Wednesday, March 26, 2014

நான் காண்டம் வாங்கிய கதைகள் 18+

"காண்டம்", அல்லது "ஆணுறை", அல்லது "அது". பதின்மவயதுகளில் "நமது  தேடி அறிந்து கற்கும் ஆற்றலை" மேம்படுத்திய விடயங்களில் அதுவும் ஒன்று. பெரும்பாலும் பள்ளிகூட உடலியல் சுகாதார பாட நேரங்களில் வாத்தியுடனும், அல்லது பாடம் முடிந்து க்ரூப் டிஸ்கஷனில் நண்பர்களுடனும் "அது" தொடர்பாக விவாதிக்கப்படும். எனினும் துரதிஷ்டவசமாக "பேசிகல்லி ஐ ஆம் எ ஷை டைப் போய்"  என்பதால் அவற்றில் ஆர்வமாக கலந்து கொள்ளாமலேயே  இருந்துவிட்டேன். 


காலேஜ் வந்தப்புறம்தான் விவேக் நகைச்சுவைகள் எல்லாம் பார்த்து கொஞ்சம் தைரியமாக "அதை" பற்றி பேச தொடங்கினாலும் "அதை" முழுசா ஒருவாட்டியாவது பார்ப்பதற்கான சந்தர்பங்கள் பெரும்பாலும் அமையவே இல்லை. சில வருடங்களின் பின், "எட் எ டைம்ல நாலு பிகர்ஸ் மெயின்டெயின்" பண்ண சகா ஒருவனின் பர்சில் எப்போதுமே நாலைந்து "அது" ஸ்டாக் வைத்திருப்பதாக அறிந்தேன். இறுதி பரீட்சைகளுக்கு முந்தய நாட்களில் அவன் கெஞ்சி  கேட்டு கொண்டதற்கிணங்க அவனுக்கு சொல்லி கொடுப்பதற்காக அவன் ரூமில் தங்கி, அவனுக்கு சொல்லிகொடுத்து நன்றிகடனாக அவன் பர்சில் இருந்த "அதை" முதல்வாட்டி  பார்த்தேன். இதை எல்லாம் எப்புடி மெடிகல் ஷாப்பில் கேட்டு வாங்குவது என்பது ஆச்சர்யகுறியாகவே இருந்தது. 


நானும் ஒரு நாள் காண்டம் வாங்கினேன். அந்த நிகழ்ச்சி நடந்து ஒரு நாலைந்து வருடங்கள் இருக்கலாம். நான், காலேஜ் முடிஞ்சு டெம்பரரியா அங்கேயே வேலை பார்த்துகொண்டிருந்தேன், புட்டிபால் இன்னும் ஸ்டுடென்ட். நமது சீனியர் அண்ணன் ஒருவரின் திருமணதிற்கு எல்லோரையும் அழைத்திருந்தார். நான், புட்டிபால் இன்னபிற நண்பர்கள் எல்லோருமாக 300-400 கி.மீ டிரைவ் பண்ணி முதல்நாளே அண்ணனின் ஊருக்கு சென்று, அங்கு அவர் நமக்கென ஏற்பாடு செய்து வைத்திருந்த இடத்தில தங்கி, செமையா எஞ்சாய் பண்ணிட்டு இருந்தோம். அடுத்த நாள் ஞாயிறு காலை திருமணம். தூங்கி ஏந்திரிச்சப்புறம்தான் "அடடே, அண்ணனுக்கு கிஃப்ட் ஒன்னும் வாங்கலயே" என்பது ஞாபகம் வந்தது. தீவிர குழு-ஆலோசனையின் பின், ஒருமித்த முடிவாக அண்ணனுக்கு உபயோகமாக நம் சார்பில் "காண்டம்" வாங்கி கொடுப்பது என முடிவானது. "காண்டம்" மட்டுமே கிஃப்ட் , மத்த படி இருக்குற வேலைய செஞ்சிட்டு நல்லா சாப்ட்டு நடைய கட்டுறதுதான் நம்ம திட்டம். 


