Friday, March 23, 2012

ஒரு கோடி உங்களுக்கே - ஆரியாவும் சந்தானமும்


நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி அப்புடின்னு ஒரு ப்ரோக்ராம் ஆரம்பிச்சிருக்காங்க, நம்ம சூர்யா மொக்க மொக்கையா கேள்வி கேக்குறாரு. அந்த ப்ரோக்ராமோட எல்லா மொழி வேர்சனையும் பார்த்ததுனால நமக்கு உண்டான விபரீத சிந்தனைதான் இந்த பதிவு. இது வெறும் கற்பனை மட்டுமே. இதுல ஹோஸ்ட் பண்ணுரவரு நம்ம தலைவர் சந்தானம் அண்ட் கன்டெஸ்டன்ட் ஆர்யா. இப்ப நிகழ்ச்சிக்கு போவோமா?

சந்தானம்: இப்போ அடுத்ததா ஹாட் சீட்டுக்கு வர போறது யாருன்னு பார்போம்.  உங்கள் மின்னல் விரல்களுக்கான கேள்வி:

பின்வரும்  நடிகைகளை அவர்களின் $^%&^@#$ சைஸின் அடிப்படையில் சரியாக வரிசை படுத்தவும்:
A)    இலியானா                                                                     B)ஷகீலா
C)     நமிதா                                                                              D) திரிஷா


.......... டைம்ஸ் அப்....  சரியான வரிசை இது : நமிதா, இலியானா, திரிஷா, ஷகீலா.

எத்தன பேர் சரியா வரிசை படுத்தி இருக்காங்கன்னு பார்போம்? அடடா ஒரே ஒருத்தன்தான் வந்துருக்கான். சரி அவன் எப்புடி வரிசை படுத்தி இருக்கான்னு பார்போம்? இதோ அவருடைய வரிசை:   
                                       ஷகீலா, நமிதா, திரிஷா ,இலியானா  

டேய்.. இது என்னடா புது வரிசை, அவுங்க காலுக்கு போடுற செருப்பு சைஸ் அடிப்படையில் சரியாக வரிசை படுத்த சொன்னா, நீ பாட்டுக்கு உன் இஷ்டத்துக்கு எதையோ வரிசை படுத்தி இருக்க... உன்ன எல்லாம் போட்டில சேர்த்துக்க முடியாது, நடைய கட்டு.

ஆர்யா: ஹ்ஹேய் ஹோய்.. நீங்க சொன்னது எனக்கு சரியா காதுல விழல பிரதர். நா வேற எதையோ யோசிச்சிகிட்டு வரிசை படுத்திட்டேன். இப்ப வேற கன்டெஸ்டன்ட்சும் இல்ல, நீங்க என்னைய போட்டில சேர்த்துகிட்டுதான் ஆகனும்.

சந்தானம்: நீ என்ன கருமாந்திரத்த நெனச்சி தொலச்சியோ.. அதெல்லாம் வேலைக்கு ஆகாது. நீ நடைய கட்டு.

 ஆர்யா: வாட் தின்க் யூ? இடியட், ஸ்டுபிட், நான்சென்ஸ், யூ கன்றிப்ரூட்.... கேம் ஷோ நோ, மனி நோ, மேரேஜ் நோ,  மேட்டர் நோ, சில்ட்ரன் நோ. ஐ கம்பெலெய்ன் டிரெக்டர். வாட் நேம், டெல் நேம், டெல் டெல் டெல். கமான்..

 சந்தானம்: ஐயோ, ராமா.. என்ன ஏன் இந்த மாதிரி கழிசர பசங்களோட எல்லாம் கூட்டு சேர வக்கிர. அடச்சே, இவன்கூட சேர்ந்து நமக்கே ட்ராக் மாறுதே. இவன சேர்துக்கலன்னா இந்த மாதிரி இங்கிலீஸ்ல பேசியே கொல்வானே. சரி வந்து தொல..

சந்தானம்: வாங்க Mr. ஆர்யா. ஒங்க கூட யாரு வந்துருக்காங்க?

ஆர்யா: அதோ அங்க ஓரமா ஒக்காந்து இருக்காரே. அவரு என்னோட பிரண்டு... அரியர் பிரண்டு  சுவாமிநாதன்.

சந்தானம்: யாரு? அந்த முட்டபோண்டாக்கு டை கட்டுன மாதிரி ஒருத்தன் அவனா? ஓகே. Mr. சுவாமிநாதன். ஒங்க அரியர் பிரண்டு ஆர்யாக்கு போட்டிக்கு போறதுக்கு முன்னாடி, நீங்க என்னா சொல்லிக்க விரும்புறீங்க.

