எந்த வருடம் போலுமில்லாமல், இந்த வருடம் தமிழ் சினிமாவின் ரெண்டு பெரிய நடிகர்களின் நேரடி மோதல் சினிமா வட்டாரத்தை பரபரப்பாக்கியிருக்கிறது. மங்காத்தா, ஏழாம் அறிவு, வேலாயுதம் மூணும் ஒரே நேரத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டதால் ஆட்டம் ஆகஸ்ட்லையே கள கட்டிருச்சி. பிரபல நடிகர்களின் ரசிகர்களும் ட்விட்டர், முகப்புத்தகம், ப்ளாக் என ஆன்லைனிலும், டீ கடை, சலூன், கல்லூரி, டாஸ்மார்க் என ஆப் லைனிலும் அடிக்கும் கொட்டத்துக்கு அளவே இல்லை. அதிலும் குறிப்பா ஏழாம் அறிவு பீவர் ரொம்ப நாளாவே இருந்ததாலும், சூர்யா தொடர் வெற்றிகளை குவிச்சிட்டு வந்ததாலும், அதே நேரம் தல-தளபதி தொடர் தோல்விகள்ள துவண்டு போயிருந்ததாலும் வழக்கமாக அஜித்-விஜய் என நடக்கும் சண்டை இந்த வருடம் சூர்யா ஆதரவு-சூர்யா எதிர்ப்பு என மாறியிருந்தது அனைவருக்கும் தெரியும். சூர்யா அவரு பாட்டுக்கு படங்கள நடிச்சிட்டு போய்க்கிட்டு இருந்திருப்பாரு, நம்ம தளபதி ரசிகர்கள் சும்மாயிருந்தவர சீண்டி பெரியாளாக்கி விட்டது கொஞ்சம் துரதிஷ்டம்தான் (ஆக்சுவலி அந்த வசனம் "சும்மாயிருந்தவர சீண்டி சூப்பர் ஸ்டார் ஆக்கி" ன்னுதான் சிவாஜில வரும், ஆனா சூர்யாவுக்கு அத அப்புடியே சொன்னா அது முறையாக இருக்காதுங்கரதால திரிச்சிட்டோம்). இந்த ஹை வோல்டேஜ் மோதல்ல நாங்களும் எங்க பங்குக்கு 997 பதிவு போட்டிருக்கோம், இது 998 ஆவது, ரெண்டு படத்துக்கும் விமர்சனம் எழுதியாச்சின்னா ஆயிரத்த தொட்டுடலாம்னு மனசுக்குள்ளயே ஒரு கணக்கு வச்சிருக்கோம்.
மங்காத்தா படம் ஏற்கனவே வெளி வந்து பெரிய வெற்றி பெற்றாச்சி. ஏழாம் அறிவு முதல் அஞ்சு நாளும் டிக்கெட் வித்து தீர்ந்தாச்சி, ஸ்பெசல் ஷோ போட்டு அதுக்கும் டிக்கெட் வித்து தீர்ந்தாச்சி, வேலாயுதம் அந்த அளவு இல்லன்னாலும் அதுக்கும் செம வரவேற்ப்பு இருக்கு. எல்லாத்தையும் வச்சு பார்க்கிறப்போ, இந்த ரெண்டு படமும் ஜெயிக்கும்ன்னு உள்மனசு சொல்லுது, ஆனாலும் இந்த ரெண்டு பாடங்களினதும் பலங்கள் நம்ம முன்பே ஒரு பதிவுல அலசிட்டதால இந்த பதிவுல பலவீனகள் பத்தி பார்க்கலாம்.