ஞாயிறு காலை சுமார் 8.00-8.30 மணி இருக்கும் "காண்டம்" தேடி நானும் புட்டிபாலும், இன்னும் இரண்டு நண்பர்களும் அலைய தொடங்கினோம். அது கொஞ்சம் கிராமம் என்பதால், தேடுவது கஷ்டமாகவே இருந்தது. பக்கத்தில் உள்ள டவுனுக்கும் போய் பார்த்தோம், காலை வேளை என்பதால் எல்லா  மெடிகல் ஷாப்களும் மூடியே இருந்தன. இன்னும் கொஞ்சம் தேடிய பின், தூரத்தில்  ஒரு  மெடிகல் ஷாப்கார் அப்போதான் கடையை திறந்து கொண்டிருந்தார். மிகுந்த ஆர்வத்துடன், கடையை நோக்கி, கடைவாசல் வரை சென்று விட்டோம். கிட்ட போனப்புறம்தான், "யாருடா, அதை வாங்குறது?" என்னும் கேள்வி எழுந்தது. மீண்டும் ஒரு  குழு-ஆலோசனை, கடைசியில்  புட்டிபால்தான் சொன்னாரு, "நம்ம க்ரூப்லையே தொழில் புரியுற ஒரே ஆளு  மொக்கராசுதான், அவருதான் நமக்கெல்லாம் பெரிய மனுஷன், சோ, அவரையே அனுப்புவோம்"ன்னு. பயபுள்ள கோர்த்துவிடுறது தெரிந்தாலுமே, "ச்சே, நம்மளையும் மதிச்சு(உசுப்பேத்தி) இந்த வேலைய எல்லாம் கொடுக்குறானுகளே, இன்னிக்கு எப்புடியாவது வாங்கிரனும்டா கைப்புள்ள"ன்னு கடைக்குள் சென்றேன். 


"சார், எனக்கொரு காண்டம் தாங்களேன்" பச்சையாவே கேட்டேன். என்னை முதல் முறை கேவலாமா பார்த்த கடைக்கார் சில பாக்கட்களை எடுத்து வைத்து "இம்புட்டு வெரைடிஸ், இம்புட்டு பிளேவர்ஸ் இருக்கு, இதுல எது வேணும்"ன்னார். கொஞ்சம் தயக்கத்துடனையே ஒவ்வொன்னா தொட்டு  பார்த்துட்டு இருக்கும் போது, "நம்ம சீனியர் அண்ணன் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீமை விரும்பி சாப்பிடுவது" ஞாபகம் வந்தது. அண்ணனுக்கு பிடிக்குமேன்னு(!!), ஸ்ட்ராபெரி பிளேவர்லையே ஒன்னு வாங்கி விட்டேன். வெளியில் வந்து நண்பர்களிடம் காட்டினேன். அப்போ ஒருத்தன், "டேய், இதுல கிரிப் உள்ளது இருக்குடா, அதுதான்டா அண்ணனுக்கு வசதிப்படும்(!!), அத வாங்கியாடா"ன்னான். "டேய், இத மொதல்லையே சொல்ல வேண்டியதுதானே, நானே கொழப்பத்துல எத வாங்குறதுன்னு தெரியாம, இத வாங்கியாந்துருக்கேன், இப்போ ஒன்னும் பண்ண முடியாது"ன்னேன். ஏதோ மாப்பிளை அண்ணனுக்கு வாங்கிய "ஷர்ட் சரில்ல, மாத்திட்டு  வா"ங்குற மாதிரி "காண்டத்த மாத்தி, வேற வாங்கியற சொல்லி அடம் புடிசானுக. "சாதாரண அன்டர்வேரைய, இவை திரும்ப பெற்றுக்கொள்ளபட மாட்டாதுன்னு  கடைகள்ள போர்டு வச்சிருப்பானுக, இத எப்புடிடா மாத்திட்டு இன்னொன்னு கேக்குறது"ன்னு எதிர்வாதம் புரிந்தேன். இறுதியில் துணைக்கு இன்னொரு நண்பனையும் அனுப்பினார்கள். மீண்டும் கடைக்கு உள்ள போயி "சார், இது "வேணாமாம்", கிரிப் உள்ளதுதான்  "வேணுமாம்""ன்னு சொல்லி மாத்தி கேட்டேன். முதலை விட மிக கேவலமான பார்வையுடன், முதல் தடவை வாங்கி பத்து பதினஞ்சு நிமிஷம் கூட ஆகியில்லாததால் நம்பிக்கையுடனும்,  கடைக்கார் மாத்தி "கிரிப் உள்ளதை கொடுத்தார்"