சுவாமிநாதன்: ஜெயிச்சி மட்டும் தொலச்சிடாதீங்க பாஸ். அப்புறம் நா தனிமரம் ஆகிடுவேன். கடவுளே இவர எப்புடியாவது தோக்க வச்சிரு.

ஆர்யா: அடிங்...

சந்தானம்: "முகநக நட்பது நட்பல்ல.." குறளுக்கு எடுத்துக்காட்டா இருக்காங்க இவுங்க ரெண்டு பேரும். ஓகே. இப்ப Mr.ஆர்யாவ பத்தி சின்னதா ஒரு வீடியோ கிளிப்.

வீடியோ ஸ்டார்ட்:
இதோ இந்த வீடியோ க்ளிப்ள நீங்க பார்க்குறீங்களே.. இவருதான் Mr.ஆர்யா. இவர பத்தி திருக்குறள் மாதிரி ரெண்டே வரில சொல்லனும்னா.. இருபத்தி நாலு மணித்தியாலமும் பிசியாவே இருப்பாரு, ஆனா எந்த வேலையும் செய்ய மாட்டாரு. அதாவது வேல வெட்டி எதுவும் இல்ல, டிகிரி கூட இல்ல. ஆனா எதோ டோக்கோமோ கம்பேனி ஓனர் மாதிரி எப்ப பாரு கூலிங் கிளாஸ் போட்டுகிட்டுதான் இருப்பாரு. நம்ம பில்லா தல மாதிரி நைட்ல கூட சன் கிளாஸ் போடுவாரு. இவரோட ஸ்பெஷாலிட்டி என்னான்னு பார்த்தீங்கன்னா, அது இவரோட விடாமுயற்சிதான். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி.
வீடியோ என்டு.

சந்தானம்: ஓகே Mr.ஆர்யா... சொல்லுங்க.... Mr. ஆர்யா சார்... ஆர்யா சார்...ஆர்யா.. டேய் ஆர்யா... அடடே தூங்கிட்டான்.. டேய் ஆர்யா ஏந்திரிடா...

ஆர்யா:(தூக்கத்துல இருந்து அலறிகிட்டு) எங்க என் காரு, எங்க என் பங்களா, எங்க என் பொண்டாட்டி நயன்தாரா!, எங்க என் டிரைவர் நல்லதம்பி.

சந்தானம்: டேய் இன்னும் ஷோ ஆரம்பிக்கவே இல்ல. அதுக்குள்ள கனவுலையே காசு ஜெயிச்சி, குடும்பம் நடத்திட்டியா? அடசே கூலிங் கிளாச கழட்டுடா.. இப்ப சொல்லுங்க Mr.ஆர்யா நீங்க எதுக்கு இந்த ஒரு கோடி உங்களுக்கேல பங்குபற்றனும்ன்னு ஆசைப்பட்டீங்க? இதுல கெடைக்கிற பணத்துல நீங்க என்ன பண்ணலாம்னு இருக்கீங்க?

ஆர்யா: என்ன பிரதர் இப்புடி கேக்குறீங்க, நானும் பாஸ் என்கிற பாஸ்கரனுக்கு அப்புறம் ஒரு மூணு படம் நடிச்சிட்டேன், எதுவுமே பெருசா ஹிட் ஆகல, அதனால இந்த நிகழ்ச்சில பங்குபற்றி கெடைக்கிற காசுல சொந்தமா ஒரு படம் எடுக்கலாம்ன்னு வந்திருக்கேன்.

சந்தானம்: என்னது நீ சொந்த படம் எடுக்கப்போறியா? அதுக்கு பணம் வேணும்னா இந்த கடை திறப்பு விழா அப்புறம் கல்யாணத்துல டான்ஸ் ஆடுறது, இல்லன்னா டிவில ஏதாவது ப்ரோக்ராம் பண்றது இப்புடி ஏதாவது ட்ரை பண்ணலாமே, இங்க எதுக்கு வந்த  நீ? நீ என்னா அவ்வோளவு பெரிய அப்பாடக்கரா?

ஆர்யா: என்னப்பா தெரியாத மாதிரியே கேக்குற, நம்ம தமிழ் சினிமாவுல எப்பவுமே பாக் அப் பிளான்னா அது சந்தானம் தானே, என்னோட மூணு படம் சரியா போகாததுக்கு காரணம் அந்த படத்துல நீ இல்லாதுதான்னு ஒரு பேச்சு இருக்கு, அதுதான் என்னோட பாக் அப் ப்ளான் ஒன்கிட்டயே வந்துட்டேன். யப்பா கமரா மென், இத எடிட்டுல தூக்கிடுங்கப்பா..

