Sunday, December 8, 2013

சந்தானம் இனிமே "அவ்வளவு"தானா? 2013ல் நடந்தது என்ன?

என்னாச்சி!
 சந்தானம் இனிமேல் அவ்வளவுதான்! சந்தானத்துக்கு என்னாச்சு! சந்தானம் "டொக்" ஆயிட்டாருய்யா! அதுதான் நம்மாளு வடிவேலு வந்தாச்சுல்ல இனிமேதான் இருக்குடி சந்தானதுக்கு! ஒரிஜினல்  கவுண்டமணியே ரிட்டர்ன் ஆகிட்டாரு, டூப்ளிகேட் சந்தானம் இனிமே மூட்டைய கட்ட வேண்டியதுதான்! எத்தன நாளைக்குதான் ஒன் லைனர்ஸ், டபுள் மீனிங் டயலாக்ஸ்ஸயே வச்சே ஒப்பேதுறது! அடுத்த வருஷம் சூரிதான் காமெடில பட்டைய கெளப்ப போறாரு, சந்தானம் பீரியட் ஓவர்! 

2013ம் ஆண்டில் இப்புடி எத்தனை விமர்சனங்கள் சந்தானத்தின் மீது! உண்மைலேயே சந்தானம் பீல்ட் அவுட் ஆயிட்டரா? அவருகிட்ட சரக்கு தீர்ந்துடுச்சா?ன்னு "அகாதுகா அப்பாடக்கர்ஸ்" "ரியல் சந்தானம் ஃபேன்ஸ்" பிரபல பதிவர்களாகிய நமக்கே ஒரு டவுட்டு! அதுனால அது சம்பந்தமா ஒரு ஆண்டிறுதி போர்மாலிட்டி பதிவு.

சந்தானம் நடித்து 2013ல் வெளிவந்த படங்களின் சோர்டெட் லிஸ்ட்டு வித் மினி அனாலிசிஸ்!

 • தீயா வேலை செய்யனும் குமாரு: படம் காமெடி ஹிட்டு, சந்தானம் காமெடி நல்லாவே இருந்துச்சு!
 • கண்ணா லட்டு தின்ன ஆசையா: 2013ல் சந்தானம் நடித்து வெளிவந்த முதல் படம் மட்டுமல்ல, சந்தானம் தயாரிப்பில் வெளிவந்த முதல் படம் கூட! பவர் ஸ்டார்+சந்தானம் அலம்பல்கள், இ.போ.நா.வா கதை,திரைகதை, மற்றும் சந்தானத்துக்கு அந்த டைம்ல இருந்த டிமாண்ட், அப்புறம் அது கூட வந்த மத்த படங்களுக்கு இதுவே மேல், போன்ற காரணிகளால் படம் ஹிட்டு!
 • சிங்கம் 2: ஹரி படம்! ஹிட்டு! சந்தானம் காமெடி ஒன்னும் அவ்வளவு ஸ்பெஷல் கெடையாது! பட் ஓகே ரகம்!
 •  ராஜா ராணி: ஒட்டு மொத்த படமே சில சுவாரசிய காட்சிகளின் தொகுப்பு, காமெடியும் ஓகே!
 • தலைவா: இந்த படம் நூறு நாள் ஒடுச்சாம், ஆனால், ஹிட்டா இல்லையானு தெரியல! நமக்கென்னமோ, இந்த படத்துல சந்தானம் காமெடிய விட இளைய தளபதி விஜய் பண்ண சீரியஸ் காமெடிக்கு செமையா சிரிப்பு வந்துச்சு!
 • யா யா , தில்லு முல்லு, வணக்கம் சென்னை: சிவா+சந்தானம் கூட்டணி ஒன்னு சேர மாட்டார்களான்னு அவுங்க ரெண்டு பேருகிட்டையும் ஒவ்வொரு டிவி இண்டர்விவ்லயும் ஏதோ விஜய்+அஜித் ரேஞ்சில் கேட்கப்படும். கலகலப்பில் ஏற்கனவே இணைந்திருந்தாலும், இணைப்பு காட்சிகள் குறைவு! ஆனால், சேர்ந்தால் படம் எவ்வளவு மொக்கையா இருக்கும்னு இந்த படங்களே சாட்சி! 
 • சேட்டை: டெல்லி பெல்லியின் மிக மோசமான தமிழாக்கம்! ஒவ்வொரு காமெடிக்கும் சிரிப்பே வரல!
 • பட்டத்து யானை: சாரி, இந்த படத்தை பார்க்கும் மனநிலையில் நாம இருக்கல! இதுவும்  மொக்கையாம்!
 அப்புறம் அப்புறம் அப்புறம்.... ஹீ ஹீ....
 • அலெக்ஸ் பாண்டியன்:  சுராஜ் செம மொக்க டைரக்டர்! மாப்பிளை படத்துலயே செம மொக்க வாங்குனாரு! இந்த டைரக்டர்கிட்ட சரக்கே இல்லங்குறதுக்கு இந்த படமும் ஒரு சாட்சி! காமெடின்னு பார்த்தாலும்  ஆபாசம் மட்டுமே!
நமக்கு தெரிஞ்ச அளவுக்கு, இவற்றை தவிர வேறு எதாவது சந்தானம் நடித்த படங்கள் இந்த ஆண்டில் வெளிவந்ததான்னு தெரியல! அப்புடியே வெளிவந்தாலும, அப்புடி ஒன்னும் பெருசா ஹிட் ஆனா மாதிரி தெரியல! ஆக, கூட்டி கழித்து பார்த்தால், ரெண்டே ரெண்டு படங்கள்! தீ.வே.செ.கும் க.ல.தி.ஆம் மட்டுமே சந்தானம் ரசிகர்களுக்கு ஏமாற்றமளிக்காத படங்கள்!

