பொலிவிழந்த சூர்யா
சில பல வேலைகளின் காரணமாக ஏழாம் அறிவு படத்தை ரொம்ப லேட்டாக தான் பார்க்க கெடைச்சது. நம்ம டாக்டர் புட்டிபால் அமேரிக்கால இருந்தாலும் மொத வாரமே பார்த்து ரொம்ம்ம்ப நடுநிலையா விமர்சனம் போட்டு இருந்தாரு. ஆனாலும் அவ்வளவு எதிர்பார்ப்பு இல்லாமல் இருக்குற ஆணிய எல்லாம் புடுங்கி முடிச்சிட்டே படம் பார்த்தேன். படத்த பத்தி புட்டிபால் மாதிரி என்கிட்ட சொல்றதுக்கு ஒன்னுமே இல்ல. ஆனா படத்த பார்த்தப்போ நோட் பண்ண ஒரு விஷயம்தான் உறுத்திகிட்டே இருக்கு. சூர்யா மிக சிறந்த நடிகர்தான், ஒவ்வொரு கேரக்டருக்கும் ரொம்பவே மெனக்கெடுறாரு, இவரது சமகால நடிகர்கள் செய்யத்தயங்கும் பல விசயங்களை கடின உழைப்பு மூலமா ரொம்ப அசால்ட்டா செஞ்சிர்றாரு. ஆனா அதுவே இவருக்கு வினையா முடிஞ்சிருமோன்னு தோணுது. ஆமாங்க அந்த போதிதர்மர் கேரக்டருக்கும் சிக்ஸ் பேக்குக்கும் பட்ட கஷ்டங்கள் படம் பூரா அவரு மூஞ்சில அப்புடியே தெரியுது. சாதாரண சர்கஸ் மேனாக வரும் சூர்யாவின் முகத்தில் அந்த பழைய பொலிவு அப்டியே மிஸ்ஸிங். அப்புறம் ஏழாம் அறிவு வெற்றி சரித்திரம், குட்டி சரித்திரம்ன்னு டிவி டிவியா வந்து மூஞ்ச காட்டும்போது இன்னும் பாவமா இருக்கு. நோகாம நொங்கு எடுக்குற இவரு தம்பி கார்த்தி, வேலாயுதம் விஜய் போன்றோரின் முகத்தில் இருக்கும் பிரஷ்னஸ் இவருகிட்ட குறஞ்சிகிட்டே போகுது. கேரக்டரும், அதுக்கு கிடைக்கும் பாராட்டுகளும் முக்கியம்தான் ஆனா அதவிட ஒரு நடிகனுக்கு மூஞ்சி முக்கியமில்லையா? ஒரு மனுஷனுக்கு உடம்பு முக்கியமில்லையா? கொஞ்சம் பார்த்துக்குங்க பாஸ்!!!
இம்மொர்டல்ஸ்ன்னு ஒரு படம். எதோ 300 அப்புடின்னு ஒரு படம் எடுத்தவங்க எடுத்த படமாம், நம்ம புட்டிபால் அமெரிக்கால தியேட்டர்க்கு போயி படத்த பார்த்துருக்காரு. போனா முதலாவது சீன்லயே அவரு பேவரிட் ப்ரீடா பின்டோ, டாக்டர் ரொம்பவே குஷியாகிட்டாராம், கொஞ்ச நேரம் கழிச்சி ஒரு சீன், சீனோட அட்மொஸ்பியர பாத்ததா நிச்சயமா இது அந்த சீன்னு அவரு உள்மனசு சொல்லிருக்கு, பாத்துட்டே இருந்தா சாட்ச்சாத் அதே தான், படம் வேற 3D லையா, அப்படி ஒரு கண்கொள்ளா காட்சி. நல்லா அனுபவிச்சி பார்த்துட்டு அப்புறம் இந்த பொண்ணு இப்படி நடிச்சிடுச்சேன்னு ஒரே பீலிங்கா ஆயிருக்காரு, வீட்டுக்கு வந்ததும் மொத வேலையா அந்த சீன் பத்தி கூகிள்ட விசாரிச்சிருக்காரு, அப்புறம்தான் அது உண்மையிலேயே அந்த பொண்ணு இல்ல, பாடி டபால்ன்னு அவருக்கு தெரிய வந்ததாம். அதுக்கப்புறமாதான் நிம்மதியா தூக்கமே வந்திருக்கு அவருக்கு. இத எதுக்கு சொல்றேன்னா அந்தப்பொண்ணுதான்னு நினைச்சு யாரும் ஏமாந்திட கூடாதில்ல, அதுக்குதான். இன்போர்மேஷன் இஸ் வெல்த்ன்னு நம்ம செந்தில் சொல்லிருக்கார்ல்ல..