முதல்ல ஏழாம் அறிவு: நாம ஏற்கனவே சொன்னமாதிரி இதுல நெறைய பலங்கள் இருக்கு. ஆனா பலவீனம்னு பார்க்கும் போது, முதலாவதே திகட்டும் படியான விளம்பரம். உசுர எடுக்கறாங்க மை லார்ட். இந்த விளம்பர உத்தி படத்துக்கு ஒரு பெரிய ஒபெனிங்க ஏற்படுத்தும்ங்கறதுல துளியும் சந்தேகம் இல்ல, ஆனா ரெண்டாம் மூணாம் வாரங்களுக்கு பிறகு படத்தோட பிக்கப் எப்பிடி இருக்கும்ன்னு தெரியல. இந்த படத்துல இருக்கக்கூடிய பெரும்பாலான ரிபீட் வலியு உள்ள விடயங்கள் ஏற்கனவே அம்பலம் ஆகிட்டதால ரிபீட்டட் ஆடியன்ஸ் கொஞ்சம் குறையலாம். படத்துமேல நிறைய எதிர்பார்ப்பு வச்சிருந்த என் போன்றவர்களுக்கே ஒரு சின்ன சலிப்பு தட்டக்கூடியதாதான் இந்த அதிகப்படியான விளம்பரங்கள் இருக்கு. ரெண்டாவது பாடல்கள். பாடல்கள் ஹிட், ஆடியோ சாதனை எல்லாம் இருக்கட்டும், ஆனா படத்துமேல ஒரு நெகடிவ் இம்ப்ரஷன பாடல்கள் ஏற்படுத்திச்சின்னா அது பிழையாகாது, அது என்னன்னா, பல இடங்கள்ள சுட்டு ஒரு நல்ல ஆல்பம் கொடுத்த தோரணை, படமும் அதே போல இருக்கலாமோன்னு ஒரு சந்தேகம் வந்திருக்கு. ஏற்கனவே ட்ரைலர்ல இருக்கற DNA மேட்டர் ஆசாசின் க்ரீட்ல வந்ததுன்னு நெறைய பண்டிதர்கள் சொல்றாங்க, ஒரு கான்செப்ட் அல்லது ஐடியாவ உருவி ஒரு படம் பண்ணினா அத காப்பின்னு சொல்லமுடியாது, ஏன்னா ஒரு அசாத்திய சக்தி படைத்த மனிதன் மக்களை காப்பதுங்கரதுதான் எல்லா சுப்பர் ஹீரோ படங்களோட கான்செப்ட், அதுக்காக ஸ்பைடர்மேன் சுப்பர்மேனோட காப்பின்னு சொன்னா அது செம காமெடி. ஆனாலும் இந்த நாட்டாமைகள் தொல்ல இந்த படம் வந்ததும் கொஞ்சம் ஓவராவே இருக்கலாம், அது அடுத்த பலவீனம்ன்னு தோணுது.
வேலாயுதம்: விஜயோட சுறா வரிசையில உள்ள படங்கள் இந்த படத்துக்கு பெரிய பலவீனம், ட்ரைலர் பார்க்கும்போது காமெடிக்கு முக்கியத்துவம் உள்ளதா தோணுது, அதே நேரம் அசாசின் க்ரீட் உடையில தளபதி பண்ணுற அட்டகாசங்கள் பீதிய கெளப்புது(!!), குறிப்பா ஏழாம் அறிவு ட்ரைலரோட ஒப்பிட்டு பார்க்கும்போது கொஞ்சம் ஓவராவே பயம் வருது. அதாவது, ஏழாம் அறிவு ட்ரைலர்ல சூரியாவவிட வில்லனுக்கு ரொம்ப முக்கியத்துவம் குடுத்திருக்கறதா தெரியுது, ட்ரைலர் பார்க்கறப்போ, அது சுப்பர்மேன் ஹீரோவின் அட்டகாசங்கள் வரிசையில உள்ள படமா தெரியல, ஆனா இது அதேதான்னு தோணுது. ஆசாத் படத்தோட ரிமேக்குன்னு சொல்லிட்டு, அப்புறம் அப்புடியே அந்தர் பல்டி அடிச்சு அதோட நாட்ட எடுத்து புதுப் படம் பண்ணியிருக்கோம்னு ராஜா சொல்றாரு, ஆனா ட்ரைலர் பாக்குறப்போ அப்படி தெரியல, ஆசாத் படம்தான் கண்ணுக்கு முன்னே விரியுது. கூடவே ரிலீசாகுற அடுத்த ரெண்டு படங்களும், ரொம்பவே மாறுபட்ட படங்கள், கோடி கோடியா கொட்டி விசுவல் எபெக்ட் பண்ணப்பட்ட படங்கள், அதுனால இந்த படத்துலயும் கில்லில/குருவில பறக்குற மாதிரி கிராபிக்ஸ் பண்ணியிருந்தா ரசிகனுக்கு நிச்சயம் சலிப்பு தட்டும், எந்திரன் படத்தோட டெக்னிகல் ப்ரில்லியன்ஸ்ல பாதி கெணறாவது தாண்டியிருக்கணும், இல்லனா ட்ரைன் சண்ட புஸ்வானம்தான்.