இது தொடர்பாக டீடெயில்ட் அனாலிசிஸ் பண்ணுற அளவுக்கு நான் ஒன்னும் பெரிய சினிமா எக்ஸ்பெர்ட் அப்பாடக்கர் கெடையாதுன்னாலுமே, எனக்கு தெரிஞ்சு சந்தானத்தின் இந்த லெட் டவுனுக்கு என்ன காரணங்கள்ன்னு யோசிச்சு பார்த்தால்..
 இப்போ சமீபத்துல ரெண்டு வருசத்துக்கு முன்னாடிதான் இவரு பீக்குக்கு வந்தாரு. பல கமர்சியல்  டைரக்டர்களும் பிசினஸ்க்காக படத்தின் கதையில் எப்புடியாவது சந்தானத்தை நுழைச்சுறாங்க. நம்மாளும் இதுதான் டைம், இத விட்டா பிற்காலத்துல இந்த அளவுக்கு சம்பாதிக்க முடியாதுன்னு, ஒரு நாளைக்கு பல லட்சங்கள்ன்னு கால்ஷீட் கொடுத்து ஒய்வில்லமா நடிச்சிகிட்டு இருக்காரு. அது போக, வர்ற பணத்துல பாதி பணம் கருப்பு பணம், ஐ.டி டிப்பார்ட்மென்ட் கொடுக்குற குடைச்சல்கள். இத ஏன், சொல்றேன்னா, மற்றைய நடிகர்களவிட காமெடி நடிகர்களுக்கு சொந்த சரக்கும் கிரியேட்டிவிட்டி மூளையும் ரொம்ப அவசியம். மனுஷன்  பிஸியாவும்,   ஸ்ட்ரெஸ்ஸாவும் இருந்தா கிரியேட்டிவ்வா வேலை செய்ய முடியாது. பொதுவா ஒவ்வொரு காமெடி நடிகரும், எழுந்ததும் வீழ்ந்ததும் இந்த ஒரே காரணத்துனாலதான்.