இப்ப எல்லா படத்துக்கும் இந்த சிங்கிள் ட்ரக் ரிலீஸ் பண்றது ஒரு ட்ரென்டாவே ஆகி போச்சி. இப்புடி ஒரு கல்ச்சர்(!) எப்படி உருவானதுன்னு பார்த்தீங்கன்னா நமக்கு தெரிஞ்சு உன்னை போல் ஒருவன் படத்துல அந்த ஸ்ருதி பாடுன பாட்டுதான். ஆனாலும் அதுக்கு பிறகு இந்த கல்ச்சர்(!) ஒன்னும் பெருசா ஹிட் ஆகல. அப்புறம் வானம் படத்துல "எவன்டி உன்ன பெத்தான்"ல இருந்துதான் இது சூடு புடிச்சிச்சி. அதுக்கு பின்னாடி உள்ள உண்மை என்னன்னா, வானம் படத்துக்கு யுவன் சோம்பேறித்தனமாய் அதிக நேரம் எடுத்து கொண்டதால தயாரிப்பாளர் கணேஷ் ரொம்ப கஷ்டப்பட்டு கெஞ்சி கூத்தாடி யுவனிடம் இருந்து எப்புடியாவது ஒரு பாடலை புடுங்கி வெளியிட்டாரு. அவரு அப்ப கனவுலையும் நெனச்சிருக்க மாட்டாரு இது இப்புடி ஒரு புது ட்ரென்டா உருவாகும்ன்னு. அதுக்கப்புறமும் அதே யுவனின் சோம்பேறிதனத்தின் காரணமாக வெங்கட் பிரபு புடுங்கி வெளியிட்ட "விளையாடு மங்காத்தா"வும் ஹிட்டாகிருச்சு. இப்போ லேட்டஸ்டா ட்விட்டர்ல, பேஸ்புக்ல, யூட்யூப்ல, கூக்ள்ல, பிளாக்லன்னு எல்லா பக்கமும் "வை திஸ் கொலவெறி டி?". இந்த பாடல் ரிலீஸ் கூட திட்டமிட்ட செயல் கெடையாது, யாரோ ஒரு புண்ணியவான் புது இசையமைப்பாளர் அனிருத் ரெக்கார்டிங் தியேட்டர்ல இருந்து திருட்டுதனமா சுட்டு வெளியிட, ஐஸும் அவுங்க ஹப்பியும் சுதாரிச்சிகிட்டு பாடல் ரெகார்டிங் வீடியோவையும் சேர்த்தே சிங்கிள் ட்ரக்கா வெளியிட, ஒங்க வீட்டு எங்க வீட்டு இல்லாம ங்கொக்காமக்கா ஹிட்டாகி போச்சி பாட்டு. யூட்யூபில் ஒரு மில்லியன் எனும் மைல்கல்லை கடந்து 1.5 மில்லியன் விவ்ஸ் தொட்ட முதல் தமிழ் பாடல் என்னும் பெருமை வேற. போதாகுறைக்கு எவன பாத்தாலும் வை திஸ் கொலவெறின்னு ஸ்டேடஸ் போடுறான், நம்ம காட்டுப்பூச்சி ஒரு படி மேலேயே போயி எதுக்கெடுத்தாலும் சம்பந்தா சம்பந்தம்(சமந்தா இல்ல)இல்லாம இதையே கமெண்டா போட்டுக்கிட்டு திரியறாரு. நம்ம ரசிக பாப்பாக்களுக்கு இது போதாதா? சிம்புவா-தனுஷான்னு மறுபடி ஆரம்பிச்சுட்டாங்க. எதுக்கெடுத்தாலும் மல்லுக்கு நிக்கும் சிம்பு முதல் முறையா ட்விட்டர்ல அவரோட ரசிகர்கள கண்டிச்சிருக்காரு, தனுஷ் என்னோட நண்பர், அப்புடின்னு சொல்லியிருக்காரு, ஆனா கூடவே நான் பாத்துக்கறேன்னு வேற சொல்லி பீதிய கெளப்புராறு, வை திஸ் கொலவெறி மாமா? போதாகுறைக்கு மயக்கம் என்னவும் ஒஸ்தியும் சரியா ஒரு வார இடைவெளில ரிலீஸ். என்னமோ போங்க தனுஷ்-சிம்பு காம்பினேஷன் மறுபடியும் சூடு பிடிக்குதுடோய். பட் அந்த பாட்ட நீங்களும்தான் கேட்டு பாருங்களேன், தனுஷும் நல்லாதம்லே பாடுறாரு!!
