக்கறீங்க, என்ன என்னமோ விஜய் சேதுபதியோட இளமைக் காதல விட ஜெயப்ரகாஷோட முதுமைக் காதல்தான் கவர்ந்தது, வயசாச்சி தான் போல.

   Delete
 5. This is a phase that ,every one goes through.....do not worry.....it will pass thru.....

  ReplyDelete
  Replies
  1. யாரு பெத்த புள்ளையோ, மகாராசன், அனுபவஸ்தன். "எல்லாம் கடந்து போகுமடா, இந்த உண்மையை அறிந்தவன் ஞானியடா.."

   Delete

உங்கள் கருத்துக்கள்!!