இந்த ரெண்டு படமுமே எதிர்பாக்காத வகையில பெரிய தலைவலியா ரா.1 இருக்கும்ன்னு தோணுது. வேலாயுதத்துக்கும் ஏழாம் அறிவுக்கும் ஒபெனிங்க்ல பெரிசா சவால் விடாட்டியும் பிக்கப்ல இந்த படம் பெரிய சவால் விடும்ன்னு தோணுது. நிஜமான சுப்பெர்ஹீரோ படம், ஷாரூக் கான், அதிக பட்ஜெட்ல தயாரான இந்தியப்படம், ரஜனி காந்த், அகான் பாடல் என ஏகப்பட்ட பிளஸ் இந்த படத்துக்கும் இருக்கு, சாதாரண ஒரு மனிதன் பறக்கரதவிட, ஒரு சுப்பர் பவர் கொண்ட (ஜட்டிய வெளில போடும்) ஹீரோ பறக்குறத குழந்தைகள் அதிகம் விரும்ப வாய்ப்பு இருக்கு. பெரிய எதிர்பார்ப்பு உள்ள மூணு படங்கள், ஒரே நேரத்துல வெளியாகுது, ரசிகர்களோட எதிர்பார்ப்ப எது பூர்த்தி செய்யுதோ அதுதான் வின்னரா வரும்,பூர்த்தி செய்யாதது பென்சில் மீச வரைஞ்ச கைப்புள்ள மாதிரி ஆகிரும்), இதுல யாரு மாஸு யாரு தூசுன்னு அலசுரதுல அர்த்தம் இல்ல, ஃபேன் போல்லோவிங்க வச்சு எந்த படத்தையும் ஓட்ட முடியாதுங்கரதுதான் நிஜம்.
அனைவருக்கும் நமது இனிய தீபாவளி வாழ்த்துக்கள். எல்லா நடிகரோட ரசிகர்களும் சண்ட போட்டு மண்டைய ஒடச்சிக்கிட்டு ஹாஸ்பிட்டல்ல போய் படுக்காம, சமாதானமா உங்களுக்கு பிடிச்ச படத்த பார்த்திட்டு குடும்பத்தோட சேர்ந்து நிம்மதியா தீபாவளி கொண்டாடுமாறு அன்புடனும் தாழ்மையுடனும் கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புடைய பதிவுகள்
வேலாயுதம் படத்தை முடக்குகிறாரா உதயநிதி ஸ்டாலின்?
எதிர்பார்புள்ள தமிழ் படங்களும் சில கமெண்ட்களும்.
ஏழாம் அறிவு - பாடல்கள் ஒரு பார்வை




எது ஜெய்க்கும்? நாளை பார்ப்போம்
ReplyDeleteஇன்றுஎன் வலையில்
ReplyDeleteஇந்த திபாவளிக்கு இலவசமாக வெடி வேண்டுமா?.
1000வது பதிவா? என்னய்யா குழப்புறீங்க?
ReplyDeleteஇனிய தீபாவளி வாழ்த்துகள்.
ReplyDeleteஎன் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் .மிக்க நன்றி தங்கள் பகிர்வுக்கு .......
ReplyDelete"என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDelete//எது ஜெய்க்கும்? நாளை பார்ப்போம்//
கண்டிப்பா, ஆனா ரெண்டுமே ஜெயிச்சா நல்லாயிருக்கும்.
செங்கோவி said...
ReplyDelete//1000வது பதிவா? என்னய்யா குழப்புறீங்க?//
சாரிண்ணே, இப்போ நம்ம தொடர்புடைய பதிவுகள் லிஸ்ட பாருங்க, இதுல கூட மங்காத்தா பதிவுகள விட்டுட்டோம், இப்போ சொல்லுங்க ஆயிரம் பதிவு தேறுமா?
செங்கோவி said...