சந்தானம்: Fact-u...Fact-u...Fact-u.. (அப்பாடா நம்ம படத்துக்கு பப்ளிசிட்டி பண்ணியாச்சு). இனியும் வெட்டியா நேரம் செலவழிக்காம நேரடியா நிகழ்ச்சிக்கு போவோம், மனி அண்ணே நீங்க ரெடியா? ரசிக மகா ஜனங்களே நம்ம ஆர்யாக்கு ஜோரா ரெண்டாவது வாட்டி கை தட்டுங்க..

சந்தானம்: ஓகே, நம்ம போட்டிக்கு போகலாம். உங்களுக்கான முதல் கேள்வி,

ஆங்கில அரிச்சுவடியில் முதல் எழுத்து எது?

A) C                                                                                                                  B) I
 C) A                                                                                                                 D) G

ரொம்ப யோசிக்காத, சட்டுன்னு சரியான ஆப்சன சொல்லு.
ஆர்யா: இது எனக்கு தெரியும்பா, A

சந்தானம்: யோவ், இந்த சின்ன கேள்விக்கு கூட உனக்கு பதில் தெரியல நீயெல்லாம்... 

ஆர்யா: சரியான பதில்தானே சொன்னேன், இவன் எதுக்கு டென்சன் ஆகுறான்? சரி எதுக்கும் ஆடியன்ஸ் போலுக்கு போவோம்.

சந்தானம்: ஆடியன்ஸ் போல், ஆடியன்ஸ் எல்லாம் சரியான ஆப்சன், ஆப்சன் C அப்புடின்னு சொல்லியிருக்காங்க, ஆர்யா அதே லாக் பண்ணிடலாமா?

ஆர்யா: ஓ, பதில சொல்லகூடாதா? ஆப்சன தான் சொல்லனுமா? நல்லா நடத்துரீங்கய்யா போட்டிய, அதயே லாக் பண்ணி தொலை..

சந்தானம்: சரியான பதில், நீங்க ஆயிரம் ரூபா ஜெயிச்சிருக்கீங்க ஆர்யா? இத வச்சுக்கிட்டு நீங்க என்ன பண்ண போறீங்க?

ஆர்யா: மைசூர் பாலஸ்ஸ வெலைக்கு வாங்கலாம்ன்னு இருக்கேன்.

சந்தானம்: ஆயிரம் ரூவாக்கு மைசூர் பாகு வேணும்னா வாங்கலாம், சாப்ட நான் ரெடி. ஹ்ஹ்ஹங்ங்..... முதல்ல நீ அந்த கூளிங்க்லாச களட்டுடா. இப்போ இரண்டாயிரம் ரூபாவுக்கான ரெண்டாவது கேள்வி,

ஆர்யா: என்னய்யா இது, இப்போதானே ரெண்டாயிரம் ரூபாவுக்கான முதலாவது கேள்விய கேக்குற, அப்புறம் என்ன ரெண்டாயிரம் ரூபாவுக்கான ரெண்டாவது கேள்வி?

சந்தானம்: ஓன் லாஜிக்குல வெளக்கெண்ணய வச்சு தேய்க்க, சூர்யா கூட இப்புடித்தான் சொல்றாரு, எல்லாம் ஒரு ப்லோவுல வந்திடிச்சு.  இதெயெல்லாம் டீல்ல விடுவியா.. உனக்கான ரெண்டாவது கேள்வி,

......கீங்...

சந்தானம்: ஐயோ, இன்னிக்கான நேரம் முடிவடைந்தது, நாம மறுபடியும் அடுத்தவாரம் சந்திக்கலாம், இன்னும் சுவையான கேள்விகளோடும் சுவாரஷ்யமான சமாச்சாரங்களோடும். பிரேக்குக்கு அப்புறம் தீயா வேல செய்யனும் பாஸ்.



டிஸ்கி: இது சூர்யாவை கலாய்க்கும் பதிவு அல்ல.கடந்த  வார எபிசோட்களில் சூர்யாவிடம் நல்ல முனேற்றம் தெரியுது. சினிமாவை போலவே,சிறிது காலத்தின் பின்  தக்க பயிற்சியுடன் சூர்யா இன்னும் மெருகேருவார்ன்னு தோணுது. அப்புறம் கோஹ்ன் பனேகா குரோர்பதி(கோடிஸ்வரன்) நிகழ்ச்சி வந்த சமயத்துல சந்தானம் மற்றும் மனோகர் செய்த ஸ்பூப் நிகழ்ச்சியும் செமயா இருக்கும், நீங்க யூட்யூப்ல தேடி பார்க்கலாம்.