எந்த ஒரு காமெடி நடிகருக்குமே லாங் லாஸ்டிங் பீக் டைம் இருந்தது கெடையாது. நம் அனுபவத்தில் நாம் பார்த்த, கவுண்டமணி+செந்தில் கூட்டணியின் வெற்றி, அதன் பின் கவுண்டர் தனித்து, செந்தில் தனித்து, வடிவேலுவின்  ஆரம்ப கால கட்டங்கள், அப்புறம் மணிவண்ணனின் எழுச்சி,  2000ன் ஆரம்பகளில் விவேக் அலை அடித்து ஓய்ந்தது! அப்புறம் "வின்னர்", "கிரி"க்கப்புறம் வடிவேலுவின் இரண்டாம் இன்னிங்க்ஸ். ஒரு கட்டத்துக்கு பின் வடிவேலுவின் வெற்றிகரமான இரண்டாம் இன்னிங்க்ஸ் நமக்கு போரடித்து கொண்டு வர ஆரம்பிக்கும் போதே, அவராவே வான்டட்டா தகறாரு பண்ணி பீல்ட் அவுட்! அதன் பின் இப்போ சந்தானம்!
 நீ பார்க்காத தோல்வியா, நீ பார்க்காதவெற்றியா? தல!
சந்தானம் பீல்ட் அவுட்டானப்புறமும் ரசிகர்கள் மனசுல நிலைச்சு நிற்கனும்ன்னா, நல்ல காமெடி சென்ஸ் உள்ள டைரக்டர்ஸ் கூட சேர்ந்து கொஞ்சம் அவரோட சரக்கையும் சேர்த்து ஒர்க் அவுட் பண்ணலாம். படங்களின் எண்ணிகைய விட, காமெடியின் தரத்தில் கவனம் செலுத்தலாம். வெறும் டயலாக்ஸ விட்டுட்டு ஓகே ஓகே மாதிரி வித்தியாசமான பாடி லாங்வேஜ்களில் கவனம் செலுத்தலாம். அது போக, இப்போ தியேட்டருக்கு காமெடி படம் பார்க்க வர்ற இளைஞர்கள் பலர்  மொக்க காமெடிய விட டார்க் ஹியூமர், பிளாக் காமெடி என சொல்லப்படும் மூடர்கூடம், ந.கொ.ப.கா, சூது கவ்வும் போன்ற காமெடிகளையே ரொம்ப ரசிக்கிறாங்க (எல்லாருமே அப்புடியான்னு தெரியல, ஆனால் நாங்களும் யூத்து அன்ட் நாங்க அப்புடிதான், ஹீ ஹீ ) சந்தானத்தால  அத பண்ண முடியுமான்னு தெரியல, பட் ட்ரை பண்ணி பார்க்கலாம்.
 இவ்வளவு சொல்லி என்ன ஸார் பயன்! சந்தானம் இத வாசிக்கவே போறது இல்லல. ஓகே, காசு வருது, நல்லா பணம் சம்பாதித்துகொண்டே நமக்கு புடிச்ச மாதிரி, கொஞ்சம் ரசிக்கிற மாதிரி அடுத்த வருசமாவது சில நல்ல காமெடி படங்களில் நடிப்பார்ன்னு நம்புவோமாக!

போனஸ்  ஸ்டில்:
நம்ம சந்தானமாய்யா  இது! என்றென்றும் புன்னகை ஸ்டில்!

15 comments:

 1. சரிய சொன்னீங்க பாஸ்

  ராஜராணி,சேட்டை எனக்கு பிடிச்சு இருந்துச்சு பாஸ்

  ReplyDelete
  Replies
  1. ஒரு வேள நீங்க ஆர்யா ஃபேன்னோ!

   Delete
 2. I liked suruli type acting in all in all a.raja...
  Pattathuyaanai comedy is also okay. Both characters are not with his regular boring style counter dialogue comedy. .
  He should avoid double meaning dialogue. .

  ReplyDelete
 3. Already he reached peak at least for some time. .
  Now he's getting down. .
  It's natural. It happens to all..
  Somebody staying more time at the peak..

  ReplyDelete
 4. இனி வருங்காலங்களில் தான் நடப்பதை தெரிந்துகொள்ள வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க, வருங்காலங்களில் தான் இனி நடப்பதை தெரிந்துகொள்ள வேண்டும்... இப்போவே தெரிஞ்சிக்க முடியாது!

   Delete
 5. நல்ல அலசல் மாமு !

  ReplyDelete
 6. இம்புட்டு டீடைல் சொல்லிட்டு கடைசியில போட்ட படம் தான் டாப்பு...

  ReplyDelete
  Replies
  1. தமிழ்வாசி ஹேப்பி அண்ணாச்சி... :-)

   Delete
 7. ஆண்டின் இறுதியில் செய்ய வேண்டிய பணியை சரியாக முடித்திருக்கிறீர்கள்,மாமா!நன்று&நன்றி!காமெடி யில் கொடி கட்டிப் பறந்த 'அந்தக்' காலம் போல் இல்லையே இந்தக் காலம்?தகவல் ஒன்றை நகைச்சுவை மூலம் சொன்னார்கள்,அந்தக் கால என்.எஸ் கிருஷ்ணன்,சந்திரபாபு,நாகேஷ்,வீ.கே.ராமசாமி................என்று!இப்போது டைமிங்குக்கு,விரசம் தானே மலிந்து கிடக்கிறது?கவுண்டர்&செந்தில் அப்படி இல்லை என்பது ஆறுதல்!நம்ம ஆளு 'சேத்தி' சரியில்லை,ஹ!ஹ!!ஹா!!!

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஐயா, வணக்கங்க ஐயா... பழம்பெரும் பதிவரா நாமளும் நம்ம கடமைய செஞ்சிதானே ஆகனும்! அப்புறம், அது என்னமோ தெரியல ஐயா, எனக்கு அந்த கால காமெடிகளுக்கு அவ்வளவா சிரிப்பே வராது!

   Delete

உங்கள் கருத்துக்கள்!!