ReplyDelete//இனிய தீபாவளி வாழ்த்துகள்.//
கோடி நன்றிகள்னே, உங்களுக்கும் இனிய தீபாவெளி வாழ்த்துக்கள்.
அம்பாளடியாள் said...
ReplyDelete//என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் .மிக்க நன்றி தங்கள் பகிர்வுக்கு .......//
உங்களுக்கும் இனிய தீபாவெளி வாழ்த்துக்கள், வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ..
ஹா ஹா ஹா ஹா....
ReplyDeleteஇனிய தீபாவளி வாழ்த்துக்கள்....
சூர்யா யாருக்கும் போட்டியில்லை..
ReplyDeleteவிஜய் படம் வரும்போது அவருக்கு இணையாக இப்படிப்பட்ட பில்டப்புகளை அவரது ரசிகர்கள் கிளப்பிவிடுகிறார்கள்...
AR முருகதாஸ் சூர்யா கூட்டணி....
ReplyDeleteராஜா-விஜய் கூட்டணி...
இவர்களில் யார் வெற்றிபெருவது யார் என்று நாளை தெரிந்துவிடும்...
அசத்தலான ஒப்புநோக்கல்...
தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
ReplyDelete//////இந்த ஹை வோல்டேஜ் மோதல்ல நாங்களும் எங்க பங்குக்கு 997 பதிவு போட்டிருக்கோம், இது 998 ஆவது, ரெண்டு படத்துக்கும் விமர்சனம் எழுதியாச்சின்னா ஆயிரத்த தொட்டுடலாம்னு மனசுக்குள்ளயே ஒரு கணக்கு வச்சிருக்கோம்.////
ReplyDeleteஓ எல்லாம் மனசுக்குள்ளேயே எழுதுனதா?
அப்போ வேலாயுதத்துலேயும் அந்த ஜம்பிங் சீன் இருக்கும்னு சொல்லுங்க.....
ReplyDeleteஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteநல்ல அலசல் தான்
ReplyDeleteஎன் கணிப்பின் படி
1. 7ஆம் அறிவு ஹிட்
2. வேலாயுதம் அவுட்
3. ரா ஒன் தமிழ் நாட்டுக்கு டப்பா (எந்திரன் கதை என்பதால்)
அப்போவே சொல்லல
ReplyDeleteநம்ம அண்ணனுக்கு அறிவு ஜாஸ்தின்னு
என் இதயம் கலந்த
தீபா வளி வாழ்த்துக்கள்
ஓடறது மூணு பேரு எப்படி இருந்தாலும்
ReplyDelete1,2,3...evangamatuthaan varuvaanga..
ethila yaaru vantha enna???
Ra one story and enthiran story are not same. Arjun rampaul the ra one and shahrukh the G one. Hit list
ReplyDelete1. Velaayutham
2. Ra one
3.ezhaam arivu
but REMEMBER in 2011 still we are unstoppable MANGAATHAADAA..
உங்க மனசு சொன்ன மாதிரி நடந்தா நல்லது..
ReplyDeleteMoonu padamum senthu mukkunaa kooda mangaatha aaga mudiyaathu....
ReplyDeleteவேலாயுதம், ஏழாம் அறிவு ரெண்டுமே கண்டிப்பா ஜெயிக்கும்.
ReplyDeleteஇனிய தீபாவளி வாழ்த்துகள்!!!1௦௦௦ பதிவு காணும் அப்பா டக்கர்ஸ் க்கு வாழ்த்துக்கள்!(SPECIAL)
ReplyDeleteதீபாவளி வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே...
ReplyDeleteஇனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteதீபாவளி அன்று நான் மிகவும் துணிச்சலாண காரியம் செய்யப்போகின்றேன்...அதாவது மிக மிக துணிச்சலான காரியம் அட நான் வேலாயுதம் பாக்கப்போறேன் அதைத்தான் சொல்கின்றேன்..வேலாயுதம் பார்த்துவிட்டு ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆகாமல் இருந்தா..வந்து விமர்சணம் எழுதுறன் என் தளத்தில்(யாருப்பா கோபமா கொடுறமா முறைக்கிறது விசய் ரசிகரா இந்தாங்க கூலா கொக்கோ கோலா குடிங்க....ஹி.ஹி.ஹி.ஹி)
ReplyDeleteதீபாவளி வாழ்த்துக்கள் பாஸ்
ReplyDeleteதீபாவளி அன்று நான் மிகவும் துணிச்சலாண காரியம் செய்யப்போகின்றேன்...அதாவது மிக மிக துணிச்சலான காரியம் அட நான் வேலாயுதம் பாக்கப்போறேன் அதைத்தான் சொல்கின்றேன்..வேலாயுதம் பார்த்துவிட்டு ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆகாமல் இருந்தா..வந்து விமர்சணம் எழுதுறன் என் தளத்தில்(யாருப்பா கோபமா கொடுறமா முறைக்கிறது விசய் ரசிகரா இந்தாங்க கூலா கொக்கோ கோலா குடிங்க....ஹி.ஹி.ஹி.ஹி)
ReplyDeleteஇனிய இரவு வணக்கம் பாஸ்,
ReplyDeleteஅண்ணன்கள் இருவருக்கும் என் உளமார்ந்த இனிய இன்பத் தீபத் திருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
K.s.s.Rajh said...நான் வேலாயுதம் பாக்கப்போறேன் அதைத்தான் சொல்கின்றேன்..வேலாயுதம் பார்த்துவிட்டு ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆகாமல் இருந்தா////தீபாவளி நல வாழ்த்துக்கள்!!!!!!எதற்கும் எனது உறவினர் வவுனியாவில் இருக்கிறார்கள்,சொல்லி வைக்கிறேன்!ஹி!ஹி!ஹி!!!
ReplyDelete"என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDeleteஎது ஜெய்க்கும்? நாளை பார்ப்போம்.///ஏதோ அ.அ.தி.மு.க.....தி.மு.க தேர்தல் போட்டியா, என்ன?ஒண்ணு மொக்கை,இல்லை சக்கைதானே?ஹி!ஹி!ஹி!!!
செங்கோவி said...
ReplyDelete1000வது பதிவா? என்னய்யா குழப்புறீங்க?///சும்மா தீவாளி வெடி போட்டுப் பாத்திருக்காய்ங்க,விடுங்க!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஅப்போ வேலாயுதத்துலேயும் அந்த ஜம்பிங் சீன் இருக்கும்னு சொல்லுங்க.....////வேல் ஆயுத உதவியோட ஜம்ப் பண்ணிப் பாப்பாரோ?கயிறு இருக்கப் பயமேன்?ஹி!ஹி!ஹி!!!
siva said...
ReplyDeleteஅப்போவே சொல்லல
நம்ம அண்ணனுக்கு "அறிவு" ஜாஸ்தின்னு
என் இதயம் கலந்த
தீபாவளி வாழ்த்துக்கள்!///"ஏழாம் அறிவு"ன்னு சொல்லுறீங்க?????
வணக்கம் டாக்டர்!பாராட்டுக்கு,ச்சி....வாழ்த்துக்கு நன்றி!இதே போல் உங்களுக்கும் தீபாவளி(தல இல்லையே?)வாழ்த்துக்கள்!சிரித்து,மகிழ்ந்து கொண்டாட வேண்டுகிறேன்! நன்றி!!!(செங்கோவி பதிவில் போட்ட கமென்ட்.)
ReplyDeleteஅண்ணே, நேத்து நைட் பதிவு படிக்க டைம் கிடைக்கலை..
ReplyDeleteஇதோ வந்திட்டேன்.
ஏழாம் அறிவு தான் என்னகென்னவோ எதிர்பார்பைக் கூட்டும் என நினைக்கிறேன்.
ReplyDeleteஅலசல் அசத்தல் பாஸ்.
போதிதர்மனாக நடித்தது சூர்யாவிற்கு ஒரு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தக்கூடும். சூர்யாவின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கவும் கூடும். ஆனால் போதிதர்மனின் உருவத் தோற்ற அமைப்புடன் சூர்யா ஒத்துப்போகவில்லை. அந்தப் பாத்திரத்திற்கு சரத்குமார் நடித்திருப்பாரானால் மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும். போதிதர்மனை கண்முன்னே நிறுத்தியிருக்கும்.
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
ReplyDeleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துகள்