ரெண்டாவது படம்:
அகில உலக சூப்பர் ஸ்டார், விடிவெள்ளி, புரட்சி
புயல், பெரிய தளபதி, 2016 சீப்
மினிஸ்டர் மிர்ச்சி சிவா நடிச்ச தமிழ்படத்த யாரும் மறந்துருக்க மாட்டீங்க. ஒட்டு
மொத்த தமிழ் சினிமா கிளிஷேக்களையும் வாரு வாருன்னு வாருன படம். அந்த படத்தின்
டைரக்டர் சி.எஸ். அமுதனின் ரெண்டாவது படம் ரெண்டாவது படம். டபுள் டைபிங் எரர்
இல்லேங்க, அதுதான் படத்தோட டைட்டிலே. இந்த வாட்டி களவானி
விமல், அஜித் மச்சான் ரிச்சர்ட், அரவிந்த் ஆகாஷ்ன்னு புது டீமோட களமிரங்குராறு. படத்தோட டைட்டில் ஒரு
பக்கம் கவருதுன்னா கேப்ஷன்ங்கள் இன்னும் எதிர்பார்ப்ப எகிற வைக்குது.
உதாரணத்துக்கு "காதலுடன் கூடிய ஆன்மீக ஆக்ஷன் நிறைந்த கிராமிய அனிமேஷன்
காவியம்", "A period, sci-fi action thriller with animation,
romance and NO SPOOFS", "An erotic family drama with romance, horror
and NO SPOOFS" ன்னு கலக்கலா இருக்குது. சம்மர் 2012
ரிலீஸ்ன்னு அறிவிச்சிருக்காங்க. ஏற்கனவே சுந்தர்.C யின் மசாலா கபேயும் சம்மர் 2012 ரிலீஸ். ஆகா
மொத்ததுல காமெடி பிரியர்களுக்கு கொண்டாட்டமான சம்மர்தான். ஆமா இந்த டைரக்டர்
தன்னோட அடுத்த படத்துக்கு சி.எஸ். அமுதனின் மூணாவது படம், அப்புறம் சி.எஸ். அமுதனின் நாலாவது படம்ன்னு இதையே பொழப்பா வச்சுப்பாரோ?
#டவுட்டு
டிஸ்கி: இதுவரைக்கும் யாரவது டிஸ்கில படம் போட்டு இருக்காங்களா? தமிழ் பதிவுலக வரலாற்றுலயே ரெண்டாவதுcorrected முறையா நாங்க போடுறோம்,, ஹீ ஹீ..
![]() |
| ரஜினி-கமல், அஜித்-விஜய், விக்ரம்-சூர்யா, சிம்பு-தனுஷ் ஹெவி காம்படிஷன் மச்சி.... அவுங்களுக்குள்ளதானே காம்படிஷன் இவனுக்கு என்ன பிரச்சின? |
பிற்சேர்க்கை: செங்கோவி அண்ணனும் தனது பிளாகில் டிஸ்கியில் போட்டோ போட்டு உள்ளார் என கமெண்ட்ஸ் மூலம் தெரிய படுத்திய செங்கோவி அண்ணனுக்கும், யோகா ஐயாவிற்கும் நன்றிகள்.




Best Blogger Tips
21 comments:
ஒருவேளை சூர்யாவுக்கு வயசாயிடுச்சோ?
அப்புறம் எனக்கு தெரிஞ்சு சிங்கிள் டிராக் முதலில் வெளிவந்தது லேசாலேசா படத்துக்குத்தான். லேசா லேசா பாடல் மட்டும் முதலில் வந்தது. அதுக்கு முன்னால எதுவும் வந்திருக்கான்னு தெரியல.
enada konjam nala ala kanamnu parthen vanga supr pathivu aduthu konjam namam osthe ya promote pannunga bossu
ரஜினி-கமல், அஜித்-விஜய், விக்ரம்-சூர்யா, சிம்பு-தனுஷ் ஹெவி காம்படிஷன் மச்சி.... அவுங்களுக்குள்ளதானே காம்படிஷன் இவனுக்கு என்ன பிரச்சின?//
ஆஹா இந்த ஆளும் கொலைவெறில இறங்கிட்டதா தகவல் வந்துட்டு இருக்குதே அவ்வ்வ்வ்வ்வ்....!!!
ஒய் திஸ் கொலவெறி
//ரெண்டாவது படம் ரெண்டாவது படம். டபுள் டைபிங் எரர் இல்லேங்க, அதுதான் படத்தோட டைட்டிலே. //
ஹா..ஹா..எப்படில்லாம் விளக்கவேண்டியிருக்கு..
