Monday 21 January 2013

சந்தானத்தின் சரித்திர வெற்றி, பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சந்தானம்  தயாரிப்பில் முதல் படமான "கண்ணா லட்டு தின்ன ஆசையா" பொங்கலுக்கு வெளிவந்து வசூலில் சக்க போடு போட்டு கொண்டு இருக்கிறது. அதனுடன் வந்த மற்ற ஹீரோ நடிகர்களின் படங்கள் எல்லாத்தையும் பின்தள்ளி பாக்ஸ் ஆபிஸ் வசூலில் முதலிடத்தை பெற்றுள்ளது. கார்த்தி, விஷால் போன்றோராலேயே காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானம் + சூப்பர் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன் கூட்டணியின் வெற்றிக்கு முன்னால் நிற்க முடியவில்லை. மூன்று கோடியில் சந்தானத்தால் பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரிக்கப்பட்டு ஆறு கோடிக்கு விற்கப்பட்ட படம் வெளிவந்து மூன்றே நாட்களில் தமிழ்நாட்டு தியேட்டர் வசூல் மூலமாக மட்டுமே ஆறு கோடியிலும் அதிக வசூலை பெற்று,  டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ் ஷேர் மட்டும் மூணு கோடியே எழுபதஞ்சு லட்சத்தை தாண்டியுள்ளதாம், மூணே நாளில்!!. நான்காம்  நாளில் இருந்து வருவது எல்லாமே லாபக்கணக்கில் மட்டுமே.


ரிப்பீட் ஆடியன்ஸ் காரணமாக, முதல் வாட்டி படம் பார்ப்பதற்க்கே இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை என் படம் பார்க்காத ரசிகர்களின் கம்ப்ளெயின்ட்ஸ் ஒரு பக்கம்.  முதல் வாரம் முழுவதுமே, 90%த்திலும் அதிக தியேட்டர் ஒக்யூபென்சி(பல இடங்களில் 100%), அது போக கடந்த வெள்ளிகிழமையில் இருந்து தியேட்டர் எண்ணிக்கைகள் வேறு அதிகரித்து கொண்டே உள்ளது. சத்தியம் மெயின் ஸ்க்ரீன் முதல் கொண்டு பல மல்டிப்ளெக்ஸ் மெயின் ஸ்க்ரீன்களை முதலில் திரையிடப்பட்ட படங்களை தூக்கி விட்டு "கண்ணா லட்டு தின்ன ஆசையா" ஆக்கிரமித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமில்லை, வெளிநாட்டு விநியோகத்திலும் செமவசூல். அலெக்ஸ் பாண்டியன் நாலு நாளில், ஆறு ஸ்க்ரீனில்  அமெரிக்காவில் வசூலித்ததை, கண்ணா லட்டு தின்ன ஆசையா ரெண்டே நாளில் வெறும் மூணே மூணு ஸ்க்ரீனில்  தாண்டி விட்டது  என "ட்ரேட் பண்டிட்ஸ்" ரிபோர்ட் சொல்கின்றன.  இக்கால ரசிகர்கள், இளைஞர்கள்  தியேட்டரில் எதை எதிர்பார்க்கிறார்களோ அதை மட்டுமே கொடுத்து, அவுட்-என்ட்-அவுட் காமெடி என்டர்டெயின்மென்டாக  படத்தை தந்து அடைந்துள்ள இந்த வெற்றி சாதாரண வெற்றியல்ல, சந்தானத்தின் சரித்திர வெற்றி.

தமிழ் சினிமாவில் எப்போதுமே காமெடி படங்களுக்கு நல்ல வரவேற்ப்பு உண்டு. ஆனால், மிகச்சிறந்த காமெடி படம் ஒன்று ஒரு குறிப்பிட்ட ஆண்டில் வெளிவந்தால் அதன் பின் அதுபோல இன்னொரு சிறந்த காமெடி படம் வருவதற்கு  குறைந்தது இரண்டு வருடங்களாவது செல்லும். காமெடி ஜோனர் படங்கள் மட்டுமே என ஒரு டிரென்ட் என்றைக்குமே இருந்ததில்லை. ஆனால், சந்தானத்தின் எழுச்சியின் பின் 2012இன் பிற்பகுதியில் இருந்து அவ்வாறு ஒரு டிரென்ட் தமிழ்சினிமாவில் உருவாகியுள்ளது. பாஸ் என்கிற பாஸ்கரன், ஓகே ஓகே , கலகலப்பு , நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற முழுநீள காமெடி படங்களின் வெற்றியின் பின், இன்றைய தினத்தில் பூஜை போடப்படும்  படங்களில் பாதிக்கும் மேலான  படங்கள் காமெடியை மட்டுமே களமாக கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இவ்வாறு ஒரு டிரென்டடை உருவாக்கிய பெருமை முழுக்க முழுக்க சந்தானம்+ராஜேஷ் கூட்டணியையே சாரும். 

