Saturday, September 3, 2011

தமிழ் சினிமா திருட்டு கலாசாரம் - புரிதலுடனான எதிர்ப்பு போராட்டம்

பதிவு எண்: ஒன்று
  








அண்மைக் காலமாக டாக் ஆப் த டவுன் ஆகியிருப்பது இந்த திருட்டு கலாசாரம்தான். பல வலைப்பூக்களிலும் இதற்கு எதிர்ப்பாகவும், ஆதரவாகவும் பல பதிவுகள் காணக்கிடைத்தது. நம்மளும் நம்ம பங்குக்கு எதாச்சி எழுதித் தொலைச்சோம் என்றில்லாமல் இந்த விடயத்தை சற்று நடுநிலை பார்வையோடு நோக்குவோம் என்ற எண்ணமே இந்த தொடர் பதிவுக்கு காரணம்.

எத்தன தமிழ் சினிமா ரசிகனுக்கு உலக படங்களை கண்டு கழிக்கும் வாய்ப்பு இருக்கிறது, ஆகவே ஒரு தரமான படைப்பை நமது ரசிகனுக்கு புரியக்கூடிய வகையில் (?) அறிமுகப்படுத்துவதில் என்ன தப்பு என்பது இதை ஆதரிப்பவர்கள் வாதம். எந்த ஒரு படைப்புக்கும் அதற்குரிய மரியாதை கொடுக்கவேண்டும், உங்க பதிவ யாராச்சும் திருடி அவங்க தளத்துல போட்டா அப்பாவும் நீங்க இப்படியே திருட்ட ஆதரிப்பீங்களா என்பது திருட்டை எதிர்பவர்கள் முன்வைக்கும் வாதம். நமக்கு என்னனா நியாயமாய் இருந்தாலும் இந்த ரெண்டுமே ஒற்றைப்படையான வாதமாகவே படுகிறது. இருசாராரும் கவனிக்க தவறிய பல விடயங்கள் இருக்கு. அவற்றை ஒவ்வொன்றாக நமது இந்த தொடர் பதிவில் பாப்போம்.

இந்த தொடர் பதிவு முடிவடையும் போது இது தொடர்பானா ஒரு முழு புரிந்துகொள்ளலை நாம உங்களுக்கு வளங்கியிருப்போம் எனினும் இந்த பதிவினை தொடங்க முன்பாக ஒரு தயார் படுத்தல்தான் இன்றைய பதிவு.
  

முதலாவதாக இந்த விடயம் தொடர்பாக எமது நிலை என்னவென்பதை விளக்க கடமைப்பட்டுள்ளோம். Copyright infrigment (intelectual property rights) என்பது ஒரு சென்சிடிவ் மேட்டர். இதனை தொடும்போது நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. தாக்கம், தழுவல், கருத்தொற்றுமை, காப்பி, அட்ட காப்பி, திரித்தல் (திருத்தல் அல்ல), உரிமை பெறப்பட்ட ரீமேக், உரிமை பெறப்படாத ரீமேக், creditet reference, uncredited reference,  idea theft என சினிமா படைப்புடன் தொடர்புடைய பல விடயங்களையும் திருட்டு VCD, உரிமை பெறப்படாத கண்காட்சி அல்லது ஓளிபரப்பு போன்ற வர்த்தகம் தொடர்புடைய விடயங்களையும் உள்ளடக்கியது அது. இந்த விடயத்தில் கண்டிப்பாக ஒற்றைப்படை விமர்சனங்கள் இருக்க கூடாது, தனி மனித தாக்குதல்களும் இருக்கக்கூடாது. இந்த விடயத்தை கையாள்வதற்கு முன்னர் மேற்கூறப்பட்ட விடயங்களில் ஒரு ஆழமான புரிதலை ஏற்படுத்திக்கொள்வது நல்லது, delibarate violation கண்டிப்பாக காரசாரமாக எதிர்கப்பாடல் வேண்டும், careless violation கண்ணியமாக சுட்டிக்காட்டப்படல் வேண்டும். non violations பாராட்டப்பாடல் அல்லது ஏற்றுக்கொள்ளப்படல் அல்லது மன்னிக்கபாடல் வேண்டும். (இது original work இன் அளவையும் படைப்பின் தரத்தையும் பொறுத்து). இதுதான் நம்ம கொள்கை விளக்கம். 