மண்டபத்துக்கு வந்த பின்தான் அடுத்த பிரச்சினை தோன்றியது, "சரி, இத எப்புடிடா மாப்ளை அண்ணனுக்கு மணமேடையில் வச்சு குடுக்குறது?".  விடை கிடைக்காமல் குழப்பத்துடனே சாப்பிடுற வேலைய செஞ்சு முடிச்சோம். அப்போ, அந்த மாப்ளை அண்ணனே நம்மை அழைத்து "தம்பிகளா, அண்ணன் ஹனிமூன் போறதுக்கு துணிமணி(!)கள பெட்டில எடுத்து வச்சி கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்கடா"ன்னார். "ஆஹா, ஆடு அதுவாவே சிக்கிருச்சே" என்னும் சந்தோஷத்தில் ரொம்ப உற்சாகமாக அண்ணனின் சூட்கேசில் துணிமணிகளை அடுக்கி, பெட்டியை திறக்கும்போதே அண்ணி கண்ணில் பட்டு அண்ணன் அசடு வழிவதற்கு தோதாக, பாக்கட்டை உரித்து காண்டங்களை பெட்டியில் எல்லாத்துக்கும் மேலாக பரப்பி வைத்து, பெட்டியை அண்ணனிடம் கையளித்து வழியனுப்பி வைத்தோம்.  நாமும் திருப்தியுடன் ஊர் வந்தடைந்தோம். அடுத்த நாள் காலையிலேயே மாப்ளை அண்ணன் தொலைபேசியில் அழைத்து நமக்கு நன்றி சொன்னார். முக்கியாமான விஷயம், அண்ணனுக்கு திருமணமாகி எட்டே மாதங்களில் அழகிய மகன் பிறந்தான்.


ரெண்டாவது தடவை, ஆறு மாதங்களின் பின் நம்ம "கல்லூரி வகுப்பு தோழன்" ஒருவனின் திருமணம். ஏற்கனவே ராகிங் சீசனில் இருந்தே அவனுடன் பழகுவதால், "அவன் கை கால் எல்லாம் ரொம்ப சின்னதா இருக்குமேடா, இவன் சைஸ்க்கு எங்கடா வாங்குறது"ன்னு ஒரு குழப்பம் இருப்பினும், முன் அனுபவங்களின் மூலம் கடைக்காரிடம் இந்த முறை சரியாக கேட்டு வாங்கி பரிசளித்தோம். அவனுக்கும் ரெண்டே வருடங்களில் ரெண்டு குழந்தைகள். வாழ்த்துக்கள் நண்பா.