தனுஷ் மயக்கம் என்ன-லயும் நல்லா பாடியிருந்தார்..ஆள் ஒல்லியா இருந்தாலும், குரல் கில்லியா இருக்கே..
டிஸ்கில நான் படம் போட்ட மாதிரி ஞாபகம்....
சூர்யாவுக்கு வயசாவாம மார்க்கண்டேயர் ரேஞ்சுக்கா இருக்க முடியும்?என்ன இருந்தாலும் அவங்க அப்பா தான் "மார்க்கண்டேயர்"!அப்புறம் செங்கோவி சொன்னாப்புல அவரும் "டிஸ்கி"யில ஸ்டில்லு போட்டிருக்காரு தான்!
ரஜினி-கமல், அஜித்-விஜய், விக்ரம்-சூர்யா, சிம்பு-தனுஷ் ஹெவி காம்படிஷன் மச்சி.... அவுங்களுக்குள்ளதானே காம்படிஷன் இவனுக்கு என்ன பிரச்சின?//
>>>>>>>>>>
அதானே
இந்த சிங்கிள் ட்ராக் ட்ரெண்ட் இதுக்கு முன்னாடி சுப்ரமணியபுரம் படத்துக்கு வந்திருக்கு... பாலா சொன்ன மாதிரி லேசா ;எசாவுக்கு வந்திருக்கலாம்... அப்ப நான் ரொம்ப சின்ன பையன்னுறதால எனக்கு தெரியாது...
ரெண்டாவது படம் பற்றிய தகவலுக்கு நன்றி!
தனுஷ் பாட்டு கலக்கல்தான்!
நம்ம தலைவரோட 'ஒரு கல் ஒரு கண்ணாடி' அதுக்குத்தான் பாஸ் வெய்ட்டிங்! :-)
ஒய் திஸ் கொலைவெரி பட்டய கிளப்புது போல.
//
ரெண்டாவது படம்,மூணாவது படம்-டைட்டில் வைக்கவே ரூம் போட்டு யோசிக்க தேவை இல்ல பாருங்க
////அந்த சீன் பத்தி கூகிள்ட விசாரிச்சிருக்காரு, அப்புறம்தான் அது உண்மையிலேயே அந்த பொண்ணு இல்ல, பாடி டபால்ன்னு அவருக்கு தெரிய வந்ததாம். அதுக்கப்புறமாதான் நிம்மதியா தூக்கமே வந்திருக்கு அவருக்கு. இத எதுக்கு சொல்றேன்னா அந்தப்பொண்ணுதான்னு நினைச்சு யாரும் ஏமாந்திட கூடாதில்ல, அதுக்குதான். இன்போர்மேஷன் இஸ் வெல்த்ன்னு நம்ம செந்தில் சொல்லிருக்கார்ல்ல..
///// என்ன ஒரு பெருந்தன்மை உங்களுக்கும் டாக்டருக்கும்
////அஜித் மச்சான் ரிச்சர்ட், ////
காதல் வைரஸ் என்று சில பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த இவர் படம் கதை வைரஸ் ஆகிவிட்டது இனியாவது சிறந்த படங்களில் நடிச்சி வெற்றி பெறவேண்டும்..........
dhanush song superbbbbbbbb
பொலிவிழந்த என்பதுதான் சரி!
ஆமா சரியா சொன்னிங்க சூரியா முகத்தில அந்தப் பழைய பொலிவு missing
ஓகோ இதெல்லாம் யுவனின் சோம்பேறித்தனத்திற்கு சும்மா கிடைச்ச பரிசா?
கொலைவெறி பத்துன விளக்கம் அருமை...
அடப்பாவி மாமா, என்ன மான பங்கப்படுத்தாம விடமாட்டீறு போலிருக்கு, (சாரி மாம்ஸ் இன்னிக்குதான் உங்க பதிவ படிக்க முடிஞ்சுது)
நல்லபதிவு தோழரே! உங்கள பணிசிறக்க வாழ்த்துக்கள்!
இது ஒரு அழகிய நிலா காலம்! ( பாகம் 1 ) இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்.இதை கதையாக எண்ணி எழுதவும் இல்லை! இது ஒரு வரலாறாக மாறவேண்டும் என்பதே எனது நோக்கம். உங்கள் சிந்தனைகள் தொகுக்கப்படுகின்றன. தமிழர் சிந்தனை களத்தை உருவாக்குவதே இந்த ஆவணத்தின் நோக்கம் நம்பிக்கையோடு தொடர்வோம் please go to visit this link. thank you.
தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.
தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.
இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
please go to visit this link. thank you.
ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you
கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.
போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.
Post a Comment