டிஸ்கி 2: இந்த பதிவு நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்ட பதிவு. இத ஒரு கம்பேக் பதிவா பதியுறோம். அடுத்தடுத்து ஓகே ஓகே ப்ரோமோஷன் பதிவுகள்.

Saturday, March 17, 2012

வழி காட்டிய நோக்கியா பொண்ணும் கவிஞர் ஆகிவிட்ட சந்தானமும் - கும்பளிங் கும்பளிங்

எல்லாருக்கும் வணக்கமுங்க, 

மறுபடியும் பதிவு எழுத ஆரம்பிக்காலமுன்னு பார்த்தா உருப்படியா ஒரு மேட்டரும் சிக்க மாட்டேங்குது. அப்புடி எதாச்சு சிக்கினாலும் நாம பதிவு ரெடி பண்ணரதுக்குள்ள அது ஒவுட் டேட்டட் ஆகிடுது. இப்புடியே போனா பதிவுலகமே நம்மள மறந்திடுமேன்னு யோசிக்கிட்டு இருந்தப்போதான் ரொம்ப நாளா ட்ராப்டுல இருந்த சில பதிவுகள் கண்ணுல பட்டது,  கொஞ்சமா தூசு தட்டி டின்கேரிங் பண்ணி பப்ளிஷ் பண்ணலாம்ன்னு ஒரு ஐடியா, இருந்தாலும் அது வெளியில தெரியாம இருக்கறதுக்காக அப்பப்போ மானே தேனே எல்லாம் போட்டு பக்காவா ரெடி பண்ணனும்ன்னு ராசு மாமா கண்டிஷன் போட்டுட்டாரு, எவ்வளவோ பண்ணிட்டோம், இதையும்தான் பண்ணிப்பார்போமே...
இனிமே பதிவுக்கு போகலாமா...

பழைய கள்ளு...

அது என்னமோ தெரியலைங்க ஆணி ஜாஸ்த்தியானாலே எதுலயுமே சரியான கான்சென்ற்றேசன் வர மாட்டேங்குது. ஏற்கனவே மெமோவ சரியா படிக்காம ஒரு மீட்டிங்குக்கு போயி பல்பு வாங்கினோம், அதே போலதான் இதுவும். டவர் ஹெயஸ்ட்ன்னு ஒரு படம், ஒரு வழியா படம் பாக்கலாமேன்னு ரெண்டு நண்பர்கள் கூட தேடருக்கு கெளம்பினோம். நமக்கு புது இடம், அதனால எங்க போனாலும் நேவிகேசன் போட்டுட்டுதான் போறது, நாம நேவிகேசன் போடுறது நோக்கியா போன்ல, அந்த நோக்கியா பொண்ணும் எப்பவுமே நமக்கு சரியான வழிதான் காட்டும். அன்னைக்கும் அப்புடியேதான் காட்டிச்சு, (அது டேர்ன் லேப்ட்ன்னு சொன்னதும் நம்ம நண்பர் வலதுபக்கமா கைய காட்டிக்கிட்டே டேர்ன் லேப்ட்ன்னு சொல்லி நாங்க ரோடு மிஸ் பண்ணினதெல்லாம் தனி கதை). இப்போ ஏன் இதப்பத்தி சொல்றேன்னா சம்பவ நாள் தேட்டேருக்கு போய் சேர்ந்ததும் நான் GPS ஆப் பண்ண மறந்துட்டு போன பாக்கேட்ல போட்டுட்டு போய்ட்டேன். நேரா டாய்லெட் போனோம். அங்க ஆசுவாசமா போய்க்கிட்டு இருக்கறப்போ திடீர்ன்னு அந்த நோக்கிய பொண்ணு "டேர்ன் ரைட் அண்ட் என்ட்டர் த ஹை வே" அப்புடின்னு சொல்லிச்சே பார்க்கணும், டாய்லெட்டே சிரிச்சது, நமக்கு ஒரே ஷேமா போச்சி. 