இது ஒரு தேவையே இல்லாத மேட்டர் எதுக்கு நாம இதுல தலயடிக்கறோம்னு வருத்தபட்டால் அதற்கு காரணம் இதுதான். தமிழ் சினிமா பொழுதுபோக்கு வட்டத்தை தாண்டி போகவேண்டும் என்பதும், ஆரோக்கியமான சினிமா கலாசாரம் உருவாகவேண்டும் என்பதும் நம்மில் பலபேரின் அவா. திருட்டை எதிர்பவர்களும், ஆதரிப்பவர்களும் இந்த ஒரு காரணத்துக்காகவே இதை செய்கிறார்களே அல்லாமல், தமது மேதாவித்தனத்தை பறை சாற்றவோ அல்லது தாம் ஒரு படைப்பாளி மேல் கொண்ட விருப்பு வெறுப்பை முன்னிலைப்படுத்தவோ அல்ல, ஆயினும் எதிர்வினைகள் சரியான வகையில் முன்வைக்கபடாதவிடத்து அவை பயனற்றதாகவே முடிந்துவிடும் என்பதைவிட அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் ஆபத்தை கொண்டிருக்கிறது என்கிற அச்சமே இதற்கு காரணம். நல்ல முயற்சிகளை நோக்கி அடிவைத்த இந்தி சினிமா இதே போன்ற ஒரு பிரச்சினை சரியாக கையாளப்படாததால் இன்று மீண்டும் பழைய மசாலாவை நோக்கி அதி தீவிரமாக சென்று கொண்டிருக்கிறது என்பதனை புரிந்து கொண்டவர்களுக்கு எமது அச்சம் நியாயம் என்பது தெரியும். 
இதுபற்றிய விளக்கங்களை நமது அடுத்த பதிவில் விரைவில் எதிர்பாருங்கள்.

குறிப்பு : Plagiarism  என்பது எழுத்து ஊடகங்களிற்கு கொடுக்கப்படும் ஒரு சொல். இதே விடயம் சினிமா தொடர்பாக வரும்போது Copyright infrigment என்கிற சொல்லிற்குள்ளேயே அடைக்கப்படுவதாக இந்த பதிவு கூறுகிறது. இவற்றை படித்துப்பார்த்தால் நமக்கு இன்னும் கொஞ்சம் தெளிவு கிடைக்கும் என நம்புகிறோம்.  

டிஸ்கி: அண்மைக்காலமாக நமது பதிவுகள் ரொம்ப நீண்டதாக இருப்பதாக ஒரு கொற நம்ம கண்ணுக்கு பட்டிச்சி, அதனால இந்த தொடர் பதிவு மூலம் நீளத்தையும் கொஞ்சம் குறைக்கலாம்னு ஒரு திட்டம். இது பற்றிய உங்கள் கருத்துக்கள எதிர்பார்க்கிறோம். 


12 comments:

  1. இரண்டு தடவைகள் படித்தால்தான் எனக்கு புரியுமென்று நினைக்கிறேன். அப்புறமா திரும்ப ஒரு தடவை படித்து புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். உங்கள் அலசலுக்கு வாழ்ததுக்கள்.

    ReplyDelete
  2. antony boss vikram sir vida ve matinga pola enna vazhka da ithu

    ReplyDelete
  3. தொடர்பதிவுத்திட்டம் நல்லாருக்கு தொடரவும்

    ReplyDelete
  4. பொந்துல கை வச்சிட்டீங்க,இல்ல இல்ல தேன் கூட்டில கல்லெறிஞ்சுட்டீங்க,எங்க போயி முடியப் போகுதோ?

    ReplyDelete
  5. @மதுரை சரவணன்
    நன்றி பாஸ், உண்மைகள் தொடரும்.

    ReplyDelete
  6. @கடம்பவன குயில்
    //இரண்டு தடவைகள் படித்தால்தான் எனக்கு புரியுமென்று நினைக்கிறேன். அப்புறமா திரும்ப ஒரு தடவை படித்து புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். உங்கள் அலசலுக்கு வாழ்ததுக்கள்.//

    படு மொக்கன்னு சிம்போலிக்கா சொல்றாரோ?

    ReplyDelete
  7. @meyyappanram
    //antony boss vikram sir vida ve matinga pola enna vazhka da ithu//

    மன்னிச்சிடுங்க நண்பரே, டமேசு ரொம்ப ஜாஸ்தி. இனிமே அவர கலாய்கிறத விட்டிர்றோம்.

    ReplyDelete
  8. @Yoga.s.FR

    //பொந்துல கை வச்சிட்டீங்க,இல்ல இல்ல தேன் கூட்டில கல்லெறிஞ்சுட்டீங்க,எங்க போயி முடியப் போகுதோ?//

    என்னண்ணே எதோ பெரிய வார்த்தயெல்லாம் சொல்றீங்க, ஆனா தேன்கூட்டுல கை வச்ச கதைதான், தேனி கொட்டாம தேனெடுக்க ட்ரை பண்ணுறம்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்!!