We wanna wish you it's your birthday
Blow up the candles it's your birthday birthday
Black-Forest cake wish your birthday

இன்று ஜனவரி 21, 2013, தனது 33வது வயது பிறந்ததினத்தை அசத்தல் வெற்றியுடன் கொண்டாடும் காமெடி சூப்பர்ஸ்டார் சந்தானதிற்கு எம் சார்பாகவும் எம்மை போன்று உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான "ரியல் சந்தானம் ஃபேன்ஸ்" சார்பாகவும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். சந்தானத்தின் இன்றைய வெற்றியின் பின்னால் உள்ள  கடின உழைப்பு, விடா முயற்சி, தன்னம்பிக்கை, புத்திசாலித்தனம் நண்பர்களின் பங்களிப்பு என்பன பற்றி உங்களுக்கெல்லாம் ஏற்கனவே தெரியும், அவை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். இந்த வருடத்தில் அடுத்தடுத்து சந்தானத்தின் பங்களிப்பில் வரவுள்ள மாப்பிளை விநாயகர், அமளி துமளி, வானவராயன் வல்லவராயன், சிங்கம் 2, பூலோகம், 555, ஐ, வாலு, சேட்டை, என்றென்றும் புன்னகை, மத கஜ  ராஜா, ஆல் இன் ஆல் அழகு ராஜா, ராஜா ராணி, பட்டத்து யானை, தீயா வேலை செய்யனும் குமாரு, யா யா , தலைவா, அஜித்-சிவாவின் அடுத்த படம், இது கதிர்வேலன் காதல் போன்ற   அனைத்து படங்களும் காமெடி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, மேலும் பல வெற்றிகளை அடைய வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். வாழ்க வளமுடன்!

12 comments:

  1. கவுண்டமணி எப்படி 33 வருஷமா சினி பில்டை கலக்கினாரோ, அதை விட கூடுதல் வருஷம் சந்தானம் கலக்குவார்.
    அவருக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
    FB பார்த்து உங்களுக்கு தான் பிறந்த நாள்ன்னு நினைச்சுட்டேன்... :):)

    ReplyDelete
    Replies
    1. சந்தானம் பிறந்த நாள், நம்ம எல்லாருக்கும் கொண்டாட்ட நாள்தான் பாஸ்...

      Delete
    2. தப்பி தவறி அரசியல் வாதிகளின் சதியில் விழாமலும் இருக்கணும்
      Politicians have failed to escape the conspiracy vilamalum

      Delete
  2. சர்ச்சைகளில் சிக்காமல் இருந்தால் சரி....

    ReplyDelete
  3. மீண்டும் "ஜாவா எச்சரிக்கை" - http://mytamilpeople.blogspot.in/2013/01/how-to-disable-java-in-browsers.html

    ReplyDelete
  4. ஆனாலும் நண்பா.. லட்டை பொறுத்த வரை நம்ம விமர்சகர்கள் சந்தாவை கண்டுக்காமல் விட்டது போலவே தோணியது.. இருந்தாலும் அந்த குறை இந்த பதிவின் மூலம் நிறைவாயிடிச்சு.. சூப்பர் தல

    ஹேப்பி பெர்த்டேய் சந்தா

    ReplyDelete
  5. கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை பார்த்தால் அதில் சந்தானத்தின் அசுர உழைப்பு நன்றாகவே தெரியும். ஏனோ தனக்கிருக்கும் மார்க்கெட்டை வைத்து படத்தை ஒட்டி விடலாம் என்று நினைக்காமல் அவர் மெனக்கெட்டு உழைத்ததே படத்தின் வெற்றிக்கு காரணம். பிறந்தநாள் வாழ்த்துக்கள் சந்தானம்.

    ReplyDelete
  6. It is really good time as no much competition for comedians.

    Cinema News

    ReplyDelete
  7. சந்தானத்துக்கு வாழ்த்துக்கள் சொன்ன எல்லாருக்கும் சந்தானம் சார்பாக நன்றிங்கண்ணா...

    வழக்கமா சொல்றமாதிரி, நாங்க ரொம்ப பிஸி... ஆனால், சந்தானம் பர்த்டே வருசத்துக்கு ஒரே ஒரு முறை மட்டுமே வருவாதாலும், இந்த வருஷம் விட்டால், இனி அடுத்த வருஷம்தான் திரும்பவும் சந்தானத்திற்கு பிறந்த நாள் வாழ்த்து பதிவு போட முடியும்ங்குற ஒரே காரணத்தினாலும்.. "டெல்லி புரோகிராம்ம கேன்சல் பண்ணிட்டு", இன்னிக்கு வாழ்த்து பதிவு போட்டோம்.. ஹே குஞ்சாயி!!

    ReplyDelete
  8. ungalukku vasathiya inru poi naalai vaa padattha pathi eluthama vittuteengale... ithu appattamana copy thaana.....

    ReplyDelete
  9. சந்தானம் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! Real Santhanam Fanz (General)

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்!!