21 ஜம்ப் ஸ்ட்ரீட்

ரொம்ப நாளாவே சிரிச்சபடியே பாக்கக்கூடியதா ஒரு படமும் தேறல, ரொம்பவும் எதிர்பார்த்த தலைவர் படங்கள் ஓகே ஓகே, சகுனி, மசாலா கபே ரிலீசான பாடும் இல்ல, என்னடா பண்றதுன்னு யோசிக்கிட்டு இருந்தப்போதான் 21 Jump Street படத்தோட ஞாபகம் வந்தது, ரொம்பநாளா எதிர்பார்த்திருந்த படம், பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ போய் பார்த்தோம், செம காமெடி மாமா செம காமெடி. படம் ஆரம்பிச்சதுல இருந்து முடியற வரைக்கும் சிரிச்சு சிரிச்சே உசிரு போயிடிச்சு, அதுவும் அந்த ரெண்டு போலீஸ் பசங்களும் போதை மருந்து சாப்பிட்டிட்டு அடிக்கற கூத்து செம சீன். சில காட்சிகள்ல அமெரிக்கன் பை  டீன் மூவீஸ் சாயல் அடிச்சாலும் ஒன்றரை மணி நேரம் கவலய மறந்து வாய் விட்டு சிரிக்கறதுக்கு சொல்லி வச்ச படம். இதே படத்த கொஞ்சம் தமிழ் படுத்தி ஆர்யா சந்தானம் காம்பினேஷன்ல ராஜேஷ் இயக்கினார்ன்னா செமையா இருக்கும். பட் இங்க்லீஸ் படத்த காப்பி அடிக்கறதுக்கு அவரு என்ன AL விஜயா? அதனால சிவா-சந்தானம் காம்பினேஷன்ல வெங்கட் பிரபு இயக்கினார்னா கண்டிப்பா கலெக்சன அள்ளும் படம்.  காமெடி ரசிகர்களுக்கு செம விருந்து.


சதம் அடித்த சச்சின்

நம்ம சச்சின் ஒரு வழியா நூறாவது சதம் அடிச்சுட்டாரு, இன்னும் கொஞ்சநாள் தாமதிச்சிருந்தாரு, பெரிய கலவரமே பண்ணியிருப்பாங்க நம்ம பசங்க. ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் சச்சினின் 99 ஆவது சதத்துக்கு ஆண்டு நிறைவு விழா கொண்டாடினாங்க, நல்ல வேளை மனுஷன் தப்பிச்சிட்டாரு. என்ன ஒரு கொற, நூறாவது சதம் கூட தோல்வியில்தான் முடிஞ்சது, சச்சின் சதம் அடிச்சா இந்தியா தோர்க்கும்கர செண்டிமென்ட என்னைக்குதான் அண்ணன் முறியடிக்கபோராரோ. ஊரே கூடி சச்சினோட நூறாவது சதத்துக்கு வாழ்த்து சொல்லுது, இந்த நேரத்துல நம்ம CS அமுதன் (தமிழ் படம் இயக்குனர்) என்ன சொல்றாருன்னா, சச்சின் மயில் கல்லான நூற்றி ஓராவது சதத்துக்கு ஒருசதம் சமீபத்துல வந்துட்டாராம், ஏன்னா கொழுப்பு இந்தாளுக்கு, அது கெடக்குது கழுத, நாம தனுஷோட சச்சின் சாங் கேட்டு என்ஜாய் பண்ணுவோமா?

சச்சின் சாங் லிங்க் 

சந்தானத்தின் முதல் பாடல் வரிகள்


இப்போதான் முக்கியமான மேட்டரே, தலைவர் ஒரு பாடலுக்கு முதல் முதலா வரிகள் எழுதி கவிஞர் ஆகிட்டாரு, அதுதாங்க லேடஸ்ட் சென்சேசன் வேணாம் மச்சான் பாடலுக்கு கோரஸ் வரிகள் எழுதினது நம்ம தலைவர்தான். கோரஸ் வரிகல்ன்னா ஆ ஆ ..... ஊ ஊ ..... லா லா லா அப்புடின்னு நெனச்சிராதீங்க செம ஹைலயிட்டான தத்துவ வரிகள். "கண்ண கலங்கவைக்கும் பிகரு வேணாம்டா நமக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டும் நண்பன் போதும்டா" செம கிக்கானா பாடல், அதவிட அந்த பாடல் படமாக்கப்பட்ட விதம் பற்றி அண்ணன் விவரிக்கராறு பாருங்க அதோட சுவையோ தனி, ஆடமுடியாதுங்கரதுக்காக த்ரோட் இன்பெக்சன்னு சொன்ன மொத ஆளு நம்ம தலைவர்தான்.


டிஸ்கி: யாராச்சும் இந்த பதிவ கொஞ்சம் இந்த திரட்டிகள்ள இணைச்சு விட்டீங்கன்னா கோடி புண்ணியமா போகும்.