அதன் பின், அதுவே எனது வழமையான வெடிங் கிஃப்ட் ஆகிவிட்டது. அப்புடி பரிசளித்த நண்பர்கள் எல்லோருமே ஒரே வருடத்திற்குள் அப்பாவாகி, "டேய், அத வாங்கிட்டு போய் என்னத்தடா பண்ணுறீங்க?"ன்னு கேட்க வைத்தார்கள். சிலநண்பர்களின் திருமணங்களின் போது டைமிங் மிஸ் ஆகி கொடுக்க முடியாமல் போய், அவர்கள் அப்பாவாக ரெண்டு மூணு வருடங்களுக்கு மேலான அனுபவங்களும் உண்டு. நம்ம ராசி அப்புடி.பைதிவே, தற்சமயம் எனது மிக நெருங்கிய நண்பர், பிரபல பதிவர் ஒருவருக்கு மிக  விரைவில் திருமணம் நடப்பதற்க்கான அறிகுறிகள் தென்படுது. ஏற்கனவே காலேஜ் ராகிங் அனுபவங்கள் இருப்பதால், அவருக்கு அமேஸனில் "எக்ஸ்ட்ரா லார்ஜ்" சைஸு காண்டம் வாங்கி அமெரிக்காவுக்கு டோர் டெலிவரி பண்ணும் ஆர்வத்தில் உள்ளேன்.
*****************************

பின்குறிப்பு: சொந்தமா எனக்குன்னு இதுவரைக்கும் நான் காண்டம் வாங்குனதே இல்லை.

14 comments:

 1. வணக்கம்,மொ.ரா மாமா!நலமா?///எம்மாம் "பெரீஈஈஈஈய" மனசு,உங்களுக்கு!ஹி!ஹி!!ஹீ!!!(இப்ப தான் தெரியுது,எப்புடி ஜனத்தொக இந்தியா வுல எகிறுதுன்னு,ஹ!ஹ!!ஹா!!!)

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா.. நலமே.. எனக்கும் அதே டவுட்டுதான்.. நானும் எவ்வளவோ கஷ்டப்பட்டு வாங்கித்தர்றேன், இவனுக எடுத்துட்டு போயி, என்னத்தான் பண்ணுறானுக?

   Delete
  2. ஒரு வேள 'பலூன்' மாதிரி ஊதி,கட்டில் மேல கட்டிடுறாங்களோ?

   Delete
 2. பின்குறிப்பு: சொந்தமா எனக்குன்னு இதுவரைக்கும் நான் காண்டம் வாங்குனதே இல்லை.// தலையணையை கட்டிப் பிடிச்சு படுக்க அது தேவை இல்லை

  ReplyDelete
 3. இந்த காண்டம் சமாச்சாரமெல்லாம் டெலிவரியை “தள்ளிப்போடத்தானே ?”
  அப்புறம் எப்படிங்க அடுத்த 8 மாசத்தில “ அப்பா “ ----------------------------
  ஒரு வருஷத்தில “அப்பா” ?
  கொஞ்சம் புரியமாட்டேங்குதே !

  ReplyDelete
  Replies
  1. அதானே பாஸ்.. எனக்கும் புரியமாட்டேங்குது.. ஒருவேள அந்த ஜோக்ல வர்ற மாதிரி, இவனுக கை விரலில் மாட்டிகிறானுகளோ!

   Delete
 4. எதுக்கும் அடுத்த தடவை வாங்கினதும் செக் பண்ணிப் பாத்துட்டு பரிசளிக்கவும்.... ஹிஹி...

  ReplyDelete
 5. என்னே, பயனுள்ள பதிவு..! கம்பருக்கு அப்புறமா காண்டம் காண்டமா எழுதினது நீங்கதானுங்கோவ்!!

  ReplyDelete
  Replies
  1. ஹீ ஹீ... இத எல்லாம் நாம பண்ணாமல், வேற யாரு பண்ணுறதாம்! :-)

   Delete
 6. மொக்கை மாமா நலமா இது என்ன சீச்சீ !ஹீ

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ நேசரே! நலமே! ஹீ ஹீ, தாலியுடன் தவிக்குற உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா? பாரிஸுக்கு ஒரு பாக்கெட் காண்டம் பார்சேல்!!

   Delete

உங்கள் கருத்துக்கள்!!